மும்பை: ரிலையன்ஸ் குழுமத்தை சேர்ந்த அனில் அம்பானிக்கு சொந்தமான நிறுவனத்தின் பங்கு மதிப்பு மீண்டும் உயர்ந்து வருகிறது. இதனால் அனில் அம்பானி மீண்டும் பழைய நிலைக்கு திரும்புகிறாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
ரிலையன்ஸ் குழுமத்தை இந்தியாவில் நிறுவிய திருபாய் அம்பானியின் மகன்கள் அனில் அம்பானி மற்றும் முகேஷ் அம்பானி. இவர்களில் தற்போது முகேஷ் அம்பானி தொழிலில் கொடி கட்டி பறக்கிறார். இவரது சகோதரர் அனில் அம்பானியும் ஒரு காலத்தில் இதே செல்வாக்குடன் இருந்தவர் தான்.

அனில் அம்பானி உலகின் ஆறாவது பெரிய பணக்காரராக இருந்தவர். அவரது சொத்து மதிப்பு 1.83 லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் இருந்தது. ஒரு வணிக சாம்ராஜ்யத்தையே அவர் நிறுவியிருந்தார். ஆனால் பின்னாளில் அது பெரும் வீழ்ச்சி கண்டது. சில ஆண்டுகளுக்கு முன்பு அனில் அம்பானி திவாலாகி விட்டதாக அறிவித்தார்.
இந்த நிலையில் அனில் அம்பானிக்கு சொந்தமான ரிலையன்ஸ் பவர் லிமிடெட் நிறுவனத்தின் பங்குகள் கடந்த சில நாட்களாக உயர்ந்து வருகிறது. ரிலையன்ஸ் பவர் நிறுவனத்தின் பங்குகள் தொடர்ந்து மூன்று நாட்களாக பங்குச்சந்தையில் அப்பர் சர்க்யூட் நிலையை எட்டின.
மும்பை பங்குச்சந்தை வெளியிட்டுள்ள தகவலின் படி அனில் அம்பானிக்கு சொந்தமான ரிலையன்ஸ் பவர் நிறுவனத்தின் பங்குகள் மார்ச் 18, 19 மற்றும் 20 ஆகிய தேதிகளில் அப்பர் சர்க்யூட்டில் வர்த்தகமாகின.
ரிலையன்ஸ் பவர் மற்றும் ரிலையன்ஸ் இன்ஃபிராஸ்டிரக்சர் நிறுவனம் ஐசிஐசிஐ வங்கியுடன் இருந்த கடன் பிரச்னையை தீர்த்துள்ளது. மும்பை பங்குச்சந்தையில் தாக்கல் செய்த ஆவணத்தில் ரிலையன்ஸ் பவர் நிறுவனம் இதனை தெரிவித்துள்ளது. இதனை அடுத்து நிறுவனத்தின் பங்குகள் சற்றே அதிகரிக்க தொடங்கியுள்ளன.
ரிலையன்ஸ் பவர் லிமிடெட் நிறுவனம் 1995 ஆம் ஆண்டு திருபாய் அம்பானியால் நிறுவப்பட்டது. முதலில் பாவனா பவர் பிரைவேட் லிமிடெட் என்ற பெயரில் தொடங்கப்பட்ட இந்த நிறுவனம் பின்னர் ரிலையன்ஸ் டெல்லி பவர் லிமிடெட் என்றும், 2004 ஆம் ஆண்டு ரிலையன்ஸ் எனர்ஜி ஜெனரேஷன் லிமிடெட் என்றும் பெயர் மாற்றப்பட்டது. இறுதியாக 2007 ஆம் ஆண்டு ரிலையன்ஸ் பவர் லிமிடெட் என மாற்றப்பட்டது.
ரிலையன்ஸ் பவர் லிமிடெட் நிறுவனத்தின் ஐபிஓ 2008ஆம் ஆண்டு வெளியிடப்பட்டு ஒரே நிமிடத்தில் முழுவதுமாக சப்ஸ்கிரைப் செய்யப்பட்டது.
ரிலையன்ஸ் பவர் நிறுவனத்தின் பங்குகள் 2008 ஆம் ஆண்டு ரூ.260 என இருந்த நிலையில் நிறுவனத்தின் வீழ்ச்சியை தொடர்ந்து வெறும் ஒரு ரூபாய் என குறைந்தது இந்த நிலையில் தொடர்ந்து மூன்று நாட்களாக இந்த நிறுவனத்தின் பங்குகள் 5% என அப்பர் சர்க்யூட்டை எட்டியுள்ளன .
ரிலையன்ஸ் பவர் லிமிடெட் நிறுவனத்தின் பங்கு மதிப்பு கடந்த ஒரு வார காலத்தில் மட்டும் 8.6% அதிகரித்துள்ளது. மார்ச் 20ஆம் தேதியிலும் இந்த பங்கு ரூ. 23.90 என்ற அப்பர் சர்க்யூட் நிலையை எட்டியது.
ரிலையன்ஸ் பவர் லிமிடெட் நிறுவனத்தின் பங்குகளை பொறுத்த வரை 64% சில்லறை முதலீட்டாளர்கள் வசமும் புரமோட்டர்களிடம் 24.49 % உள்ளது. வெளிநாட்டு நிறுவனங்கள் 8. 37% பங்குகளையும் மற்ற உள்ளூர் நிறுவனங்கள் 2. 95% பங்குகளையும் கொண்டுள்ளன. எனவே அனில் அம்பானி மீண்டும் பழைய நிலைக்கு திரும்புகிறாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
Story Written by: Devika
More From GoodReturns

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

தங்கம் வாங்க இது நல்ல நேரமா? திங்கட்கிழமை அதிரப்போகும் விலை! நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயம்?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!

ரூ.10 கோடியை ரூ.100 கோடியாக மாற்றிய நடிகை மீனா..!! செம ஐடியாவா இருக்கே..!!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!

போனது போகட்டும்!! நாளை தமிழ் புத்தாண்டு நாளில் இதை எல்லாம் தொடங்குங்க வாழ்க்கை செமயா மாறும்!!

தமிழ்நாட்டில் விவசாயம் செய்யும் மாதவன்!! தரிசு நிலத்தை தென்னந்தோப்பாக மாற்றி சாதனை!!

கடந்த ஆண்டு அட்சய திருதியை-இல் ஒரு சவரன் நகை வாங்கி இருந்தால் இன்று அதன் மதிப்பு என்ன தெரியுமா?

ஸ்டாலினை விட விஜய்க்கு தான் போட்டி அதிகம்!! பரபரக்கும் தமிழக சட்டமன்ற தேர்தல் களம்!!



Click it and Unblock the Notifications