சென்னை: பிரபல ரெனால்ட்- நிசான் (Renault Nissan ) நிறுவனம் சென்னையில் இருக்கும் தங்களுடைய நிறுவனத்தில் இருந்து 500 முதல் 1000 பேர் வரை பணிநீக்கம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
ரெனால்ட் நிறுவனம் சென்னையில் ரெனால்ட் நிசான் டெக்னாலஜி அண்ட் பிசினஸ் சென்டர் என்ற பெயரில் தன்னுடைய தொழில்நுட்ப திறன் மையத்தை நடத்தி வருகிறது. இங்கே சுமார் 10,000 பேர் வேலையில் இருக்கின்றனர். இவர்களில் 5 லிருந்து 10% பேரை பணி நீக்கம் செய்ய இருப்பதாக ஃபைனான்ஷியல் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியீடு செய்துள்ளது. இதன் மூலம் இங்கே பணியாற்றும் 500 லிருந்து 1000 பேர் வரை வேலை வேலையை இழக்க இருப்பது உறுதியாகி உள்ளது.

ரெனால்ட் நிசான் நிறுவனம் இந்தியாவில் தங்களுடைய செயல்பாடுகளை மறுக்கட்டமைப்பு செய்ய இருப்பதாகவும் இதன் காரணமாகவே ஊழியர்கள் பணி மிக்க நடவடிக்கை எடுத்திருப்பதாகவும் தெரிவித்துள்ளது. ஏற்கனவே இந்த நிறுவனம் தங்களுடைய நிதி சார்ந்த மற்றும் விநியோகம் சார்ந்த மேலாண்மைகளை ஜென்பேக்ட் நிறுவனத்திடம் ஒப்படைத்து விட்டது. இனி இந்தியாவில் தங்களுடைய நிறுவனம் முழுக்க முழுக்க பொறியியல் சார்ந்த செயல்களில் மட்டுமே கவனம் செலுத்தும் என தெரிவித்துள்ளது.
எனவே ரெனால்ட் நிறுவனத்தின் இந்த பணி நீக்க அறிவிப்பில் பொறியியல் துறை சார்ந்த ஊழியர்கள் பாதிக்கப்பட மாட்டார்கள், ஆனால் மற்ற பிரிவுகளில் பணியாற்றும் ஊழியர்கள் பாதிக்கப்படுவார்கள் என்பது தெரிய வந்துள்ளது. ரெனால்ட் நிசான் நிறுவனங்களின் சர்வதேச அளவிலான தொழில்நுட்ப திறன் மையமாக சென்னையில் இருக்கும் இந்த திறன் மையம் செயல்பட்டு வருகிறது.
2007 ஆம் ஆண்டு சென்னையில் நிறுவப்பட்ட முதல் பன்னாட்டு திறன் மையமாகவும் இது இருக்கிறது. இந்த நிறுவனத்தில் ரெனால்ட் 51% பங்குகளையும் நிசான் 49 % பங்குகளையும் கொண்டிருக்கிறது. இந்த நிறுவனத்தின் பிரதான அலுவலகம் ஆகும். சென்னைக்கு வெளியே மகேந்திரா சிட்டி பகுதியில் அமைந்துள்ளது. மற்ற அலுவலகங்கள் ஐதராபாத், பெங்களூர் ஆகிய பகுதிகளில் அமைந்துள்ளன.
சென்னை அலுவலகத்தில் 5000 ஊழியர்கள் பொறியியல் துறையிலும் 2800 ஊழியர்கள் மற்ற பிரிவுகளிலும் வேலை செய்கிறார்கள். நிசான் நிறுவனம் கடந்த பிப்ரவரி மாதம் ஹோண்டா நிறுவனத்தோடு இணைந்து மிகப்பெரிய கூட்டு நிறுவனத்தை உருவாக்குவதற்கு திட்டமிட்டது. ஆனால் அது எதிர்பார்த்தபடி நடைபெறவில்லை. இதனால் இந்தியாவில் தங்களுடைய தொழிலை எப்படி தொடர்வது என நிஸான் நிறுவனம் குழப்பத்தில் இருக்கிறது.
2023 ஆம் ஆண்டின் இறுதியில் நிசான் மோட்டார் நஷ்டத்தை ஈடு செய்ய சர்வதேச அளவில் 9 ஆயிரம் பேரை பணியில் இருந்து நீக்கியது. மேலும் தங்களுடைய உற்பத்தி திறனை 20 சதவீதம் வரை குறைத்தது.
Story written by: Devika


Click it and Unblock the Notifications