அமெரிக்கா பங்குகளை விடுங்க.. அதை விட நம்ம ரிலையன்ஸ் பெர்பார்மன்ஸ பாருங்க..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்திய பங்கு சந்தையில் முக்கிய பங்காக இருக்கும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் பங்கு விலையானது, இந்த நெருக்கடியான நேரத்திலும் கூட 164% வளர்ச்சி கண்டுள்ளது.

 

அதோடு அதன் சந்தை மதிப்பில் இந்தியாவின் மிகப்பெரிய நிறுவனமாக உருவெடுத்துள்ளது. இதில் கவனிக்கதக்க விஷயம் என்னவெனில், கடந்த மார்ச் 23, 2020 வரை, சென்செக்ஸ் மிகப் பெரிய வீழ்ச்சியைக் கண்டது. இந்த பெரிய வீழ்ச்சிக்குப் பின், சென்செக்ஸ் மெல்ல ஏற்றம் கண்டு, இன்று 39,000 புள்ளிகள் தொட்டு வர்த்தகம் நிறைவடைந்து இருக்கிறது. இதே காலத்தில் அமெரிக்காவின் எஸ் & பி 500 பங்கு சந்தையோடு ஒப்பிடுகையில், FAANG என்று அழைக்கப்படும் 5 கம்பெனி பங்குகள், எஸ் & பி 500ல் 22 சதவீதம் தான் பங்கு வகித்துள்ளன.

அமெரிக்கா பங்குகளை விடுங்க.. அதை விட நம்ம ரிலையன்ஸ் பெர்பார்மன்ஸ பாருங்க..!

ஆசியாவின் மிகப்பெரிய பணக்காரராக இருக்கும் முகேஷ் அம்பானிக்கு சொந்தமான எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனத்தின் சந்தை மதிப்பு, கிட்டத்தட்ட இரு மடங்கு அதிகரித்து 200 பில்லியன் டாலரைத் தொட்டுள்ளது. ரிலையன்ஸ் கம்பெனியின் டிஜிட்டல் மற்றும் இ-காமர்ஸ் நிறுவனங்களில், அதிகளவிலான முதலீடுகள் வந்தது, ரிலையன்ஸ் நிறுவனத்தின் சந்தை மதிப்பு அதிகரிக்க பெரியளவிலான உந்துதலை கொடுத்தது.

ரிலையன்ஸ் நிறுவன பங்குகளுக்கு, தற்போது சென்செக்ஸ் குறியீட்டில் 17 % வெயிட்டேஜ் உள்ளது. முந்தைய ஆண்டில் இதே ரிலையன்ஸ் பங்கின் வெயிட்டேஜ் 10 சதவிகிதமாக இருந்தது. ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் இந்த வெயிட்டேஜ் ஏற்றம், ஆக்டிவ் மியூச்சுவல் ஃபண்டுகளுக்கும் சிக்கலாகி விட்டது. ஏனெனில் ஒரு பங்கினை வைத்திருப்பதற்கான ஒழுங்குமுறை வரம்பினை எட்டியுள்ளது. எனவே, ஃபண்ட் மேனேஜர்கள், ரிலையன்ஸ் போன்ற உயரும் பங்குகளைச் சேர்க்க முடியாது. ஆகவே இது சந்தையினை மீண்டும் அழுத்தத்திற்கு தள்ளலாம் என கோடக் அசெட் மேனேஜ்மென்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது.
அமெரிக்காவின் மிகப்பெரிய நிறுவனமான ஆப்பிள் கம்பெனியின் சந்தை மதிப்பானது 2 டிரில்லியன் டாலரை தொட்டுள்ளது. ஆப்பிள் கம்பெனி, மார்ச் 2020 பங்குச் சந்தை சரிவில் இருந்து, அமெரிக்காவின் எஸ்&பி 500 குறியீட்டின் ஏற்றத்துக்கு 11% பங்களித்துள்ளது.

 

அதனைத் தொடர்ந்து மைக்ரோசாப்ட் நிறுவனம், அமேசான் நிறுவனம், பேஸ்புக் இன்க், நெட்பிளிக்ஸ் இன்க் போன்ற கம்பெனிகள் பங்களித்து இருக்கின்றன.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Reliance stock is perform well in Indian market, when compare with US market

Reliance stock is perform well in Indian market, when compare with US market
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X