டாடா குழுமத்திற்கு வந்த குட்நியூஸ்.. சந்திரசேகரன் இடத்தில் யாரு..?

இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தக சாம்ராஜ்ஜியமாக இருக்கும் டாடா சன்ஸ் நிறுவனத்தின் வருடாந்திர பொது கூட்டத்தை நடத்த 3 மாத கால அவகசம் கிடைத்துள்ளது. டாடா குழுமத்தின் வரலாற்றில் முதல் முறையாக பொது கூட்டம் நடத்துவதற்கு போதுமான உறுப்பினர்கள் பங்கு பெற முடியாத காரணத்தால் ஆகஸ்ட் 18ஆம் தேதி வருடாந்திர பொதுக்கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டு பின்னர் ரத்து செய்யப்பட்டது.

இந்த முக்கியமான சம்பவம் நடப்பதற்கு முன்பு டாடா சன்ஸ் தலைவராக இருக்கும் என்.சந்திரசேகரன் பல மாதங்களாக பதவி நீட்டிப்பு கொடுக்காத நிலையில் தனக்கு பதவி நீட்டிப்பு வேண்டாம் தானாக முன்வந்து அறிவித்து, தான் ராஜினாமா செய்வதாக அறிவித்தார்.

டாடா குழுமத்திற்கு வந்த குட்நியூஸ்.. சந்திரசேகரன் இடத்தில் யாரு..?

இந்த ஒரு சம்பவத்தால் டாடா குழும நிறுவனங்கள் சுமார் 50000 கோடி ரூபாய் மதிப்பிலான சந்தை மதிப்பை இழந்தது. இந்த ஆகஸ்ட் கூட்டத்தில் தான் சந்திரேகரனுக்கு பதிலாக அவருடைய இடத்தில் யாரை நியமிக்கலாம் என்பதற்கான ஆய்வை மேற்கொள்ள தனி குழு அமைப்பது குறித்து முடிவுகள் எடுக்க திட்டமிட்டப்பட்டது.

ஆனால் ரத்தன் டாடா டிரஸ்ட் அமைப்பில் இருக்கும் டிரஸ்டிகளுக்கு அளிக்கப்பட்ட சம்பளம் மற்றும் இதர முறைகேடுகள் தொடர்பாக விசாரணை மேற்கொள்ள மகாராஷ்டிர சேரிட்டி கமிஷ்னர் உத்தரவிட்டத்து மட்டும் அல்லாமல் எவ்விதமான முக்கிய நிர்வாக முடிவுகளை எடுப்பதில் ஈடுப்பட கூடாது என்ற உத்தரவை விடுத்தது.

இந்த நிலையில் டாடா சன்ஸ் நிறுவனத்தில் பெரும் பங்குகளை வைத்திருக்கும் ரத்தன் டாடா டிரஸ்ட் அமைப்பை சேர்ந்த அதிகாரிகள் வருடாந்திர கூட்டத்தில் கலந்துக்கொள்ள முடியாத நிலையில் இக்கூட்டம் ரத்து செய்தது.

சில நாட்களுக்கு முன்பு செப்டம்பர் மாதம் இக்கூட்டம் நடக்கும் என பேசப்பட்ட நிலையில், தற்போது Registrar of Companies 3 மாதம் கால அவகாசம் கொடுத்துள்ளது. எனவே டாடா சன்ஸ் செப்டம்பர் மாதம் அவசர அவசரமாக இக்கூட்டத்தை நடத்த வேண்டிய அவசியமில்லை.

தொடர்ந்து டாடா சன்ஸ் சேர்மன் ஆக என்.சந்திரேசகரன் தனது பணியை தொடர்வார் ஆனால் பெரிய முதலீடு, நிதியியல் தொடர்பான முடிவுகளை மட்டும் எடுக்க முடியாது.

இதற்கு மத்தியில் சில நாட்களுக்கு முன்பும் மும்பையில் உள்ள தாஜ் வெலிங்டன் மியூஸ் ரெசிடென்சஸில் அதிகாரப்பூர்வமற்ற கூட்டம் டாடா டிரஸ்ட்ஸ் தலைவர் நோயல் டாடா தலைமையில் ரகசியமாக நடந்துள்ளது. இங்கு நோயல் டாடா டாடா டிரஸ்ட்ஸ் அமைப்பின் டிரஸ்ட்டியாக இருக்கும் டேரியஸ் காம்பட்டா மற்றும் முன்னாள் எச்டிஎஃப்சி தலைவர் தீபக் பரேக் ஆகியோர் சந்தித்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+