இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தக சாம்ராஜ்ஜியமாக உயர்ந்துள்ள ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்குகள் இன்று அதிரடியான உயர்வைப் பதிவு செய்தது மட்டும் அல்லாமல் மும்பை பங்குச்சந்தையில் சுமார் 500 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகள் கைமாறி முக்கிய நிறுவனமாக உயர்ந்துள்ளது.
இன்றைய வர்த்தக முடிவில் முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்குகள் அதிரடியாக 11.60 சதவீதம் உயர்ந்து ஒரு பங்கு விலை 1300 ரூபாய் என்ற விலையில் முடிந்துள்ளது.

இந்நிறுவனத்தின் 52 வார உச்ச விலை 1,611.80 ரூபாயாக உள்ளது குறிப்பிடத்தக்கது. ரிலையன்ஸ் பங்குகளைத் தொடர்ந்து இந்தியப் பங்குச்சந்தையில் ஐபிஓ வெளியிட்டு அசத்திய ஜியோ பிளாட்பார்ம்ஸ் காலை வர்த்தகத்தில் அதிரடியாக 3 சதவீதம் வரையில் உயர்ந்து ஒரு பங்கு விலை 1,475 ரூபாய் அளவீட்டைத் தொட்டாலும், தொடர்ந்து சரிவு பாதையிலேயே இருந்தது, வர்த்தகம் முடியும் நேரத்தில் 0.50 சதவீதம் சரிந்து மீண்டும் 0.26 சதவீத உயர்வுடன் 1,435 ரூபாய் விலையில் முடிந்தது.
இதேபோல் ஜியோ பைனான்சியல் பங்குகள் காலை வர்த்தகம் துவங்கியதில் இருந்து தொடர்ந்து உயர்வுடன் இருக்கும் காரணத்தால் மாலை வர்த்தகம் முடிந்த பின்பு 4.28 சதவீதம் என்ற உச்ச அளவிலான உயர்வைப் பதிவு செய்தது குறிப்பிடத்தக்கது.
இன்றைய வர்த்தகத்தில் ரிலையன்ஸ் குழும பங்குகளான டென் நெட்வொர்க்ஸ் 1.3 சதவீதம், ஜிடிபிஎல் ஹேத்வே 0.1 சதவீதம், ஹேத்வே 1.4 சதவீதம், இன்போமீடியா 5.3 சதவீதம், ஜஸ்ட்டயல் 2.9 சதவீதம், நெட்வொர்க்18 5.6 சதவீதம், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரியல் இன்பரா 2.8 சதவீதம் வரையில் உயர்ந்துள்ளது.
இன்றைய அதிரடியான உயர்வுக்கு அடித்தளமிட்டது ரிலையன்ஸ் குழுமத்தின் காலாண்டு முடிவுகள் தான், செப்டம்பர் காலாண்டில் யாரும் எதிர்பார்க்காத வண்ணம் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் குழுமத்தின் மொத்த லாபம் வருடாந்திர அடிப்படையில் 41 சதவீதம் உயர்ந்துள்ளது.
இதன் மூலம் கடந்த ஆண்டு பதிவு செய்த 18,165 கோடி ரூபாயுடன் ஒப்பிடுகையில் 25,548 கோடி ரூபாயாக பதிவாகியுள்ளது. இதேபோல் வருவாய் என்பது 2,58 லட்சம் கோடி ரூபாயில் இருந்து 3.32 லட்சம் கோடி ரூபாயாக உள்ளது. மேலும் EBITDA அளவு 68 சதவீதம் உயர்ந்து 15,008 கோடி ரூபாயில் இருந்து 25,203 கோடி ரூபாயாக உள்ளது.
ரிலையன்ஸ் குழுமத்தின் லாபம், வருவாய், EBITDA அளவுகள் அதிரடியாக உயர்வதற்கு மிக முக்கியமான காரணம் கச்சா எண்ணெய் விலை உயர்வு மூலம் ஏற்றுமதி செய்யப்பட்ட எரிபொருளின் வருவாய் உயர்வு மூலம் ஜாக்பாட் அடித்துள்ளது.


Click it and Unblock the Notifications

