இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தகக் குழுமங்களில் ஒன்றான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் கிளீன் எனர்ஜி பிரிவில் 75,000 கோடி ரூபாய் முதலீட்டுத் திட்டத்துடன் குதித்த நாளில் இருந்து அடுத்தடுத்து பல நிறுவனத்தைக் கைப்பற்றி வருகிறது.
இந்த நிலையில் தற்போது பிரிட்டன் நாட்டைச் சேர்ந்த ஒரு ஸ்பெஷலான நிறுவனத்தை முகேஷ் அம்பானி கைப்பற்றியுள்ளார்.
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் சோலார் கிளை நிறுவனம், சோடியம் ஐயன் பேட்டரி தொழில்நுட்ப நிறுவனமான Faradion-ஐ சுமார் 100 மில்லியன் பவுண்ட் தொகைக்குக் கைப்பற்றியுள்ளது. இதன் மூலம் பேட்டரி தயாரிக்கும் தொழிற்சாலைக்கான தொழில்நுட்பத்தை ரிலையன்ஸ் இலவசமாகப் பெற முடியும்.
Faradion நிறுவனம்
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் கீழ் இருக்கும் ரிலையன்ஸ் நியூ எனர்ஜி சோலார் லிமிடெட் பிரிட்டன் நாட்டைச் சேர்ந்த Faradion என்னும் நிறுவனத்தைத் தனது கடன்களுடன் சேர்த்து மொத்தமாக 94.42 மில்லியன் பவுன்ட் தொகைக்கு 100 சதவீத பங்குகளையும் கைப்பற்ற உள்ளதாக ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளது.
எனர்ஜி ஸ்டோரேஜ் ஜிகா பேக்டரி
பிரிட்டனை தலைமையாகக் கொண்டு இயங்கும் Faradion நிறுவனம் உலகிலேயே முன்னணி பேட்டரி தொழில்நுட்ப நிறுவனமாக விளங்குகிறது, குறிப்பாகச் சோடியம் ஐயன் பேட்டரி தயாரிப்புக்குகான தொழில்நுட்பத்தில் முன்னோடியாக உள்ளது. ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் குஜராத் ஜாம்நகரில் அமைக்கப்பட உள்ள திருபாய் அம்பானி கிரீன் எனர்ஜி ஜிகா காம்பிளெக்ஸ் திட்டத்தில் மிகப்பெரிய எனர்ஜி ஸ்டோரேஜ் ஜிகா பேக்டரி அமைக்க உள்ளது.
முகேஷ் அம்பானி
இந்தத் தொழிற்சாலைக்கு Faradion நிறுவனத்தின் சிறப்பான தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தப்பட உள்ளது. Faradion நிறுவனத்தின் தொழில்நுட்பத்தின் மூலம் சோடியம் பேட்டரியை பாதுகாப்பாகவும், நீண்ட காலம் பயன்படுத்தக் கூடிய, அதன் எனர்ஜி சேமிக்கும் திறன் கொண்ட பேட்டரிகளைக் குறைந்த விலையில் தயாரிக்க முடியும். இது இந்தியச் சந்தையில் மிகப்பெரிய மாற்றத்தைக் கொண்டு வர முடியும் என முகேஷ் அம்பானி தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications