சோஹாப்பூர்: ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் தலைவரான முகேஷ் அம்பானி மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள சோஹாப்பூர் பகுதியில் 1000 கோடி ரூபாயை முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளார்.
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் கோல் பெட் மீத்தேன் எனப்படும் சிபிஎம் Coal Bed Methane (CBM) வாயுவை உற்பத்தி செய்து விற்பனை செய்து வருகிறது. தற்போது இதன் சிபிஎம் வாயு உற்பத்தி அளவு குறைந்துவிட்டது. இதனை அடுத்து மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள சோஹாப்பூர் பகுதியில் மீத்தேன் எடுக்க ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு செய்வதற்கு ரிலையன்ஸ் நிறுவனம் முடிவு செய்துள்ளது.

சிபிஎம் என்பது நிலக்கரி அடுக்குகளில் சிக்கி உள்ள ஒரு வகையான இயற்கை எரிவாயு ஆகும். நிலக்கரி அடுக்குகளில் கிணறுகளை கொண்டு துளை இடுவதன் மூலம் பிரித்து எடுக்கப்படுகிறது. இந்த வாயு என்பது கம்ப்ரஸ்ட் நேச்சுரல் கேஸ் அதாவது சிஎன்ஜி வடிவத்தில் பல்வேறு வீட்டு மற்றும் தொழில்முறை நோக்கங்களுக்காக பயன்படுத்தப்படுகிறது. சோஹாப்பூர் பகுதியில் சிபிஎம் பிளாக்குகளை ஒப்பந்தம் பெறுவதற்கான பணிகளில் முகேஷ் அம்பானி நிறுவனம் ஈடுபட்டுள்ளது.
அடுத்த மூன்று ஆண்டுகளுக்குள் தங்கள் நிறுவனம் ஒரு நாளைக்கு 1 மில்லியன் ஸ்டாண்டர்ட் கியூபிக் மீட்டர் வாயுவை உற்பத்தி செய்ய வேண்டும் என இலக்கு நிர்ணயம் செய்துள்ளது. ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் தற்போது வைத்திருக்கும் பகுதியில் இருந்து சிபிஎம் வாயு உற்பத்தி குறைந்துள்ளது.
தற்போது ரிலையன்ஸ் நிறுவனம் மத்திய பிரதேச மாநிலத்தில் 995 சதுர கிலோமீட்டர் பகுதிக்கு இரண்டு சிபிஎம் பிளாக்குகளை சொந்தமாக வைத்து இருக்கிறது. ஆனால் கடந்த சில ஆண்டுகளாக இந்த பகுதிகளில் இருந்து சிபிஎம் வாயு உற்பத்தி குறைந்திருப்பதாக ரிலையன்ஸ் நிறுவனம் கூறுகிறது.
இந்த பகுதியில் சுமார் 300 கிணறுகள் அமைக்கப்பட்டு சிபிஎம் வாயு உற்பத்தி செய்யப்படுகிறது. கடந்த 2024 ஆம் நிதி ஆண்டில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் ஒரு நாளைக்கு 0.64 மில்லியன் ஸ்டாண்டர்ட் கியூபிக் மீட்டர் வாயுக்களை உற்பத்தி செய்துள்ளது.
அதற்கு முந்தைய ஆண்டில் 0.73 மில்லியன் ஸ்டாண்டர்ட் கியூபிக் மில்லியன் ஆக இருந்தது .அதற்கு முன்பு 2020ல் இது 1 மில்லியனாக இருந்தது. தற்போது உற்பத்தி குறைந்திருப்பதால் மீண்டும் அதனை 1 மில்லியனாக உயர்த்த, சிபிஎம் வாயு கிடைக்கக்கூடிய இடங்களை கையகப்படுத்த ரிலையன்ஸ் நிறுவனம் முடிவு செய்துள்ளது.
Story written by: Devika


Click it and Unblock the Notifications