முகேஷ் அம்பானிக்கு சொந்தமான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், அமெரிக்காவைச் சேர்ந்த AI மற்றும் கேமிங் சிப் தயாரிப்பு நிறுவனமான என்விடியா (Nvidia) உடன் இணைந்து, இந்தியாவுக்கான சொந்த large language model அதாவது ChatGPT, BARD போன்ற ஜெனரேட்டிவ் AI மாடலின் அடித்தளத்தை உருவாக்க உள்ளது.
இந்தியாவில் பயன்படுத்தும் பல்வேறு மொழிகளில் பயிற்சியளிக்கப்பட்டு AI பயன்பாடுகளுக்கு ஏற்றவாறு வடிவமைக்கப்படுவது தான் இக்கூட்டணியின் சிறப்பு. ரிலையன்ஸ் ஜியோ கடந்த வருடாந்திர கூட்டத்தில் AI துறையில் இறங்குவது குறித்து தெரிவித்தது.

இந்த கூட்டணி குறித்த வெளியிடப்பட்ட அறிக்கையில், AI உள்கட்டமைப்பை உருவாக்க ரிலையன்ஸ் உடன் என்விடியா இணைந்து செயல்படும் என்று தெரிவித்துள்ளது. சிப் தயாரிப்பாளர் அதன் GH200 Grace Hopper Superchip மற்றும் DGX Cloud-ஐ பயன்படுத்த அனுமதி அளிக்கப்பட உள்ளது.
இந்தியாவில் அளவு, தரவு மற்றும் திறமை உள்ளது. மிகவும் மேம்பட்ட AI கம்ப்யூட்டிங் உள்கட்டமைப்புடன், ரிலையன்ஸ் அதன் சொந்த large language model உருவாக்க முடியும், இது இந்தியாவில் தயாரிக்கப்பட்ட AI பயன்பாடுகளை இந்திய மக்களுக்காக உருவாக்குகிறது என்று Nvidia இன் நிறுவனர் மற்றும் CEO ஜென்சன் ஹுவாங் கூறினார்.
இந்த வாரத்தின் துவக்கத்தில் Nvidia இன் நிறுவனர் மற்றும் CEO ஜென்சன் ஹுவாங் இந்தியா வந்து பிரதமர் மோடியை சந்தித்தார். இந்த சந்திப்பு மூலம் உலகின் முன்னணி AI சிப் மற்றும் GPU உற்பத்தியாளரான NVIDIA, இந்தியாவில் ஒரு உற்பத்தி ஆலையைத் திறப்பது குறித்து பரிசீலித்து வருகிறதா என்ற கேள்வி எழுந்தது. ஆனால் NVIDIA சொந்தமாக சிப் தயாரிப்பது இல்லை, TSMC நிறுவனம் தான் தனது அனைத்து சிப்புகளை தயாரிக்கிறது.


Click it and Unblock the Notifications