இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தக சாம்ராஜ்ஜியமாக இருக்கும் முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்குகள், ஜியோ பைனான்சியல் சர்வீசஸ் டிமெர்ஜர் ஆன நாளில் இருந்து அதிகப்படியான தடுமாற்றத்தை எதிர்கொண்டு வந்துள்ளது. இதற்கு மத்தியில் கேகேஆர், கத்தார் இன்வெஸ்ட்மென்ட் அத்தாரி நிறுவனத்திடம் ரிலையன்ஸ் ரீடைல் முதலீட்டை பெற்றாலும் ரிலையன்ஸ் பங்குகளின் தடுமாற்றம் குறையவில்லை.
இந்த நிலையில் இன்று காலை வர்த்தகம் துவங்கும் போதே 2 சதவீதத்திற்கும் அதிகமான சரிவுடன் துவங்கிய ரிலையன்ஸ் பங்குகள், தொடர்ந்து சரிவு பாதையிலேயே இருந்து வருகிறது. இன்றைய வர்த்தகத்தில் பிளாக் டீல் வாயிலாக சுமார் 2 கோடி பங்குகள் 2,375.05 ரூபாய் விலையில் கைமாறியது, இதன் மதிப்பு மட்டும் 4,512 கோடி ரூபாய்.

இதன் மூலம் இன்றைய வர்த்தகத்தில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்குகள் யாரும் எதிர்பார்க்காத வகையில் சுமார் 2,361.60 ரூபாய் வரையில் சரிந்து 3 மாத சரிவை எட்டியது. புதன்கிழமை நடந்த பிளாக் டீல் விற்பனையில் யார் இந்த பங்ககுளை வாங்கினார், யார் விற்றார் என்பது இதுவரையில் தெரியவில்லை.
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்குகள் ஜூலை மாதத்தில் இருந்து தொடர்ந்து சரிந்து வருவது மட்டும் அல்லாமல், கடந்த ஒரு மாதத்தில் 5.42 சதவீதம் வரையில் சரிந்து பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. இதன் மூலம் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் குழுமத்தின் சந்தை மதிப்பு 16.16 லட்சம் கோடி ரூபாயாக சரிந்துள்ளது.
இந்த தடுமாற்றத்தில் முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பில் 50000 கோடி ரூபாய் என்பதில் பெரிய ஓட்டை விழுந்துள்ளது. சந்தை முதலீட்டு வல்லுனர்கள் பொருத்த வரையில் இது JFS டிமெர்ஜர் மூலம் ஏற்படும் சிறிய கரெக்ஷன் தான் என்றும், நீண்ட கால அடிப்படையில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்குகள் மீது அதிகப்படியான நம்பிக்கை உள்ளதாக தெரிவித்துள்ளனர்.

இதனால் முதலீட்டாளர்கள் இந்த தடுமாற்றத்தை Buy on Dip முறையில் பயன்படுத்திக்கொள்ள முடியும் எனவும் சந்தை முதலீட்டு வல்லுனர்கள் ரீடைல் முதலீட்டாளர்களுக்கு அறிவுறுத்துகின்றனர். 2 மணியளவில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்குகள் 2.30 சதவீதம் சரிந்து 2,379.00 ரூபாய் விலையில் வர்த்தகமாகி வருகிறது.
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தற்போது 4 முனையில் தனது வர்த்தகத்தை விரிவாக்கம் செய்து வருகிறது. ரிலையன்ஸ் ரீடைல், ரிலையன்ஸ் ஜியோ, ரிலையன்ஸ் நியூ எனர்ஜி, ரிலையன்ஸ் O2C பிரிவில் பல்வேறு விரிவாக்க பணிகள் நடந்து வருகிறது. இந்த முயற்சிகள் சாதகமாக மாறும்பட்சத்தில் அடித்த 5 வருடத்தில் ரிலையன்ஸ் முதலீட்டாளர்கள் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும்.
More From GoodReturns

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி!! சென்செக்ஸ் 1000 புள்ளிகளுக்கு மேல் வீழ்ச்சி!!

4 வார ஈரான் போர்.. தரைமட்டத்திற்கு வந்த டெக் பங்குகள்.. அமெரிக்க அலறல்..!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!



Click it and Unblock the Notifications