உலகின் முன்னணி டெக் சேவை நிறுவனமான ஐபிஎம் நிர்வாகம் மிக முக்கியமான முடிவை எடுத்துள்ளது. டிரம்ப் தலைமையிலான அரசு, அமெரிக்க நிறுவனங்கள் வெளிநாட்டு ஊழியர்களுக்கு அளிக்கப்படும் வேலைவாய்ப்புகளைக் குறைக்க வேண்டும் என பல்வேறு கட்டுப்பாடுகள், விசா சேவையை வைத்து அமெரிக்க நிறுவனங்கள் முறைகேடாக பயன்படுத்துகிறதா என்பதைக் கண்காணிக்கப்படும் வேளையில் ஐபிஎம் தனது மிகப்பெரிய வர்த்தக பிரிவான கன்சல்டிங் சேவை பிரிவில் இனி விசா, கிரீன் கார்டு அடிப்படையிலான வேலைவாய்ப்புகளை அளிப்பதை நிறுத்துவதாக அறிவித்துள்ளது.
இதுகுறித்து ஐபிஎம் செய்தி தொடர்பாளர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் ஐபிஎம் கன்சல்டிங் பிரிவில் விசா மற்றும் கிரீன் கார்டு ஸ்பான்சர்ஷிப் அடிப்படையிலான வேலைவாய்ப்பு திட்டத்தை நிறுத்த உள்ள முடிவு செய்துள்ளோம் எனத் தெரிவித்துள்ளார்.

ஐபிஎம் நிர்வாகம் எடுத்திருக்கும் இந்த முடிவு மூலம் பாதிக்கப்படும் ஊழியர்கள் தொடர்ந்து தங்களுடைய தாய் நாட்டில் இருக்கும் ஐபிஎம் அலுவலகத்தில் இருந்து பணியாற்றலாம் அல்லது இந்த வருடத்தின் இறுதிக்குள் நிறுவனத்தை விட்டு வெளியேறலாம் என அறிவித்துள்ளது.
மேலும் இந்த அறிவிப்பு அடங்கிய கடிதம் ஐபிஎம் கன்சல்டிங் பிரிவின் மேனேஜர்களுக்கு அனுப்பப்பட்டு உள்ளது என ப்ளூம்பெர்க் தெரிவித்துள்ளது. ஐபிஎம் நிறுவனத்தில் கன்சல்டிங் பிரிவு தான் மிகவும் பெரியது, இந்த பிரிவில் மட்டுமே சுமார் 1,50,000 பேர் பணியாற்றி வருகின்றனர்.
அமெரிக்க டெக் நிறுவனங்கள் பெரும்பாலும் வெளிநாட்டு ஊழியர்களை நம்பியே தனது வர்த்தகத்தையும், சாப்ட்வேர் டெவலப்மென்ட் பணிகளைச் செய்து வரும் வேளையில் ஐபிஎம் மட்டும் இதில் விதிவிலக்கல்ல, ஐபிஎம் எடுத்துள்ள இந்த முடிவு மூலம் விசா காலம் முடிந்த பின்பு பல ஐபிஎம் ஊழியர்கள் தங்களுடைய தாய் நாட்டிற்கு வர வேண்டிய கட்டாயம் ஏற்படும்.
இதேபோல் கிரீன் கார்டு-க்காக காத்துக்கொண்டு இருக்கும் ஐபிஎம் ஊழியர்களுக்கும் இதன் மூலம் கடுமையான பாதிப்பு ஏற்படும். ஒட்டுமொத்த அமெரிக்க டெக் துறையும் வெளிநாட்டு ஊழியர்களை நம்பி தான் இயங்கி வருகிறது, ஆனால் டிரம்ப் அரசின் புதிய கட்டுப்பாடுகள் ஏஐ அட்டகாசத்துடன் கூடுதல் பாதிப்புகளை உருவாக்கியுள்ளது.
ஏற்கனவே அமெரிக்காவில் இருக்கும் பல டெக்கிகள் பெட்டி படுக்கையைக் கட்டிக்கொண்டு தாய் நாட்டிற்குத் திரும்பிக்கொண்டு இருக்கும் வேளையில் ஐபிஎம் போன்ற முன்னணி அமெரிக்க நிறுவனங்களின் இத்தகைய முடிவு அமெரிக்காவில் பணியாற்றி வரும் வெளிநாட்டு ஊழியர்களுக்குக் கடுமையான பாதிப்பை உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications
