ஆதார் கார்டு ஒருவருக்கு ஒன்று தான் வழங்கப்படுகிறது. எனவே ஆதார் கார்டுடன் ரேஷன் கார்டை இணைக்கும் போது மோசடிகளை வெகுவாக குறைக்க முடியும். உதாரணமாக பலர் இறந்தவர்களுடைய ரேஷன் கார்டை வைத்து பொருட்களை பெற்று வருகின்றனர். இது சட்டப்படி குற்றம். இதுபோன்ற ரேஷன் கார்டுகளை பயன்படுத்துவதை நிறுத்த வேண்டும். இல்லையேல் அந்த ரேஷன் கார்டில் இருந்து இறந்தவருடைய பெயரை நீக்கம் செய்ய வேண்டும். இதுபோன்ற மோசடிகளை தடுப்பதற்காகத்தான் ரேஷன் கார்டு ஆதாருடன் இணைக்கப்பட வேண்டும் என்று கூறப்படுகிறது. இந்தப் பதிவில் எப்படி ரேஷன் கார்டை ஆதாருடன் இணைப்பது? என்பதைப் பார்ப்போம்.
ரேஷன் கார்டு இருந்தால் மட்டுமே ரேஷன் கடைகளில் கிடைக்கும் பொருட்களை பெற முடியும் ரேஷன் கடைகளில் சர்க்கரை, அரிசி போன்றவற்றை அந்த அட்டையில் குறிப்பிடப்பட்டுள்ள நபர்களின் அடிப்படையில் அரசாங்கம் வழங்கி வருகிறது.

பலர் ரேஷன் கார்டுகளைப் பயன்படுத்தி பொருட்களை வாங்கி தாங்களும் பயன்படுத்தாமல் பிறருக்கு விற்று பணம் சம்பாதிக்கின்றனர். இதுபோன்ற விஷயங்களை தடுத்து நிறுத்துவதற்காகவும், தேவைப்படும் நபர்களுக்கு மட்டுமே பொருட்கள் போய் சேரும் வகையிலும் நடவடிக்கை எடுப்பதற்காக ரேஷன் கார்டை ஆதாருடன் இணைப்பதை கட்டாயம் ஆக்கியுள்ளனர். மேலும் இந்த செயல்முறையை செய்வதற்கு செப்டம்பர் 30-ஆம் தேதி வரை காலக்கெடு வழங்கப்பட்டுள்ளது.
ஆன்லைனில் ரேஷன் கார்டுடன் ஆதாரை இணைப்பது எப்படி?
ஆன்லைனில் உங்கள் ரேஷன் கார்டுடன் ஆதாரை இணைப்பதற்கான ஸ்டேப்ஸ்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
ஸ்டேப் 1: உங்கள் மாநிலத்தின் அதிகாரப்பூர்வமான பொது விநியோக அமைப்பின் (PDS) போர்ட்டல் உள்ளே செல்லவும்.
ஸ்டேப் 2: அதில் "Link Aadhaar with Ration Card" எனும் விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும்.
ஸ்டேப் 3: உங்கள் ரேஷன் கார்டின் நம்பர் மற்றும் ஆதார் அட்டையின் நம்பரை என்டர் செய்யவும்.
ஸ்டேப் 4: உங்கள் ஆதார் கார்டுடன் இணைக்கப்பட்டுள்ள மொபைல் நம்பரை அதில் என்டர் செய்து "Send" என்பதைக் கிளிக் செய்யவும்.
ஸ்டேப் 5: அதன் பின் உங்கள் மொபைல் எண்ணுக்கு ஒரு OTP வரும்.
ஸ்டேப் 6: ஆதார்-ரேஷன் இணைப்பு பக்கத்தில் OTP-ஐ என்டர் செய்து உங்களுடைய கோரிக்கையை சமர்ப்பிக்கவும்.
உங்கள் ரேஷன் கார்டை ஆதார் அட்டையுடன் ஆஃப்லைன்னில் இணைப்பதற்கான ஸ்டேப்ஸ்கள்:
ஸ்டேப் 1: உங்கள் உள்ளூர் பொது விநியோக அமைப்பு (PDS) அல்லது உங்கள் ரேஷன் கடைக்குச் செல்லவும்.
ஸ்டேப் 2: உங்கள் வீட்டில் உள்ள அனைத்து உறுப்பினர்களுடைய ஆதார் அட்டையின் ஜெராக்ஸ் மற்றும் ரேஷன் கார்டின் ஜெராக்ஸ் ஆகியவற்றை எடுத்துச் செல்லவும்.
ஸ்டேப் 3: தேவையான ஆவணங்கள் மற்றும் உங்கள் ஆதார் அட்டையின் நகலை, ரேஷன் கடை ஊழியரிடம் சமர்ப்பிக்க வேண்டும்.
ஸ்டேப் 4: இறுதியாக அங்கே கைரேகையை வழங்கவும்.
ஒருவேளை ரேஷன் கார்டுடன், ஆதார் கார்டு இணைக்கப்படவில்லை என்றால் பல விளைவுகள் ஏற்படலாம். அதன்படி மகளிர் உரிமைத் தொகை போன்ற திட்டங்களின் பலன்கள் கிடைக்காமல் போகலாம். பல்வேறு அரசு சேவைகளை பெறுவதற்கும் ரேஷன் கார்டு அடிப்படை. அதிலும் ஏதேனும் சிக்கல்கள் ஏற்படலாம்.இதுபோன்ற சிக்கலை தவிர்ப்பதற்கு காலகெடுவுக்குள் உங்கள் ரேஷன் அட்டை ஆதாருடன் இணைந்து இருப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்.


Click it and Unblock the Notifications