மும்பை: இந்தியாவில் வேகமாக வளர்ச்சி அடைந்து வரும் துறையாக குவிக் காமர்ஸ் இருக்கிறது. பிளிங்கிட், ஸெப்டோ, ஸ்விக்கி இன்ஸ்டாமார்ட் உள்ளிட்ட குவிக் காமர்ஸ் நிறுவனங்கள் இந்திய சந்தையில் மிகப்பெரிய லாபத்தை கண்டு வருகின்றன.
முகேஷ் அம்பானி விரைவில் குவிக் காமர்ஸ் துறையிலும் கால் பதிக்க திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. முகேஷ் அம்பானிக்கு சொந்தமான ரிலையன்ஸ் ரீடெய்ல் நிறுவனம் குவிக் காமர்ஸ் துறையில் கால் பதிப்பது தொடர்பான திட்ட பணிகளில் ஈடுபட்டு இருப்பதாக செய்தி வெளிவந்துள்ளது.

இது தொடர்பாக எக்னாமிக் டைம்ஸ் வெளியிட்டுள்ள செய்தி அடிப்படையில் ரிலையன்ஸ் நிறுவனம் ஏற்கனவே தங்களுடைய ஜியோ மார்ட் செயலி வாயிலாக நவிமும்பை மற்றும் பெங்களூரு ஆகிய பகுதிகளில் சோதனை ஓட்டமாக குவிக் காமர்ஸ் சேவையை வழங்கி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒருவேளை ரிலையன்ஸ் நிறுவனம் குவிக் காமர்ஸ் பிரிவில் கால் பதித்தால் அது தற்போது இந்த துறையில் முன்னணி நிறுவனங்களாக இருக்கக்கூடிய ஸெப்டோ, பிளிங்கிட் ஆகிய நிறுவனங்களுக்கு பெரிய சவாலாக இருக்கும் என சொல்லப்படுகிறது.
கூடிய விரைவில் ரிலையன்ஸ் ரீடெய்ல் நிறுவனம் தங்களுடைய ஜியோ மார்ட் குவிக் காமர்ஸ் சேவையை நாடு முழுவதும் அமல்படுத்துவதற்கு திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. முதல் கட்டமாக மளிகை சாமான்களை டெலிவரி செய்யும் சேவைகளை ரிலையன்ஸ் ரீடெய்ல் வழங்க முடிவு செய்துள்ளது.
படிப்படியாக ஆடை மற்றும் ஆபரணங்கள், மின்னணு சாதனங்கள் ,ஸ்மார்ட் போன், லேப்டாப் உள்ளிட்டவற்றையும் குவிக் காமர்ஸ் முறையில் டெலிவரி செய்வதற்கு திட்டமிட்டுள்ளது. பிளிங்கிட் உள்ளிட்ட நிறுவனங்கள் ஆங்காங்கே டார்க் ஸ்டோர் எனப்படும் கிடங்குகளை அமைத்து அங்க இருந்து சரக்குகளை வாடிக்கையாளர்களுக்கு டெலிவரி செய்து வருகின்றன.
ஆனால் ரிலையன்ஸ் நிறுவனத்தை பொருத்தவரை புதிதாக இதுபோன்ற கிடங்குகளை அமைக்க வேண்டிய தேவை இல்லை. ஏனெனில் ரிலையன்ஸ் நிறுவனம் ஏற்கனவே விரிவான ரீடெய்ல் நெட்வொர்க்கை கொண்டிருக்கிறது.
ரிலையன்ஸ் டிஜிட்டல், ட்ரெண்ட்ஸ் மற்றும் ரிலையன்ஸ் ஃபிரஸ், ஜியோ மார்ட் உள்ளிட்ட கடைகள் வாயிலாகவே ரிலையன்ஸ் தங்களுடைய குவிக் காமர்ஸ் சேவையை எளிதாக கொண்டு வர முடியும். வாடிக்கையாளர்கள் ஆர்டர் செய்த பொருட்களை 10 முதல் 15 நிமிடங்களுக்குள்ளாகவே டெலிவரி செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் ரிலையன்ஸ் தற்போது சோதனை செய்து வருவது வெளிவந்துள்ளது.
அது மட்டும் இன்றி ரிலையன்ஸ் நிறுவனம் டெலிவரி கட்டணம், பிளாட்பார்ம் கட்டணம் உள்ளிட்டவற்றை முழுவதுமாக ரத்து செய்து பொருட்களுக்கான விலையை மட்டுமே கட்டணமாக நிர்ணயம் செய்யும் என கூறப்படுகிறது.
இவ்வாறு ஒரு பெரிய திட்டத்துடன் ரிலையன்ஸ் களமிறங்கினால் அது ஸெப்டோ, இன்ஸ்டாமார்ட் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். நடப்பு ஆண்டு முடிவதற்குள்ளே ரிலையன்ஸ் நிறுவனம் தங்களுடைய குவிக் காமர்ஸ் செயலியை செயல்பாட்டுக்கு கொண்டு வர இருப்பதாகவும் நாடு முழுவதும் 1150 நகரங்களில் 5,000 பின்கோடுகளுக்கு சேவை செய்ய திட்டமிட்டு இருப்பதாகவும் தெரிகிறது.
Written by: Devika
More From GoodReturns

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை: மதுரையில் அதிரடி சரிவு! மார்ச் 23, 2026 நிலவரம் மற்றும் எதிர்கால கணிப்புகள் வெளியானது

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

எங்க கிட்ட பேச்சே கிடையாது..!! டிரம்ப் மூக்கை உடைக்கும் அளவுக்கு பதில் கொடுத்த ஈரான்..!

தங்கம் - வெள்ளி விலையில் கனவிலும் நினைக்காத விஷயம் நடத்திருக்கு.. 23 நாளில் நடந்த மெகா மேஜிக்..!!



Click it and Unblock the Notifications