முகேஷ் அம்பானி டெலிகாம் மற்றும் டிஜிட்டல் சேவை பிரிவான ரிலையன்ஸ் ஜியோ இன்போகாம் நிறுவனத்தை ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் குழுமத்திலிருந்து தனியாகப் பிரித்து இந்தியப் பங்குச்சந்தையில் பட்டியலிடாமல் வெளிநாட்டுப் பங்குச்சந்தையில் பட்டியலிடப் போவதாக ஏற்கனவே தமிழ் குட்ரிட்டன்ஸ் தளத்தில் செய்தியை வெளியிட்டு இருந்தோம். தற்போது கிட்டதட்ட உண்மையாகியுள்ளது என்று தான் சொல்ல வேண்டும்.
Recommended Video
ரிலையன்ஸ் ஜியோ சேவைகள் முழுமையாக வெளி வருவதற்கு முன்னதாகவே பங்குகளை விற்பனை செய்தி பெரிய அளவிலான முதலீட்டை ஈர்த்துள்ள நிலையில் பெரும் முதலீட்டு நிறுவனங்கள் மற்றும் டெக் நிறுவனங்கள் மத்தியில் ரிலையன்ஸ் ஜியோ மீதான ஆர்வம் அதிகரித்துள்ளது.
வெள்ளிக்கிழமை காலையில் கூட மைக்ரோசாப்ட், டிவிட்டர், அபுதாபி அரசு முதலீட்டு நிறுவனமான Mubadala ஆகிய 3 நிறுவனங்களும் கிட்டதட்ட 4 பில்லியன் டாலர் அளவிலான தொகையை முதலீடு செய்யப் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
2021
முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் ஜியோ தொடர்ந்து பங்குகளை விற்பனை செய்து முதலீட்டை ஈர்த்து வரும் நிலையில், இந்தப் பணிகள் அனைத்தும் 2020ஆம் ஆண்டின் 3வது காலாண்டுக்குள் முடிவடைந்துவிடும் எனத் தெரிகிறது.
இதன் பின்பு 2021ஆம் ஆண்டின் முதல் 6 மாதத்தில் வெளிநாட்டுப் பங்குச்சந்தையில் ரிலையன்ஸ் ஜியோ இன்போகாம் நிறுவனத்தைப் பட்டியலிட உள்ளதாகத் தகவல் கிடைத்துள்ளது.
எந்த நாட்டில் தெரியுமா..?
ரிலையன்ஸ் ஜியோ இந்திய பங்குச்சந்தையில் பட்டியலிடவில்லை என்பதே இந்திய முதலீட்டாளர்களுக்குச் சோகமான செய்தியாக அமைந்திருந்தாலும், வேறு வழியில்லாமல் ஏற்றுக்கொள்ள வேண்டியுள்ளது. அதே வேளையில் ஜியோ எந்த நாட்டுப் பங்குச்சந்தையில் பட்டியலிடத் திட்டமிட்டுள்ளது என்பதையும் தெரிந்துகொள்ள ஆர்வமாக இருக்கும் நிலையில் அதற்கான விடை கிடைத்துள்ளது.
2021ஆம் ஆண்டில் ரிலையன்ஸ் ஜியோ இன்போகாம் அமெரிக்கப் பங்குச்சந்தையில் பட்டியலிட உள்ளதாக நம்ப தகுந்த தகவல்கள் கிடைத்துள்ளது.
முக்கிய அமைப்புகள்
ரிலையன்ஸ் ஜியோ இன்போகாம் நிறுவனத்தை அமெரிக்கப் பங்குச்சந்தையில் பட்டியலிடுவதற்காக ரிலையன்ஸ் நிறுவனத்திடம் மோர்கன் ஸ்டான்லி மற்றும் கோல்டுமேன் சாச்சிஸ் ஆகிய இரு நிறுவனங்கள் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
ஜியோ மதிப்பு
ரிலையன்ஸ் முக்கிய அதிகாரிகள் முக்கிய முதலீட்டாளர்கள் மற்றும் வங்கி அமைப்புகளைச் சந்திக்கப் பிப்ரவரி மாதம் அமெரிக்கா சென்றுள்ளது. இதன் பின்பு தான் தற்போது நடைபெற்ற முதலீடுகள் அனைத்தும் நடந்துள்ளதாகத் தெரிகிறது.
மேலும் இந்த முதலீடுகள் வாயிலாக ஜியோ இன்போகாம் அமெரிக்கப் பங்குச்சந்தையில் பட்டியலிடும் போது 90 முதல் 95 பில்லியன் டாலர் வரையிலான மதிப்பீட்டைப் பெற்று இருக்கும் எனத் தெரிகிறது.
அமெரிக்கப் பங்குச்சந்தை
பொதுவாக வெளிநாட்டு நிறுவனங்கள் அமெரிக்கப் பங்குச்சந்தையில் பட்டியலிட அதிகப்படியான கட்டுப்பாடுகள், தகுதிகள், ஆய்வுகள் செய்யப்படுவது வழக்கம். ஆகையால் ஜியோ ஐபிஓ-வில் இறங்குவது என்பது விரைவில் நடக்கக் கூடியது இல்லை. மேலும் ஜியோ-வுக்கு உடனடியாக நிதி தேவையும் இல்லை.
மேலும் அமெரிக்கப் பங்குச்சந்தையில் ஜியோ பட்டியலிடப்படும் அதைக் காலகட்டத்தில் ரிலையன்ஸ் கடன் இல்லா நிறுவனமாக மாறிவிடும்.


Click it and Unblock the Notifications