முகேஷ் அம்பானி-யின் ரிலையன்ஸ் கன்ஸ்யூமர் ப்ராடக்ட்ஸ் லிமிடெட் (RCPL), இலங்கையின் முன்னாள் கிரிக்கெட் வீரரான முத்தையா முரளிதரனுடன் இணைந்து "ஸ்பின்னர்" என்ற புதிய ஸ்போர்ட்ஸ் டிரிங்க்-ஐ அறிமுகப்படுத்த உள்ளார். முகேஷ் அம்பானி ஏற்கனவே கேம்பா பிராண்ட் மூலம் இந்திய குளிர்பான சந்தையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள முகேஷ் அம்பானி தற்போது ஸ்போர்ட்ஸ் டிரிங்க் பிரிவிலும் இறங்க உள்ளார்.
பொதுவாக ஸ்போர்ட்ஸ் டிரிங்க் என்றால் ஒரு விளையாட்டு வீரரை பிராண்ட் அம்பாசிட்டராக நியமிப்பது வழக்கம், ஆனால் முகேஷ் அம்பானி கொஞ்சம் ஸ்மார்ட்டாக விளையாட்டு வீரரை பார்ட்னராக சேர்த்துள்ளார். இதேபோல் சந்தையில் இருக்கும் பெரும்பாலான ஸ்போர்ட்ஸ் டிரிங்க் விலை அதிகமாக இருக்கும் வேளையில், பட்ஜெட் விலையிலும், மலிவான விலையில் அனைத்து தரப்பினரும் வாங்கும் வகையில் தயாரிக்க முடிவு செய்துள்ளார்.

முத்தையா முரளிதரன் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றதில் இருந்து பிஸ்னஸ்மேனாக மாறியுள்ளார்,இவர் தற்போது சாக்லேட் மற்றும் குளிர்பானத்தை தயாரிக்கும் ஒரு நிறுவனத்தை வைத்துள்ளார். இவருடன் சேர்ந்து தான் தற்போது முகேஷ் அம்பானி ஸ்போர்ட்ஸ் டிரிங்க் அறிமுகம் செய்ய உள்ளார்.
ரிலையன்ஸ் மற்றும் முத்தையா முரளிதரனுக்கு இடையிலான இன்த கூட்டணி, குளிர்பானத்தை உருவாக்குவதோடு மட்டுமல்லாமல், அதன் உற்பத்தி மற்றும் பாட்டிலிங் வரையில் நீடிக்கப்பட்டு உள்ளது.
ஸ்பின்னர் என்ற பெயரில் அறிமுகம் செய்யப்படும் இந்த ஸ்போர்ட்ஸ் டிரிங்க்-ன் உற்பத்தி மற்றும் பாட்டிலிங் பணிகளை மைசூரில் உள்ள முத்தையா பெவரேஜஸ் ஆலையில் நடைபெறும். இந்த ஆலை ஏற்கனவே RCPL-ன் கேம்பா குளிர்பானங்களுக்கான ஒப்பந்தம் அடிப்படையில் பாட்டிலிங் செய்ய கூட்டணி அமைத்துள்ளது. ஏற்கனவே உள்ள கூட்டணி தற்போது ஸ்பின்னர் என்ற ஸ்போர்ட்ஸ் டிரிங்க் உற்பத்தி வரையில் செல்ல உள்ளது.
இந்த புதிய ஸ்பின்னர் என்ற ஸ்போர்ட்ஸ் டிரிங்க் 150ml பாட்டில்களின் விலை ரூ.10 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது கெட்டோரேட் மற்றும் பவரேட் போன்ற பிரபலமான பிராண்டுகளுடன் போட்டிப்போட முடிவு செய்து ரிலையன்ஸ் மற்றும் முத்தையா முரளிதரன் கூட்டணி களத்தில் இறங்கியுள்ளது.
ஸ்பின்னர் குளிர்பானத்துடன் ரிலையன்ஸ் கன்ஸ்யூமர் ப்ராடக்ட்ஸ் நிறுவனம் ஒரு பெரிய திட்டக்தை செயல்படுத்த தயாராகி வருவதாக தெரிகிறது. மேலும் கோடை காலக்திற்குள் இந்தியா முழுவதும் விநியோகம் செய்ய வேண்டும் என முக்கிய இலக்கும் இக்கூட்டணி கொண்டு உள்ளது.
ரெட் புல், ஸ்டிங் மற்றும் தம்ஸ் அப் சார்ஜ் போன்ற எனர்ஜி டிரிங்க் சந்தையில் கணிசமான வளர்ச்சியைப் பார்த்தாலும், இந்தியாவில் ஸ்போர்ட்ஸ் டிரிங்க் வகையில் பெரிய அளவில் யாரும் வர்த்தகத்தை பெற முடியவில்லை. இந்தியாவில் சுமார் ரூ.240 கோடியாக மதிப்பிடப்பட்டுள்ள இந்த சந்தை இக்கூட்டணிக்கு ஜாக்பாட் ஆக மாறும என எதிர்பார்க்கப்படுகிறது.
More From GoodReturns

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

அமெரிக்காவுக்கு சத்தமேயில்லாமல் செக் வைத்த ஈரான்: டாலர் ஆதிக்கத்தை முடக்க சீனா வகுத்த வியூகம்!

முதலிடத்தில் விஜய், இரண்டாமிடத்தில் ஸ்டாலின் – அப்போ எடப்பாடி பழனிசாமி , சீமான்?

அண்டார்டிகாவில் மறைந்து கிடக்கும் தங்கப் புதையல்!! இந்த நாடுகளுக்கெல்லாம் ஜாக்பாட்!!

தங்கம் விலை ஏற்ற இறக்கம் குறித்து கவலையே வேண்டாம்: இப்படி முதலீடு செஞ்சா லாபம் கொட்டும்!!



Click it and Unblock the Notifications