ரஷ்யாவின் தள்ளுபடி கச்சா எண்ணெய்யை பெரிய அளவில் பயன்படுத்தி வரும் இந்தியா, பிப்ரவரி மாதத்தில் யாரும் எதிர்பார்க்காத வகையில் இந்தியாவின் டாப் சப்ளையர் நாடுகளான சவுதி அரேபியா மற்றும் ஈரான் நாடுகளின் மொத்த இறக்குமதியை காட்டிலும் அதிகமாக ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்கியுள்ளது பெரும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.
இந்த நிலையில் ரஷ்யா கச்சா எண்ணெய்-ஐ அதிகம் இறக்குமதி செய்து பெரிய லாபத்தை பார்ப்பது யார் தெரியுமா..?
இரண்டு தனியார் நிறுவனங்கள், அதிலும் முக்கியமாக இதில் ரஷ்ய முதலீட்டில் இயங்கும் நிறுவனமும் உள்ளது.
ரஷ்யா
ரஷ்யா மீது G7 நாடுகள் அதிகளவிலான பொருளாதார தடைகளை விதித்த காரணத்தால், ரஷ்ய அரசு தனது கச்சா எண்ணெய்யை புதிய சந்தையில் விற்பனை செய்ய முடிவு செய்த போது இந்தியா முக்கிய சந்தையாக விளங்கியது.
கச்சா எண்ணெய்
இந்தியா, கச்சா எண்ணெய் தேவைக்கு அதிகளவில் வெளிநாட்டு இறக்குமதிகளை மட்டுமே நம்பியிருக்கும் காரணத்தால் இந்தியாவுக்கு ரஷ்யா கொடுக்கும் டிஸ்கவுன்ட் பெரிய ஜாக்பாட் ஆக உள்ளது. இந்த டிஸ்கவுன்ட் மூலம் பெரிய அளவில் லாபத்தை இந்தியாவில் இரு நிறுவனங்கள் பெற்று வருகிறது.
இறக்குமதி
ரஷ்யாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் ஒட்டுமொத்த கச்சா எண்ணெய்-யில் சுமார் 45 சதவீதத்தை ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் மற்றும் ரஷ்யா முதலீட்டில் இயங்கும் Nayara Energy ஆகிய இரண்டும் பெற்று வருகிறது. ரஷ்ய அரசு தனது டிஸ்கவுன்ட்-ஐ அரசு எண்ணெய் நிறுவனங்களுக்கு மட்டும் அல்லாமல் அனைத்து இந்திய இறக்குமதியாளர்களுக்கும் அளிக்கிறது.
870000 பேரல் கச்சா எண்ணெய்
பிப்ரவரி மாத முடிவுடன் கடந்த 12 மாதத்தில் இந்திய ரஷ்யாவிடம் இருந்து ஒரு நாளுக்கு சராசரியாக 870000 பேரல் கச்சா எண்ணெய் வாங்குகிறது. இது இந்தியாவின் ஒட்டுமொத்த கச்சா எண்ணெய் இறக்குமதியில் சுமார் 20 சதவீதமாகும்.
ரிலையன்ஸ், Nayara Energy
இதன் மூலம் தனியார் நிறுவனங்களான ரிலையன்ஸ், Nayara Energy தினமும் 385000 பேரல் கச்சா எண்ணெய்-ம், இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம், MRPL ஆகியவை இணைந்து 484000 பேரல் கச்சா எண்ணெய்-ஐ ஒரு நாளுக்கு இறக்குமதி செய்யப்படுகிறது.
ஏற்றுமதி
இந்த தள்ளுபடி கச்சா எண்ணெய் மூலம் ரிலையன்ஸ், Nayara Energy பெட்ரோல், டீசல் ஆகியவற்றை சுத்திகரிப்பு செய்து பிரிட்டன் அமெரிக்க நாடுகளுக்கு அதிகளவில் ஏற்றுமதி செய்து வருகிறது. இதனால் தனியார் நிறுவனங்களான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் மற்றும் Nayara Energy அதிகளவிலான லாபத்தை பெறும் என கணிக்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications