FMCG பிரிவில் ரிலையன்ஸ் ரீடைல் பிற முன்னணி நிறுவனங்களை போலவே சொந்தமாக பொருட்களை தயாரித்து விற்பனை செய்ய திட்டமிட்டு பல வருடங்களாக தீவிரமாக பணியாற்றி வருகிறது. இதன் வாயிலாக இந்தியாவில் பெப்சி, கோகோ கோலா போன்ற பெரிய அமெரிக்க நிறுவனங்கள் ஆதிக்கம் செய்யும் துறையில் இறங்க முடிவு செய்தது.
இந்த முறை முகேஷ் அம்பானி புதிய வாடிக்கையாளர்களைப் பிடிக்கக் கையில் எடுத்துள்ள ஆயுதம் Nostalgia.
இந்தியாவில் 1970களில் மற்றும் 1980களில் கொடி கட்டி பறந்த ஒரு முன்னணி கோலா பிராண்டாக இருந்த campa cola தற்போது நாட்டின் சில பகுதிகளில் மட்டுமே இருந்த நிலையில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் சுமார் 22 கோடி ரூபாய்க்கு வாங்கியது.
இந்த நிலையில் தற்போது புத்தம் புதிய வடிவத்தில் ரிலையன்ஸ் அறிமுகம் செய்து அசத்தியுள்ளது.
முகேஷ் அம்பானி
முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் 50 வருடத்திற்கு பின்பு Campa Cola பிராண்ட் பெயரில் புதிய குளிர்பானங்களை ரிலையன்ஸ் ரீடைல் வென்சர்ஸ் அறிமுகம் செய்துள்ளது. இந்திய குளிர்பான சந்தை மிக பெரியது என்பதால் கட்டாயம் பெப்சி, கோகோ கோலா ஆதிக்கத்திற்கு மத்தியில் ரிலையன்ஸ் தனக்கான இடத்தை பிடிக்கும்.
Campa Cola பிராண்ட்
ரிலையன்ஸ் ரீடைல் நிறுவனத்தின் FMCG பிரிவு கோடை கால விற்பனையை மையமாக வைத்து Campa Cola, Campa Lemon மற்றும் Campa Orange ஆகிய 3 சுவைகளில் குளிர்பானங்களை அறிமுகம் செய்துள்ளது.
கோடை காலம்
இந்த கோடை காலத்தில் வெப்பம் நிலை மிகவும் அதிகமாக இருக்கும் என கணிக்கப்பட்டு இருக்கும் நிலையில் குளிர்பானங்களின் விற்பனை கட்டாயம் அதிகரிக்கும். இந்த வாய்ப்பை பணமாக்க முடிவு செய்து ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் Campa Cola பிராண்ட்-ஐ அறிமுகப்படுத்தியது.
வடிவம்
Campa Cola பிராண்ட் குளிர்பானங்களை அனைத்து தரப்பு மக்களும், அனைத்து நிகழ்வுகளுக்கும் வாங்க வேண்டும் என திட்டமிட்டு அறிமுகம் 200 மில்லி, 500 மில்லி, 600 மில்லி, 1 லிட்டர் , 2 லிட்டர் பேகேஜ்-களில் அறிமுகம் செய்துள்ள
குளிர்பான பிராண்டான Sosyo Hajoori
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் Campa Cola பிராண்டை போலவே மற்றொரு குளிர்பான பிராண்டான Sosyo Hajoori-ஐ வாங்கியுள்ளது. இதன் அறிமுக தேதி குறித்து எவ்விதமான அறிவிப்பை வெளியிடவில்லை என்றாலும், ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் இருந்து இந்தியா முழுவதும் அறிமுகம் செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது.
FMCG பிரிவு
இதுமட்டும் FMCG பிரிவில் ரிலையன்ஸ் லோட்டர் சாக்லேட் பிராண்டையும், இலங்கையில் பிரபலமாக இருக்கும் Maliban என்னும் பிஸ்கட் பிராண்டையும் வாங்கியுள்ளது. இதோடு Independence மற்றும் Good Life ஆகிய பிராண்ட் பெயரில் வீட்டுக்கு தேவையான பொருட்களை விற்பனை செய்து வருகிறது.
போட்டி
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் இந்தியாவில் 110 பில்லியன் டாலர் மதிப்பிலான FMCG துறையில் இறங்கியது மட்டும் அல்லாமல் ஆரம்பத்திலேயே ஹிந்துஸ்தான் யூனிலீவர், நெஸ்லே, பிரிட்டானியா ஆகிய பிராண்டுகள் உடன் போட்டிப்போட தயாராகியுள்ளது.
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் கொரோனா தொற்று காலத்தில் இருந்து அதிகப்படியான முதலீடுகளை திரட்டி தொடர்ந்து முதலீடு செய்து அசத்தி வருகிறது. முகேஷ் அம்பானி தனது முழு கவனத்தையும் நியூ எனர்ஜி துறை மீது திருப்பியிருந்தாலும் ரிலையன்ஸ் சாம்ராஜ்ஜியம் நிதிநிலையில் தொடர்ந்து வலிமையாக இருக்க ரிலையன்ஸ் ரீடைல் மற்றும் ரிலையன்ஸ் ஜியோ தனது வர்த்தகத்தை விரிவாக்கம் செய்து வருகிறது.
More From GoodReturns

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

165 ஆண்டுகளில் இல்லாத தரமான சம்பவத்தை செய்த டிரம்ப்..!! வாயடைத்துப்போன எதிர்க்கட்சியினர்..!!



Click it and Unblock the Notifications