முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், அதன் குளிர்பான பிராண்டான கேம்பா கோலாவை மீண்டும் அறிமுகப்படுத்தி இந்திய குளிர்பான சந்தையில் நுழைய தயாராகி வருகிறது . FMCG பிரிவான ரிலையன்ஸ் கன்ஸ்யூமர் புரொடக்ட்ஸ் லிமிடெட் , விரைவில் இந்த தயாரிப்பை அறிமுகப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது கோகோ கோலா மற்றும் பெப்சி கோ போன்ற முக்கிய பிராண்ட்களுடன் போட்டியிடும் என்ற எதிர்பார்ப்பும் நிலவுகிறது.
முகேஷ் அம்பானி இந்த மறு அறிமுகத்தை வெற்றிகரமாக மாற்ற தயாராகி வருகிறார். நிறுவனம் சில்லறை விற்பனையாளர்களுக்கு அதிக லாபத்தை வழங்கவும் திட்டமிட்டுள்ளது. வரலாற்று ரீதியாக, ரிலையன்ஸ் குழுமத்தின் விலை நிர்ணய உத்திகள் அதன் வெற்றிக்கு பெரும் பங்களித்துள்ளன. இதன் காரணமாக மற்ற நிறுவனங்களை அவற்றின் விலை நிர்ணய அணுகுமுறைகளை மறுபரிசீலனை செய்ய தூண்டியுள்ளன.

உள்ளூர் சில்லரை விற்பனையாளர்களின் மார்ஜினை அதிகரிக்கும் வகையில் விலை நிர்ணயம் செய்யப்படவுள்ளது. இந்த அணுகுமுறையின் மூலம் நாடு முழுவதும் கேம்பா கோலா மக்கள் கண்ணில் படும். அதேசமயம் பல இடங்களிலும் இந்த கோலா கிடைக்கும் வகையிலும் இந்த முயற்சி எடுக்கப்பட உள்ளது.
பண்டிகை சீசன் நெருங்கி வருவதால், ரிலையன்ஸ் தனது சந்தைப்படுத்தல் மற்றும் விநியோக முயற்சிகளை அதிகரித்து வருகிறது. மேற்கு வங்காளத்தில் சமீபத்தில் நடந்த துர்க்கா பூஜா கொண்டாட்டங்களின் போது, கேம்பா கோலா அதன் போட்டி விலையின் மூலம் கவனத்தை ஈர்த்தது. கோகோ கோலா மற்றும் பெப்சி தங்கள் 600 மில்லி பாட்டில்களை ரூபாய் 40-க்கு வழங்கியது. ஆனால் அப்போது கேம்பா கோலா தனது 200 மில்லி மற்றும் 500 மில்லி பாட்டில்களை ரூ.10 மற்றும் ரூ.20-க்கு விலை நிர்ணயம் செய்தது.
கேம்பா கோலாவுக்கு நல்ல அறிமுகம் இருந்தபோதிலும், இது கிடைக்கும் தன்மை இன்னும் சில பகுதிகளில் குறைவாக உள்ளது. இருப்பினும், பாட்டிலிங் தொழிற்சாலைகளில் முதலீடு செய்து உற்பத்தி திறனை அதிகரிப்பதில் ரிலையன்ஸ் குழுமம் கவனம் செலுத்துகிறது. ரிலையன்ஸ் கன்ஸ்யூமர் புரொடக்ட்ஸ் லிமிடெட் (RCPL), அதன் முதல் ஆண்டில் 3,000 கோடி விற்பனையை அடைந்தது, உற்பத்தியை அதிகரிக்க ரூபாய் 500 கோடி முதல் ரூபாய் 700 கோடி வரை முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளது.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications