ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் இந்தியாவில் லித்தியம்-ஐயன் பேட்டரி செல்கள் தயாரிக்கும் திட்டத்தை தற்காலிகமாக நிறுத்தியுள்ளது. முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் 2026ல் குஜராத் ஜாம் நகரில் உருவாகி வரும் ஜிகாபேக்டரியில் பேட்டரி உற்பத்தியை தொடங்க திட்டமிட்டிருந்தது. ஆனால் சீன நிறுவனம் எடுத்த முக்கியமான முடிவால் இத்திட்டம் துவங்குவதில் தாமதமாகியுள்ளது.
முகேஷ் அம்பானி எப்படி ஜியோ, ரீடைல் மூலம் புதிய நிதி ஆதாரத்தையும், வர்த்தக பாதையும் உருவாக்கினாரோ அதேபோல் அடுத்தாக குறிவைத்திருந்தது Renewable Energy. உலகம் முழுவதும் கிளீன் எனர்ஜி மீது கவனம் செலுத்தி வரும் வேளையில் ரிலையன்ஸ் இத்துறையில் இறங்குவதற்காக நியூ எனர்ஜி என்ற தனி பிரிவை உருவாகி, இதன் கீழ் 4 பிரிவில் 4 ஜிகாபேக்டரியை உருவாக்க முடிவு செய்தது.
1. சோலார் போட்டோவோல்டாயிக் ஜிகாபேக்டரி, 2. பேட்டரி ஜிகாபேக்டரி 3. எலக்ட்ரோலைசர் ஜிகாபேக்டரி 4. பியூயல் செல் ஜிகாபேக்டரி. இந்த 4 தொழிற்சாலையும் குஜராத் ஜாம் நகரில் சுமார் 5000 ஏக்கர் பரப்பளவில் அமைக்க முடிவு செய்துள்ளது. இதில் பேட்டரி உற்பத்தி திட்டத்திற்கு தற்காலிகமாக நிறுத்தப்பட்டு உள்ளது.

சீன நிறுவனத்துடனான ஒப்பந்தம் தோல்வி
ரிலையன்ஸ் தனது பேட்டரி தயாரிப்பு தொழிற்சாலைக்காக, சீனாவின் லித்தியம் ஐயன் பாஸ்பேட் (LFP) பேட்டரி தொழில்நுட்பத்தை பெற Xiamen Hithium Energy Storage Technology Co. நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடத்தியது. இந்த நிறுவனத்துடன் செய்யப்படும் ஒப்பந்தத்தின் மூலம் தொழில்நுட்ப உரிமம் பெற திட்டமிட்டிருந்தது ரிலையன்ஸ் சாம்ராஜ்ஜியம்.
ஆனால் சீன அரசு முக்கிய துறைகளில் சீன நிறுவனங்கள் வெளிநாட்டுக்கும், வெளிநாட்டு நிறுவனங்களுக்கும் தொழில்நுட்பம் பகிர்வதற்கு விதித்துள்ள கட்டுப்பாடுகளால் Xiamen Hithium நிறுவனம் இந்த ஒப்பந்தத்திலிருந்து விலகியதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த சிக்கலால் ரிலையன்ஸ் பேட்டரி செல் உற்பத்தி தாமதமாகியுள்ளதால், பேட்டரி எனர்ஜி ஸ்டோரேஜ் சிஸ்டம்ஸ் மற்றும் பேட்டரி பேக் உற்பத்தி திட்டம் தற்போது கேள்விக்குறியாய் நிற்கிறது. இந்த தொழிற்சாலை 2026 முதல் இயங்கும் என திட்டமிட்டிருந்த நிலையில் தற்போது இத்திட்டத்திற்கு தற்காலிகமாக முடங்கியுள்ளது.
சீன நிறுவனம் உடனான ஒப்பந்தம் குறித்து நேரடியாக விளக்கம் அளிக்காமல் ரிலையன்ஸ் குழுமத்தின் செய்தி தொடர்பாளர், ரிலையன்ஸ்-ன் renewable energy திட்டத்தில் எவ்விதமான மாற்றமும் இல்லாமல் 2026ல் திட்டமிட்டப்படி துவங்கும். BESS உற்பத்தி, பேட்டரி பேக் உற்பத்தி, சென் உற்பத்தி திட்டத்தில் வேகமாக முன்னேறி வருகிறோம் என தெரிவித்தார்.
பங்கு மதிப்பு சரிவு
இந்த தகவல் வெளியான பிறகு ரிலையன்ஸ் பங்கு விலை மும்பை பங்குச் சந்தையில் காலை வர்த்தகம் துவங்கி சில நமிடத்தில் 1.3 சதவீதம் வரை சரிந்த இதன் பங்கு விலை 1451 ரூபாய்க்கு குறைந்தது. இதனால் இந்த ஆண்டு பங்கு விலை 7 சதவீதம் குறைந்துள்ளது.
ஆனால் 12 மணிக்கு மேல் மீண்டும் உயரும் பாதைக்கு திரும்பியுள்ளது, ரிலையன்ஸ் பங்குகள் தற்போது வெறும் 0.68 சதவீத சரிவுடன் 1465 ரூபாய் அளவில் உள்ளது.
ரிலையன்ஸ் சாம்ராஜ்ஜியத்தின் வருவாயில் பெரும்பகுதி பெட்ரோலிய சுத்திகரிப்பு மற்றும் நுகர்வோர் தொழில்களிலிருந்து வருவதால், இந்த தாமதம் ரிலையன்ஸ் சாம்ராஜ்ஜியத்தின் நிதி பாதிப்பை ஏற்படுத்த வாய்ப்பு மிகவும் குறைவு.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!



Click it and Unblock the Notifications