2025ஆம் ஆண்டு முதலீட்டு சந்தையில் பல ஏற்ற இறக்கம் இருந்த காரணத்தால் பல முன்னணி நிறுவனங்களும் தனது சந்தை மதிப்பீட்டிலும், பங்கு விலையிலும் தடுமாற்றத்தை கண்டன. ஆனால் இந்தியவின் பெரும் பணக்காரராக இருக்கும் முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தடைகளை கடந்து 2025ஆம் ஆண்டில் பெரும் வெற்றியை பதிவு செய்துள்ளது.
2025ஆம் ஆண்டின் இறுதிக்கு வந்திருக்கும் நிலையில் இந்த ஆண்டு சிறப்பாக செயல்பட்ட நிறுவன பங்குகள் குறித்த ஆய்வில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் மாணிக்கமாக ஜொலிக்கிறது என்றால் மிகையில்லை. தங்கம் ஒரு கிராம் 13000 ரூபாய்க்கு உயர்ந்து 50 சதவீதம் உயர்ந்து ஷாக் கொடுக்கும் இதேவேளையில் ரிலையன்ஸ் பங்குகள் 1500 ரூபாய் விலையில் 26 சதவீதத்திற்கும் அதிகப்படியான லாபத்தை முதலீட்டாளர்களுக்கு கொடுத்து அசத்தியுள்ளது.

இந்தியாவின் மிகப்பெரிய சந்தை மதிப்பு கொண்டுள்ள நிறுவனமான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் 2020 கோவிட் காலத்திற்குப் பிறகு தொடர்ந்து வலுவான வளர்ச்சியை பதிவு செய்து வருவதால் முதலீட்டாளர்களுக்கு தொடர்ந்து லாபத்தை அள்ளித்தரும் நிறுவனங்களில் முக்கியமானதாக விளங்குகிறது.
2025ஆம் ஆண்டில் அதாவது ஜனவரி 1 முதல் முகேஷ் அம்பானி குடும்பத்தின் கட்டுப்பாட்டில் இயங்கும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீல் பங்குகள் சுமார் 26 சதவீதத்துக்கும் மேல் உயர்ந்து, இந்த ஆண்டில் மட்டும் சுமார் ரூ.4.4 லட்சம் கோடி மதிப்பிலான சந்தை மதிப்பைச் சேர்த்துள்ளது. இதன் மூலம் இப்போது ரிலையன்ஸ் ரூ.21 லட்சம் கோடி என்ற சந்தை மதிப்புடன் மாஸ் காட்டி வருகிறது
வெள்ளிக்கிழமை வர்த்தகத்தில் மும்பை பங்குச்சந்தையில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்குகள் ரூ.1,557.95 என்ற 52 வார உச்சத்தைத் தொட்டது. ஆனால் வாரத்தின் முதல் நாளான இன்று ரிலையன்ஸ் பங்குகள் 0.65 சதவீதம் சரிந்து 1536.60 ரூபாய் அளவில் உள்ளது.
உள்நாட்டு, வெளிநாட்டு காரணிகளால் இந்திய பங்குச்சந்தை இந்த ஆண்டு பெரும் தடுமாற்றத்தை பதிவு செய்து வந்த நிலையில் முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் மட்டும் எப்படி இந்த 26 சதவீத பங்கு விலை உயர்வுடனும், 4.4 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான சந்தை மதிப்பீட்டை சேர்த்தது..? இதற்கு 3 முக்கிய காரணங்கள் இருக்கிறது.
ஜியோவின் ஐபிஓ எதிர்பார்ப்பு
ரிலையன்ஸ் சாம்ராஜ்ஜியத்தின் மிக முக்கியமான பிரிவாக மாறியிருக்கும் டெலிகாம் பிரிவான ரிலையன்ஸ் ஜியோ-வின் ஐபிஓ திட்டம் முதலீட்டாளர்களை ஈர்க்கும் முக்கிய காரணியாக உள்ளது. ஜெஃப்ரீஸ் நிறுவனம் ஜியோ நிறுவன மதிப்பை 180 பில்லியன் டாலராக உயர்த்தியுள்ளது. இதேபோல் 2026-2028 நிதியாண்டு காலத்தில் வருவாய் 18 சதவீதமும், EBITDA 21 சதவீதமும் CAGR அடிப்படையில் வளரும் என்று கணித்துள்ளது.
இதோடு மொபைல் கட்டண உயர்வு, ஃபிக்ஸ்ட் வயர்லெஸ் அக்சஸ் (FWA) பிரிவில் ஹோம் பிராட்பேண்ட் வளர்ச்சி, என்டர்பிரைஸ் வர்த்தக விரிவாக்கம், டெக் ஸ்டாக் மானிடைசேஷன் ஆகியவை நீண்ட கால அடிப்படையில் ரிலையன்ஸ்-க்கு பெரும் லாபத்தை கொடுக்கும் எனவும் கணிக்கப்பட்டு உள்ளது. இதற்கு மத்தியில் ரிலையன்ஸ் நிர்வாகம் 2026ஆம் ஆண்டில் முதல் பாதியில் ஐபிஓ வெளியிட திட்டமிட்டு வருகிறது. இது பெரிய அளவிலான வெற்றியை பதிவு செய்யும் என நம்பிக்கை முதலீட்டாளர்களுக்கு இருக்கும் காரணத்தால் தொடர்ந்து முதலீடு செய்து பங்கு விலையும், சந்தை மதிப்பும் உயர காரணமாக அமைந்துள்ளது.
O2C பிரிவின் வளர்ச்சி
ரிலையன்ஸ் சாம்ராஜ்ஜியத்தின் அடித்தளமாக இருக்கும் கச்சா எண்ணெய் டூ கெமிக்கல் (O2C) துறை நீண்ட காலமாக அழுத்தத்தை சந்தித்தாலும், இப்போது வலுவான வளர்ச்சியை காட்டி வருகிறது. ஆசிய வர்த்தக சந்தையில் ரிஃபைனிங் மார்ஜின்கள் பெரிய அளவில் வளர்ச்சி அடைந்துள்ளது.
இதேவேளையில் இந்நிறுவனத்தின் டீசல், ஜெட் ஃப்யூல், பெட்ரோல்-க்கான தேவை உள்நாட்டிலும் சரி, வெளிநாட்டிலும் சரி தொடர்ந்து அதிகரித்து, பிரிவின் வர்த்தகம் அதிகரித்துள்ளது. இதேபோல் ரஷ்யாவின் டிஸ்கவுன்ட் எண்ணெய் இதன் மார்ஜின் உயர்வுக்கு உதவியுள்ளது.
ரிலையன்ஸ்-ன் O2C பிரிவின் மொத்த வர்த்தகத்தில் போக்குவரத்து எரிபொருள் வர்த்தகம் மட்டுமே 66 சதவீத பங்கீட்டை வகிக்கிறது. இதேவேளையில் ஜெட் எரிபொருளுக்கான தேவையும், Heating Oil-க்கான தேவையும் அதிகரித்துள்ளது. இதன் முலம் UBS வெளியிட்டுள்ள கணிப்பில் O2C பிரிவின் EBITDA அளவு 2026ஆம் நிதியாண்டின் முதல் அரையாண்டில் ரூ.295 பில்லியனில் 2வது அடையாண்டில் ரூ.340 பில்லியனாக உயரும் என தெரிவித்துல்ளது. இதை தொடர்ந்து 2027ஆம் நிதியாண்டில் ரூ.648 பில்லியனாக இருக்கும் என்று கணிக்கிறது. இதனால் 'பை' ரேட்டிங் உடன் ரூ.1,820 டார்கெட் விலையை UBS பரிந்துரைக்கிறது.
ரிலையன்ஸ் ரீடைல்
ரீடைல் துறை ரிலையன்ஸ்-க்கு மற்றொரு மதிப்பை திறக்கும் சாவியாக உள்ளது. FMCG வர்த்தக வளர்ச்சி, பல பிரிவில் ரீடைல் வர்த்தக விரிவாக்கம் ஆகியவை ரிலையன்ஸ் ரீடைல் வர்த்தகத்திற்கு பெரும் வாய்ப்பை கொடுத்துள்ளது. ஜெஃப்ரீஸ், ஜேபி மார்கன் போன்ற நிறுவனங்கள் ரீடைல் வளர்ச்சியை RIL பங்கின் அடுத்த உயர்வுக்கு காரணமாகக் குறிப்பிடுகின்றன.
இவை அனைத்தும் தான் ரிலையன்ஸ் பங்குகள் இந்த ஆண்டு 4.4 பில்லியன் டாலர் சந்தை மதிப்பை பெற முக்கிய காரணமாக அமைந்துள்ளது. இதேபோல் ரிலையன்ஸ் சாம்ராஜ்ஜியத்திற்கு டெலிகாம் மற்றும் ரீடைல் முக்கிய வசூல் வேட்டையாகவும், வளர்ச்சி அடைவதற்கான வாய்ப்புகளை அதிகம் கொண்டுள்ள பிரிவாக உள்ளது.
இதை தாண்டில் ரிலையன்ஸ் தற்போது கிரீன் எனர்ஜி, பேட்டரி, சோலார் என பல பசுமை திட்டங்களில் பணியாற்றி வருகிறது. இவை அனைத்தும் அடுத்தக்கட்ட வளர்ச்சிக்கு முக்கிய காரணமாக இருக்கப்போகிறது எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.
More From GoodReturns

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

LPG தட்டுப்பாடு: காலை 5 மணி முதல் காத்திருந்தாலும் கேஸ் இல்லை!! பெங்களூருவில் மோசமாகும் சூழல்!!



Click it and Unblock the Notifications