பாலிவுட்டை வளைத்து போட முடிவு செய்த முகேஷ் அம்பானி.. 'பெரிய' தலையுடன் டீலிங்..!!

ஆசியாவின் மிகப்பெரிய பணக்காரராக இருக்கும் முகேஷ் அம்பானி தலைமை வகிக்கும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் (RIL), திரைப்பட தயாரிப்பில் ஏற்கனவே ஜியோ ஸ்டூடியோஸ் என்ற பெயரில் தனி நிறுவனத்தை வைத்துக்கொண்டு இயங்கி வந்தாலும், இத்துறையில் போதுமான நிபுணத்துவம் இல்லாத காரணத்தால் பெரிய அளவிலான வெற்றி பெற முடியவில்லை.

ஏற்கனவே அம்பானி குடும்பமும், பாலிவுடன் பிரபலங்களும் பின்னிபிணைந்து இருக்கும் வேளையில், திரைப்பட தயாரிப்பில் அதிரடியாக களமிறங்கவும், இத்துறையில் தனது இருப்பை வலுப்படுத்தும் நோக்கில், பிரபல பாலிவுட் தயாரிப்பு நிறுவனமான Dharma Productions-ல் பங்கு வாங்கும் முயற்சியில் இறங்கியுள்ளதாக தெரிகிறது.

பாலிவுட்டை வளைத்து போட முடிவு செய்த முகேஷ் அம்பானி.. 'பெரிய' தலையுடன் டீலிங்..!!

தென்னிந்தியாவின் பல வெற்றித்திரைப்படங்களை ஹிந்தி மார்க்கெட்டில் கொண்டு செல்லும் முக்கியமான தயாரிப்பாளராகவும், டிஸ்ட்ரிபியூட்டராகவும் இருக்கும் கரண் ஜோஹர் உருவாக்கிய நிறுவனம் தான் இந்த Dharma Productions. இந்த நிறுவனத்தில் கரண் ஜோஹர் 90.7% பங்குகளையும் மற்றும் அவரது தாயார் ஹிரூ ஜோஹர் 9.24% பங்குகளையும் வைத்துக்கொண்டு இயங்கி வருகிறது.

பாலிவுட்டை வளைத்து போட முடிவு செய்த முகேஷ் அம்பானி.. 'பெரிய' தலையுடன் டீலிங்..!!

இந்த நிறுவனம் பல வெற்றிகரமான பாலிவுட் திரைப்படங்களை தயாரித்துள்ள மிகப்பெரிய பிராண்டாக உள்ளது. இதேபோல் பாலிவுட் சினிமா பிரபலங்களின் வாரிசுகளை சினிமா துறையில் அடுத்தடுத்து அறிமுகம் செய்வதற்காக நெபோடிசம் சார்ந்த குற்றச்சாட்களை அதிகம் எதிர்கொண்டாலும், தொடர்ந்து அதிகப்படியான ஜோஹர்ன வர்த்தகத்தையும், வருவாயும் பெற்று வருகிறது.

பாலிவுட்டை வளைத்து போட முடிவு செய்த முகேஷ் அம்பானி.. 'பெரிய' தலையுடன் டீலிங்..!!

இந்திய திரைப்படத் துறையில் அதிகரிக்கும் தயாரிப்பு செலவுகள், திரையரங்குகளுக்கு மக்களின் வருகை குறைவது, OTT தளங்களின் அதிரடி வளர்ச்சி ஆகியவற்றின் மூலம் பெரும் பாதிப்புகளை எதிர்கொண்டு வரும் வேளையில், பெரிய தயாரிப்பு நிறுவனங்களும் அதிகப்படியான பாதிப்புகளை எதிர்கொண்டு வருகிறது. இதன் வாயிலாக தான் தர்மா ப்ரோடெக்ஷன்ஸ் தற்போது தனது பங்குகளை ரிலையன்ஸ்-க்கு விற்க பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

முகேஷ் அம்பானி தலைமையிலான ரிஸையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்திடம் Jio Studios, Viacom18 Studios, Colosceum Media மற்றும் Balaji-யில் சிறுபான்மை பங்குகள் உடன் இயக்கி வருகிறது. தற்போது இந்த நிறுவனங்களுடன் இணைந்து Dharma Productions-ல் பங்கு வாங்குவது ரிலையன்ஸ் திரைப்படத் தயாரிப்புத் துறையில் பெரும் ஆதிக்கம் செலுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கரண் ஜோஹர்-ன் Dharma Productions, இதற்கு முன்னதாக Saregama-வுடன் பெரும்பான்மை பங்குகளை விற்க பேச்சுவார்த்தை நடத்தியதாக செய்திகள் வெளியாகின, ஆனால் இதில் எவ்விதமான முன்னேற்றமும் இல்லை.

தர்மா ப்ரோடெக்ஷன்ஸ் 2023 ஆம் நிதியாண்டில் வருவாய் கிட்டத்தட்ட நான்கு மடங்கு அதிகரித்து ரூ. 1,040 கோடிக்கு எழுந்தது. இருப்பினும், செலவுகள் ரூ. 1,028 கோடிக்கு 4.5 மடங்கு உயர்ந்ததால், நிகர இலாபம் 59% குறைந்து ரூ.11 கோடிக்கு குறைந்தது. தர்மா ப்ரோடெக்ஷன்ஸ் நிறுவனத்தின் வருவாயில் விநியோக உரிமைகள், டிஜிட்டல், செயற்கைக்கோள் உரிமைகள் மற்றும் இசை ஆகியவற்றிலிருந்து வருவாய் பெற்று வருகிறது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+