சென்னை: ரெனால்ட் - நிசான் நிறுவனங்கள் தழிகத்தில் 5,300 கோடி ரூபாய் முதலீட்டினை செய்ய ஒப்பந்தம் செய்துள்ளன.
பிரெஞ்சு ஆட்டோ மொபைல் நிறுவனமான ரெனால்ட் மற்றும் ஜப்பானிய வாகன தயாரிப்பு நிறுவனமான நிசான் நிறுவனமும், தமிழகத்தில் முதலீடு செய்ய உள்ளன.
இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்திலும் தமிழக முதல்வர் முக ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்தாகியுள்ளது.
என்னென்ன கார்கள்?
இந்த புதிய கார்களில் நான்கு சி பிரிவு எஸ்யுவி-க்கள் மற்றும் இரண்டு ஏ பிரிவு எலெக்ட்ரிக் வாகனங்கள் இடம்பெற இருக்கின்றன. இவற்றில் மின்சார வாகனங்கள் முதலில் அறிமுகம் செய்யப்பட உள்ளன. இந்த புதிய திட்டத்திற்காக முதல் கட்டமாக 3500 கோடி ரூபாய் முதலீடு செய்யப்படவுள்ளது.
புதிய வாகனங்கள் அறிமுகம்
இந்த இரு நிறுவனங்களும் இணைந்து ஆறு புதிய வாகனங்களை உற்பத்தி செய்து, அவற்றை உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சந்தைகளுக்கு அறிமுகப்படுத்த உள்ளதாகவும் தெரிவித்துள்ளன.
மேற்கூறிய 6 கார்களில் 2 மின்சார கார்களும் அடங்கும். 6 கார்களின் ரெனால்ட் நிறுவனத்தின் கார்கள் 3 இருக்கும் என்றும் கூறப்படுகின்றது. மீதமிருக்கும் 3 கார்கள் நிசான் நிறுவனத்துடையதாக இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.
ஆலை எங்கு தெரியுமா??
சென்னையில் அமையவுள்ள இந்த புதிய கூட்டணியானது 5,300 கோடி ரூபாய் முதலீடு செய்யவுள்ளது. இந்த வாகனங்கள் உற்பத்திகாக ஏற்கனவே இதன் சென்னையில் உள்ள கூட்டணி ஆலையானது விரிவாக்கம் செய்யப்படவுள்ளதாகவும் தெரிகிறது. இந்த ஆலையில் உற்பத்தி செய்யப்படும் கார்களின் பயன்படுத்தப்படும் மூலதன பொருட்கள் ஆனது, பெரும்பாலும் உள்நாட்டிலேயே வாங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த திய கார்கள் குளோபல் காமல் மாட்யுல் (CMF) பிளாட்ஃபார்மில் உருவாக்கப்பட இருக்கின்றன.
வேலை வாய்ப்பு
இந்த கூட்டணி மூலம் புதியதாக 2000 பேருக்கு வேலை வாய்ப்பானது கிடைக்கும் எனலாம். தமிழகத்தில் ரெனால்ட் நிசான் கூட்டமைப்பு உற்பத்தி மற்றும் டிசைன் பிரிவு கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கி வருகிறது.
தமிழகத்தின் வளர்ச்சி
ஆட்டோமொபைல் உற்பத்தி, ஆட்டோ உபகரணங்கள் மற்றும் டிசைன் உள்ளிட்டவைகளுக்கான முக்கிய பகுதியாக தமிழகம் மாறும். தமிழகத்தில் ரெனால்ட்-நிசான் கூட்டணியின் நவீனமயமாக்கல் தொடர்பான புதிய முதலீட்டின் கீழ் துவங்க இருக்கும் திட்டம், தமிழகத்தின் வளர்ச்சியினை மேம்படுத்தும். தமிழகத்தின் உற்பத்தி வளர்ச்சியினையும் ஊக்குவிக்குகலாம்.
More From GoodReturns

EMI-யும் கட்டியாச்சு,லாபமும் பார்த்தாச்சு! ரூ8 கோடியை வைத்து ரூ10 கோடி வீட்டை வாங்கிய சாதுர்ய நபர்!

வங்கி கடனை விட ஈஸி! உங்கள் PPF பணத்தை வைத்தே கடன் பெறலாம் - புதிய விதிமுறைகள் என்ன?

முகேஷ் அம்பானிக்கு ரூ.1 லட்சம் கோடி நஷ்டம்; 2 நாட்களில் 6% சரிவடைந்த ரிலையன்ஸ் பங்கு மதிப்பு!!

தங்கம் விலை: திடீரென ரூட்டை மாற்றும் தங்கம்.. இப்போ தங்கம் வாங்குறது தான் புத்திசாலித்தனமா?

5 ஆண்டுகளில் ரூ.1 லட்சத்தை ரூ.25 லட்சமாக மாற்றிய பென்னி ஸ்டாக்: உங்க போர்ட்போலியோவுல இருக்கா?

பங்குச்சந்தை ஏறினாலும், இறங்கினாலும் கண்டுக்காதீங்க: சென்செக்ஸ் சொல்லி தரும் பாடம் இது தான்!!

ஆரம்பமே அட்டகாசம்: நிதியாண்டின் முதல் நாளில் பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு சர்ப்பிரைஸ்!!

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!



Click it and Unblock the Notifications