ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் சாம்ராஜ்ஜியத்தின் 2.0 வளர்ச்சி பாதையில் மிகவும் முக்கியமானது நியூ எனர்ஜி துறை, இத்துறைக்காக குஜராத் ஜாம்நகரில் சுமார் 4 ஜிகாஃபேக்டரியை முகேஷ் அம்பானி கட்டமைக்க பல ஆயிரம் கோடி ரூபாய் முதலீட்டை செய்துள்ளார்.
இதில் முக்கியமான சோலார் போட்டோவோல்டாயிக் ஜிகாஃபேக்டரியின் கட்டுமான பணிகள் வேகமாக நடந்து வரும் வேளையில் விரைவில் திறக்கப்பட உள்ளது. ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் குழுமம் சுமார் 20 ஜிகாவாட் திறன் கொண்ட போட்டோவோல்டாயிங் ஜிகாஃபேக்டரியை அமைக்க முடிவு செய்தது.

இதில் 5 ஜிகாவாட் திறன் கொண்ட தளம் முடியும் தருவாயில் இருக்கும் காரணத்தால் இதை மார்ச் 2024 ஆம் ஆண்டுக்குள் இயக்க திட்டமிடப்பட்டு வருகிறது. இந்த போட்டோவோல்டாயிக் ஜிகா ஃபேக்டரி 4 கட்டங்களாக கட்டி முடிக்க திட்டமிடப்பட்ட நிலையில் முதல் கட்டம் 5ஜிகாவாட் திட்டம் முடிக்கப்பட உள்ளது.
2026 ஆம் ஆண்டுக்குள் 10, 15, 20 என மொத்தம் 20 ஜிகாவாட் திறன் கொண்ட போட்டோவோல்டாயிங் ஜிகாஃபேக்டரியை கட்டமைக்க முடிவு செய்யப்பட்டது. முதல் கட்டம் 5ஜிகாவாட் தொழிற்சாலையில் ரிலையன்ஸ் தனது சோலார் PV மற்றும் மாடியூல்-களை REC தொழில்நுட்பத்தில் தயாரிக்க உள்ளது.
சோலார் PV மற்றும் மாடியூல்களை தயாரிக்க வேண்டும் என்பதாலும், இதில் ரிலையனஸ்-க்கு முன் அனுபவம் இல்லாத காரணத்தாலும் நார்வே நாட்டின் REC SOLAR நிறுவனத்தை 2021 ஆம் ஆண்டில் சுமார் 771 மில்லியன் டாலர் அதாவது 5800 கோடி ரூபாய்க்கு Reliance New Energy Solar நிறுவனத்தின் வாயிலாக கைப்பற்றியது.

REC SOLAR நிறுவனத்திடம் அதிதிறன் கொண்ட சோலார் பேனல் தயாரிக்கும் Heterojunction டெக்னாலஜி (HJT) உள்ளது, இது மட்டும் அல்லாமல் இந்த சிறப்பு தொழில்நுட்ப திறனை 2026 ஆம் ஆண்டுக்குள் 26 சதவீதம் அதிகரிக்க இலக்கு நிர்ணயம் செய்துள்ளது.
மேலும் ரிலையன்ஸ் சீனாவின் Suzhou Maxwell Technologies நிறுனத்திடம் இருந்து HJT செல்களை அதி விரைவாகவும், வேகமாகவும் தயாரிக்கும் உற்பத்தி தளத்தை வாங்க ஒப்பந்தம் செய்துள்ளது. தற்போது 4.8 ஜிகாவாட் தளத்திற்கு மட்டுமே வாங்கப்பட்டு உள்ளது.


Click it and Unblock the Notifications