ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தற்போது புதியதாக ஒரு ப்ரீபெய்ட் திட்டத்தினை அறிவித்துள்ளது.
இது ஒரு வருட திட்டமாகும். இந்த திட்டத்தில் தினசரி 2.5 ஜிபி டேட்டா சலுகையானது கிடைக்கும். அதோடு கேஸ் பேக் சலுகையும் கிடைக்கும்.
இந்த திட்டத்தின் விலையானது 2,999 ரூபாயாகும். இதன் வேலிடிட்டி 365 நாட்களாகும்.
சலுகைகள்
இந்த திட்டத்தில் அன்லிமிடெட் திட்டங்கள், தினசரி 100 இலவச எஸ் எம் எஸ் கிடைக்கும். இவற்றோடு மொத்தம் 912.5 ஜிபி டேட்டாவும் கிடைகும். அதோடு இந்த திட்டத்தில் 20% கேஸ் பேக் சலுகையும் கிடைக்கும். இது ஜியோமார்ட் மஹா கேஸ்பேக் (JioMart Maha Cashback) சலுகையின் கீழ் பட்டியலிடப்பட்டுள்ளது.
எப்படி கேஸ்பேக் கிடைக்கும்?
இந்த கேஸ்பேக்கினை இதன்பிறகு செய்யும் அடுத்த ரீசார்ஜ்களில் பயன்படுத்திக் கொள்ளலாம். பயனர்கள் தங்களது ஜியோமார்ட் வாலட்டில் தான் இந்த கேஸ்பேக்கினை பெறுவார்கள். இந்த சலுகையில் கூடுதலாக ஜியோ டிவி, ஜியோ சினிமா, ஜியோ செக்யூரிட்டி மற்றும் ஜியோ கிளவுட் உள்ளிட்ட 4 சேவைகளையும் இலவசமாக பெற்றுக் கொள்ளலாம்.
வருட திட்டங்கள்
ஜியோ தற்போது இரண்டடு வருட திட்டங்களை வழங்கி வருகின்றது. அது 2879 ரூபாய் மற்றும் 3119 ரூபாய் மதிப்பிலான திட்டங்களாகும். இதில் 2879 ரூபாய் மதிப்பிலான திட்டத்தில் தினசரி 2 ஜிபி டேட்டா கிடைக்கும். இதிலும் அன்லிமிடெட் கால் சேவை மற்றும் தினசரி 100 இலவச எஸ் எம் எஸ்கள் கிடைகும். இந்த திட்டத்திலும் ஜியோடிவி, ஜியோ செக்யூரிட்டி, ஜியோ சினிமா மற்றும் ஜியோ கிளவுட் சேவைகள் என அனைத்துக்குமான சந்தாவும் இலவசமாக கிடைக்கும்.
இதெப்படி?
இதே 3119 ரூபாய் மதிப்பிலான திட்டத்தில் தினசரி 2ஜிபி டேட்டாவும், இதிலும் அன்லிமிடெட் கால் சேவை மற்றும் தினசரி 100 இலவச எஸ் எம் எஸ்கள் கிடைகும். இந்த திட்டத்திலும் ஜியோடிவி, ஜியோ செக்யூரிட்டி, ஜியோ சினிமா மற்றும் ஜியோ கிளவுட் சேவைகள் என அனைத்துக்குமான சந்தாவும் இலவசமாக கிடைக்கும். எனினும் இந்த திட்டத்தில் கூடுதலாக 10ஜிபி டேட்டா மற்றும் இலவச டிஸ்னி + ஹாட்ஸ்டார் சேவையும் இலவசமாக கிடைக்கும்.
பெஸ்ட் திட்டம்
இந்த திட்டங்களோடு ஒப்பிடும்போது தற்போது அறிவித்துள்ள திட்டத்தில் கூடுதலாம அரை ஜிபி டேட்டா கிடைக்கிறது. மேலும் கூடுதலாக கேஸ்பேக் சலுகையும் கிடைக்கிறது. ஆக மொத்தத்தில் இது மற்ற திட்டங்களுடன் ஒப்பிடும்போது இது சிறந்த திட்டமாகவே பார்க்கப்படுகிறது. சமீபத்தில் ஏர்டெல் மற்றும் ஜியோ, வோடபோன் நிறுவனங்கள் கட்டணத்தினை அதிகரிக்க நிலையில் வாடிக்கையாளர்களை தக்க வைத்துகொள்ள. இது போன்ற அறிவிப்புகளை கொடுத்து வருகின்றது.


Click it and Unblock the Notifications