தமிழ்நாட்டில் இருந்து புது பிஸ்னஸை தொடங்கிய முகேஷ் அம்பானி.. 20 ரூபாய் பிளான் கை கொடுக்குமா?

இந்தியாவின் முன்னணி தொழில் குழுமமான முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், நாட்டின் FMCG சந்தையில் தனது ஆதிக்கத்தை நிலைநிறுத்தும் வகையில் புதிய பிஸ்னஸை தொடங்கியுள்ளது. அதுவும் தமிழ்நாட்டில் இருந்து இது தொடங்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் தற்போது பால் பொருட்கள் மற்றும் குளிர்பான சந்தையில் Ready-to-drink Dairy பொருட்கள் விற்பனை அதிகரித்து வருகிறது. இந்த சந்தையில் ரிலையன்ஸ் குழுமம் அதிகாரப்பூர்வமாக கால் பதித்துள்ளது. ரிலையன்ஸ் நிறுவனத்தின் எஃப்எம்சிஜி பிரிவான ரிலையன்ஸ் கன்சூமர் ப்ராடக்ட்ஸ் லிமிடெட் புதிதாக ஜாய்லேண்ட் (Joyland) என்ற பெயரில் Flavoured Milk வகைகளை அறிமுகப்படுத்தியுள்ளது.

தமிழ்நாட்டில் இருந்து புது பிஸ்னஸை தொடங்கிய முகேஷ் அம்பானி.. 20 ரூபாய் பிளான் கை கொடுக்குமா?

இந்த புதிய தயாரிப்பு முதற்கட்டமாக தமிழகத்தில் மட்டுமே விற்பனைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. இதன் மூலம் ரிலையன்ஸின் புதிய பிஸ்னஸுக்கான தொடக்க களமாக தமிழ்நாட்டு சந்தை அமைந்துள்ளது. தமிழ்நாட்டை தொடர்ந்து இந்தியாவின் பிற மாநிலங்களுக்கும் படிப்படியாக இந்த தயாரிப்பு விரிவுபடுத்தப்படும் என ரிலையன்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.

நடுத்தர குடும்பங்களை சேர்ந்த வாடிக்கையாளர்களை கவரும் வகையில், ஒரு பாக்கெட் ஜாய்லேண்ட் பால் வெறும் 20 ரூபாய் என்ற குறைந்த விலையில் விற்கப்படுகிறது. முதல் கட்டமாக இது ஸ்ட்ராபெரி ,வெனிலா ஆகிய இரண்டு பிரபலமான சுவைகளில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. தூய்மையான பால் சார்ந்த மூலப்பொருட்களை கொண்டு இது தயாரிக்கப்படுவதாக ரிலையன்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. இது குறித்து ரிலையன்ஸ் கன்சூமர் ப்ராடக்ட்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் இயக்குநர் டி. கிருஷ்ண்குமார் அளித்த பேட்டியில், எதிர்காலத்தில் ஜாய்லேண்ட் பிராண்டின் கீழ் மேலும் பல புதிய சுவைகளையும், பல்வேறு பால் சார்ந்த பானங்களும் அறிமுகப்படுத்தும் திட்டமிட்டுள்ளது என கூறினார்.

Also Read

ரிலையன்ஸின் இந்த வருகை, இந்தியாவின் ரெடி-டு-டிரிங்க் பால் சந்தையில் பெரும் போட்டியினை உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே சந்தையில் பல ஆண்டுகளாக ஆதிக்கம் செலுத்திவரும் அமுல் , ஐ.டி.சி , மதர் டெய்ரி ,நந்தினி மற்றும் கேவின்ஸ் போன்ற முன்னணி நிறுவனங்களுக்கு இது நேரடியான மற்றும் பலத்த போட்டியாக அமையும்.

Recommended For You

இந்தியாவில் ரெடி-டு-டிரிங்க் சுவை பால் மற்றும் பால் சார்ந்த பானங்களின் சந்தை தொடர்ச்சியாக மிக வேகமாக வளர்ந்து வருகிறது. 2021-ஆம் ஆண்டில் தோராயமாக 4,420 கோடி ரூபாயாக இருந்த இந்த சந்தை, 2026-ஆம் ஆண்டில் சுமார் 8,360 கோடி ரூபாயை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஏற்கனவே கோகோ கோலா மற்றும் பெப்சி போன்ற உலகளாவிய ஜாம்பவான்களுக்கு எதிராக 'கேம்பா கோலா' (Campa Cola) பானத்தை 10 ரூபாய் என்ற விலையில் அறிமுகப்படுத்தி மிகப்பெரிய சந்தை மாற்றத்தை ரிலையன்ஸ் ஏற்படுத்தியது. அதேபோன்று, வியூகத்தையே இந்த தயாரிப்பிலும் ரிலையன்ஸ் கையில் எடுத்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+