ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் துணை நிறுவனமான ரிலையன்ஸ் ஜியோ, கடந்த செப்டம்பர் மாதத்துடன் முடிவடைந்த இரண்டாவது காலாண்டில் கடந்த ஆண்டை விட 185% நிகரலாபம் அதிகரித்து 2,844 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.
இது கடந்த ஜூன் காலாண்டில் அதன் நிகரலாபம் 2,520 கோடி ரூபாயாகும். ஆக இது செப்டம்பர் காலாண்டுடன் ஒப்பிடும்போது கிட்டதட்ட 13% சரிவாகும்.
இதே இந்த செப்டம்பர் காலாண்டில் வருவாய் கடந்த காலாண்டுடன் ஒப்பிடும்போது, 17,481 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இதே ஜியோவின் ஒருங்கிணைந்த லாபம் 19.8% அதிகரித்து, 3,020 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.
சராசரி அர்பு விகிதம்
இதே ஒரு வாடிக்கையாளரின் சாரசரி அர்பு விகிதம் 140.3 ரூபாயிலிருந்து 145 ரூபாயாக அதிகரித்துள்ளது. மேலும் கொரோனாவின் காரணமாக ஊழியர்கள் வீட்டில் இருந்து பணியாற்றும் நிலை ஏற்பட்டுள்ளது. இதன் காரனமாக டேட்டா நுகர்வு அதிகரித்துள்ளது. வயர்லெஸ் தரவு விகிதம், 27.2 மில்லியனாக அதிகரித்துள்ளது. இதே லாக்டவுன் காரணமாக ஊழியர்கள் வீட்டில் இருந்து பணியாற்றும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இதன் காரணமாக டேட்டா பயன்பாட்டு விகிதம் அதிகரித்துள்ளது.
வயர்லெஸ் சந்தா
கடந்த செப்டம்பர் காலாண்டில் மாதாந்திர வயர்லெஸ் சந்தாதாரர்களின் எண்ணிக்கையானது 1.69% அதிகரித்துள்ளது. சிம் ஒருங்கிணைப்பு மற்றும் புலம்பெயர்ந்த மக்களின் ரீசார்ஜ் சுழற்சியில் தாக்கம் இருந்ததாகவும் தரவுகள் கூறியுள்ளது. ஒரு மாதத்திற்கு ஒரு பயனருக்கு சராசரி வயர்லெஸ் தரவு நுகர்வு 12 ஜிபியாகவும், சராசரி குரல் அழைப்பு விகிதம் ஒரு பயனருக்கு 776 நிமிடங்களாக அதிகரித்துள்ளது.
வலுவான வளர்ச்சி செப்டம்பர் காலாண்டில் வலுவான வளர்ச்சி
சீனாவுக்கு வெளியே உள்ள தொலைத் தொடர்பு ஆப்ரேட்டர்களில், 400 மில்லியன் வாடிக்கையாளர்களை இணைத்த பெருமை, ஜியோவையே சேரும். அதிலும் வேறெந்த நாட்டிலும் இல்லாத இந்தியாவில் மட்டும் இவ்வளவு பெரிய நெட்வொர்க் என்பது ஜியோவின் வளர்ச்சியையே சுட்டிக் காட்டுகிறது.
5ஜிக்கு திட்டத்திற்கு ஆயத்தம்
இது குறித்து இந்த நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி, நாங்கள் கடந்த காலாண்டில் ஒட்டுமொத்த துறையிலும் வலுவான வளர்ச்சியினை பதிவு செய்துள்ளோம். குறிப்பாக டிஜிட்டல் துறையில் வலுவான வளர்ச்சியினைக் கண்டுள்ளோம். கொரோனா பரவலுக்கு மத்தியிலும் பல சர்வதேச முதலீடுகளை ஈர்த்தோம். தற்போது இந்தியாவில் 5ஜி சேவைக்கும் ஆயத்தமாகி வருகின்றோம். இதற்காக குவால்காம் டெக்னாலஜி மற்றும் ஜியோ பிளார்ட்பார்ம் இணைந்து விரிவாக்கம் செய்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
சர்வதேச நிறுவனங்கள் முதலீடு
இந்த நிலையில் ஜியோ நிறுவனத்தில் 13 சர்வதேச நிறுவனங்கள் 1,52,056 கோடி ரூபாயாக முதலீட்டினை சேர்த்துள்ளது. இந்த நிறுவனத்தில் பேஸ்புக், கூகுள், சில்வர் லேக், விஸ்டா ஈக்விட்டி பார்ட்னர்ஸ், கேகேஆர் நிறுவனம், அபுதாபியின் முபாதலா நிறுவனம், மற்றொரு அபுதாபி நிறுவனமான ஏடிஐஏ , டிபிஜி நிறுவனம் L catterton நிறுவனமும். பிஐஎஃப் உள்ளிட்ட நிறுவனங்கள் முதலீடு செய்துள்ளன.
More From GoodReturns

எல்பிஜி தட்டுப்பாட்டுக்கு முடிவு: இந்தியாவுக்கு வரும் 92,700 மெட்ரிக் டன் கேஸ்.. மத்திய அரசு அறிவிப்பு!!

ஈரான் போர்: கதிகலங்கி நிற்கும் தைவான்.. 11 நாட்கள் கெடு..!!

LPG தட்டுப்பாடு.. அதானிக்கு அடித்த யோகம்.. 2 நாளில் கோடி கோடியாய் பண மழை..

Work From Home.. அடுத்தடுத்து அறிவிப்பை வெளியிட்ட ஐடி நிறுவனங்கள்.. சென்னை ZOHO ஊழியர்களுக்கு 2 வார WFH..!!

முடிவுக்கு வருகிறதா ஈரான் போர்? 3 கண்டிஷன்களை வெளியிட்ட ஈரான் அதிபர்..!! அடுத்தது என்ன?

என்னப்பா புது புது பிரச்சனையா கிளம்புது.. ஈரான் போரால் 'இந்த' பொருட்கள் விலை தாறுமாற உயரபோகுது..!!

ஏஐ தொழில்நுட்பத்தின் கோரமுகம்.. Adode சிஇஓ சாந்தனு நாராயண் வெளியேற்றம்..!!

சிலிண்டர் இணைப்பு வைத்திருப்போருக்கு மத்திய அரசு முக்கிய அறிவிப்பு!! உடனே இந்த வேலையை முடிங்க!!

ஈரான் போரில் டிரம்ப் போடும் கணக்கே வேற..! குறி வச்சது கமேனிக்கு இல்ல..! வெளிவரும் உண்மை..!

ஈரான் போரில் பாகிஸ்தானுக்கு மறைமுக பங்கு: வெளிச்சத்திற்கு வந்தது பாகிஸ்தானின் இரட்டை வேடம்!!

இந்தியாவுக்கு குட் நியூஸ் சொன்ன ஈரான்!! சாமர்த்தியமாக பேசி காரியத்தை சாதித்த மத்திய அரசு!!



Click it and Unblock the Notifications