சென்னை: உலகிலேயே அதிக அளவு பெட்ரோல், டீசல் பயன்படுத்தக்கூடிய ஒரு நாடாக இந்தியா இருக்கிறது. பெட்ரோல், டீசல் தயாரிக்க தேவையான கச்சா எண்ணெயை இந்தியா வெளிநாடுகளில் இருந்து தான் இறக்குமதி செய்கிறது.
இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை நிலவரங்களை பொறுத்தவரை சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை ஏற்ற இறக்கங்களுக்கு ஏற்ப மாற்றமடைந்து வரும். ஒரு காலத்தில் நாள்தோறும் இந்தியாவில் பெட்ரோல் ,டீசல் விலையில் மாற்றங்கள் இருந்தன. ஆனால் தற்போது அந்த நடைமுறை அமலில் கிடையாது.

இந்தியாவில் பெட்ரோல் விற்பனை: இந்தியாவை பொறுத்தவரை பாரத் பெட்ரோலியம், இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய அரசுக்கு சொந்தமான நிறுவனங்களும் தனியார் துறையில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரிஸ், நயாரா எனர்ஜி உள்ளிட்ட நிறுவனங்களும் கச்சா எண்ணெய் வாங்கி அவற்றை பெட்ரோல் மற்றும் டீசலாக மாற்றி விற்பனை செய்கின்றன. சில்லறை விற்பனையிலும், மொத்த விற்பனையிலும் ஈடுபடுகின்றன.
விலையை குறைத்த ரிலையன்ஸ்: இந்திய சந்தையில் பெட்ரோல் ,டீசல் விற்பனையில் அரசுக்கு சொந்தமான நிறுவனங்களே அதிகம் செலுத்தி வருகின்றன. இருந்தாலும் கடந்த சில மாதங்களாக சில்லறை விற்பனை பிரிவில் பெட்ரோல் டீசல் விற்பனையில் அரசு நிறுவனங்களை பின்னுக்கு தள்ளி தனியார் நிறுவனங்கள் முன்னேறி வருவது தெரிய வந்திருக்கிறது. எக்னாமிக் டைம்ஸ் இது தொடர்பாக வெளியிட்டுள்ள செய்தியில் சர்வதேச கச்சா எண்ணெய் விலை நிலவரத்துக்கு ஏற்ப அரசுக்கு சொந்தமான நிறுவனங்கள் பெட்ரோல் டீசல் விலையை குறைக்காமல் தவிர்க்கும் நிலையில் அந்த வாய்ப்பை பயன்படுத்தி ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், நயாரா ஆகிய நிறுவனங்கள் லாபம் பார்ப்பதாக தெரிவித்துள்ளது.
கச்சா எண்ணெய் விலை 20% சரிவு: சர்வதேச சந்தையில் பார்க்கும்போது கச்சா எண்ணெய் விலை கடந்த ஓராண்டு காலத்தில் சுமார் 20% சரிந்துள்ளது. இதனால் பெட்ரோல் விலை 14% , டீசல் விலை 17% என குறைந்துள்ளது. ஆனால் அரசுக்கு சொந்தமான இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன், பாரத் பெட்ரோலியம், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய நிறுவனங்கள் கச்சா எண்ணெய் விலை குறைந்ததற்கு ஏற்றபடி டீசல் மற்றும் பெட்ரோல் விலையை குறைக்கவில்லை.
விலை குறைப்பு, விற்பனை அதிகரிப்பு: ஆனால் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் மற்றும் நயாரா எனர்ஜி ஆகிய தனியார் நிறுவனங்கள் அரசு நிறுவனங்களை ஒப்பிடும்போது லிட்டருக்கு மூன்று ரூபாய் வரை பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறைத்து விற்பனை செய்கின்றன. இதன் காரணமாக சில்லறை விற்பனை சந்தையில் தனியார் நிறுவனங்கள் தற்போது ஆதிக்கம் செலுத்த தொடங்கிவிட்டன என அந்த செய்தி குறிப்பிடுகிறது. ஏப்ரல் மே மாத காலத்தில் மட்டும் இந்திய சந்தையில் தனியார் நிறுவனங்களின் டீசல் விற்பனை 11. 5% அதிகரித்திருக்கிறது இதற்கு முன்பு 9 %ஆகவே இருந்தது .அதேபோல பெட்ரோல் விற்பனையும் 9%இல் இருந்து 10%ஆக உயர்ந்திருக்கிறது.
அரசு நிறுவனங்கள் ஏன் குறைக்கவில்லை: கச்சா எண்ணெய் விலை குறைந்தாலும் அரசு நிறுவனங்கள் ஏன் பெட்ரோல் டீசல் விலையை குறைக்கவில்லை என்ற சந்தேகம் எழுகிறது. இதற்கு முக்கிய காரணமாக சொல்லப்படுவது எல்பிஜி விற்பனை தான். இந்தியாவில் எல்பிஜி மீதான விலையை அரசுதான் நிர்ணயம் செய்கிறது. ஆனால் சந்தை விலையை விட அரசு நிர்ணயம் செய்யக்கூடிய எல்பிஜி விலைகள் குறைவாக இருக்கின்றன. இதன் காரணமாக இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் ,ஹிந்துஸ்தான் பெட்ரோலியம், பாரத் பெட்ரோலியம் ஆகிய நிறுவனங்கள் 2024-25 ஆம் ஆண்டில் மட்டும் எல்பிஜி விற்பனையின் மூலம் சுமார் 41,266 கோடி நஷ்டம் அடைந்திருக்கின்றன.
இந்த நஷ்டத்தை ஈடு செய்வதற்கு அரசு தரப்பில் எந்த ஒரு நிதியும் வழங்கப்படவில்லை, எனவே இந்த நஷ்டத்தை ஈடு கட்ட வேண்டும் என்பதற்காகவே சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்தாலும் இந்த நிறுவனங்கள் பெட்ரோல் டீசல் விலையை குறைக்காமல் விற்பனை செய்கின்றன என எக்கனாமிக் டைம்ஸ் செய்தி தெரிவிக்கிறது.
More From GoodReturns

நிர்மலா சீதாராமன் எடுத்த 10 ரூபாய் முடிவு.. அடுத்தடுத்து சிக்கல் காத்திருக்கு.. என்னதான் தீர்வு?

பெட்ரோல், டீசல் விலை குறையாது..? மத்திய அரசின் 10 ரூபாய் விலை குறைப்பு பின் இருக்கும் உண்மை..!!

பேருந்து டிக்கெட் கட்டணங்கள் குறைப்பு: எரிபொருளை சேமிக்க பொது போக்குவரத்தை பயன்படுத்த அறிவுரை!!

பெட்ரோல், டீசல் விலை 15 நாட்களுக்கு ஒருமுறை மாறுமா? மதிப்பாய்வு முறையை மாற்றிய அரசு

பெட்ரோல், டீசல் விலை உயர்வு: நயாரா நிறுவன பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டதால் மக்கள் ஷாக்

பெட்ரோல் விலை ரூ.40 வரை உயர வாய்ப்பு? ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்.. மீண்டும் வருகிறதா Oil Bond?

பெட்ரோல், டீசல் விலை குறையுமா? அதிரடியாக வரியை குறைத்த மத்திய அரசு!! வாகன ஓட்டிகளுக்கு குட் நியூஸ்!!

பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு என தகவல் பரப்பினால் சட்ட நடவடிக்கை: மத்திய அரசு கடும் எச்சரிக்கை!!

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!



Click it and Unblock the Notifications