மாத சம்பளதாரர்களுக்கு ஏற்ற திட்டங்கள்.. ரூ.500க்குள் சிறந்தது.. ஜியோ Vs வீ Vs ஏர்டெல்..!

தொலைத்தொடர்பு துறையில் ரிலையன்ஸ் ஜியோவின் வருகைக்கு பின்னர், பலத்த போட்டிகளுக்கு மத்தியில் வாடிக்கையாளர்களுக்கு பல ரீசார்ஜ் திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இது வாடிக்கையாளர்களுக்கு பல சலுகைகளுடன் ரீசார்ஜ் திட்டங்களை அளிக்க வழிவகுத்துள்ளது.

ஏனெனில் ஜியோவின் போட்டியை சமாளிக்க ஏர்டெல், வோடபோன் ஐடியா உள்ளிட்ட நிறுவனங்களும் பல திட்டங்களை அறிவித்து வருகின்றன.

அந்த வகையில் இந்த மூன்று நிறுவனங்களிலும் 500 ரூபாய்க்கு கீழ் உள்ள சிறந்த பிரீபெய்டு திட்டங்களை பற்றித் தான் பார்க்க விருக்கிறோம்.

சிறந்த ரீசார்ஜ் திட்டங்கள்

சிறந்த ரீசார்ஜ் திட்டங்கள்

பொதுவாக இந்த மாதிரியான திட்டங்கள் மாத சம்பளதாரர்களுக்கு ஏற்ற ஒரு திட்டமாக உள்ளது. இந்தியாவில் உள்ள அனைத்து தொலைத் தொடர்பு ஆப்ரேட்டர்களும் வரம்பற்ற தரவு மற்றும் அழைப்புத் திட்டங்களை வழங்குகிறார்கள். இருப்பினும், ஒவ்வொன்றும் ஒவ்வொரு சலுகையை வழங்குகின்றன. ஆக அதில் எது சிறந்தது. என்ன சலுகை, வேலிடிட்டி என்ன? வாருங்கள் பார்க்கலாம்.

ஏர்டெல் ரீசார்ஜ் திட்டங்கள்

ஏர்டெல் ரீசார்ஜ் திட்டங்கள்

ஏர்டெல் நிறுவனம் 500 ரூபாய்க்குள் வழங்கும் ஒரு சிறந்த ரீசார்ஜ் திட்டம் 448 ரூபாய் திட்டமாகும். இதில் தினசரி 3ஜிபி டேட்டாவினை வழங்குகிறது. வரம்பற்ற கால் சேவை, தினசரி 100 இலவச எஸ் எம் எஸ் வழங்கப்படுகிறது. இது தவிர டிஸ்னி + ஹாட்ஸ்டார் விஐபி சந்தாவும் இலவசமாக பெற முடியும். இதோடு பாஸ்டேக்கில் 150 கேஷ்பேக் மற்றும் விங்க் மியூசிக் மற்றும் ஹலோ டியூன்ஸ் உள்ளிட்ட சலுகைகளும் உண்டு. ஆக மாத சம்பளதாரர்களுக்கு ஏற்ற ஒரு சிறந்த ரீசார்ஜ் திட்டமாக இது பார்க்கப்படுகிறது.

ஜியோவின் சிறந்த திட்டங்கள்

ஜியோவின் சிறந்த திட்டங்கள்

ஜியோவில் 500 ரூபாய்க்கு கீழாக இரண்டு சிறந்த ரீசார்ஜ் திட்டங்கள் உள்ளன. ஒன்று 444 ரூபாய் திட்டம். இந்த 444 ரூபாய் திட்டமானது 56 நாட்களுக்கு வேலிடிட்டியை கொண்டுள்ளது. இந்த திட்டத்தில் தினசரி 2 ஜிபி டேட்டாவும், அன்லிமிடெட் கால் சேவையும், அதோடு தினசரி 100 இலவச எஸ் எம் எஸ் என பல சலுகைகள் உண்டு. அதனுடன் ஜியோ ஆப் சந்தாவும் இலவசம்.

ஜியோவின் ரூ.401 திட்டம்

ஜியோவின் ரூ.401 திட்டம்

ஜியோவின் மற்றொரு சலுகையானது 444 திட்டத்துடன் ஒப்பிடும்போது, இந்த திட்டத்திலும் சில சலுகைகளுடன் அளிக்கப்படுகிறது. இந்த திட்டத்தில் தினசரி 3ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. கூடுதலாக 6 ஜிபி அதிவேக டேட்டா, இதனுடன் 1 வருட டிஸ்னி + ஹாட் ஸ்டார் விஐபி சந்தாவும் வழங்குகிறது. எனினும் 28 நாட்கள் வேலிடிட்டியை கொண்டுள்ளது.

வீ-யின் ரீசார்ஜ் திட்டங்கள்

வீ-யின் ரீசார்ஜ் திட்டங்கள்

வோடபோனிலும் 500 ரூபாய்க்குள் இரு திட்டங்கள் உள்ளன. ஒன்று 449 ரூபாய் மதிப்பிலான ரீசார்ஜ் திட்டம். இந்த திட்டத்தில் ஒரு நாளைக்கு 4ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. அன்லிமிடெட் கால், தினசரி 100 இலவச எஸ்எம்எஸ்-கள் வழங்கப்படுகின்றன. இதோடு வார இறுதி டேட்டா மாற்றம் சேவையும் உண்டு, இந்த திட்டம் 84 நாட்கள் வேலிடிட்டியை கொண்டது. இந்த திட்டத்தின் மூலம் நீங்கள் 336 ஜிபி டேட்டாவினை பெற்றுக் கொள்ளலாம்.

வீயின் 401 ரூபாய் திட்டத்தில் என்ன சலுகை?

வீயின் 401 ரூபாய் திட்டத்தில் என்ன சலுகை?

இந்த திட்டத்தில் மொத்தம் 90 ஜிபி டேட்டா சலுகை கிடைக்கும். அன்லிமிடெட் டேட்டா, 100 இலவச எஸ் எம் எஸ் -கள் கிடைக்கும். அதோடு வீ மூவிஸ், ஜீ டிவியின் ஒரு வருட சந்தாவும் கிடைக்கும். இந்த திட்டம் 28 நாட்கள் வேலிடிட்டிட்யை கொண்டுள்ளது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+