1000 பேர் பணிநீக்கம், ஆன 1650 பேருக்கு புது வேலை.. Renault எடுத்து முடிவு..!

அமெரிக்கா, சீனா, இந்தியாவைத் தொடர்ந்து எலக்ட்ரிக் வாகனங்களின் ஆதிக்கம் ஐரோப்பியச் சந்தையில் அதிகரிக்கத் துவங்கியுள்ளது, இதனால் ஐரோப்பிய நாடுகளில் இருக்கும் கார் தயாரிப்பு நிறுவனங்கள் அனைத்தும் சந்தைக்கு ஏற்ப தங்களுடைய உற்பத்தியை மாற்றி வருகின்றனர்.

இதன் அடிப்படையில் ரெனால்ட் குரூப் தன்னுடைய பிரான்ஸ் சந்தையில் உருவாகும் எலக்ட்ரிக் வாகனங்களின் டிமாண்ட்-க்கு ஏற்ப அந்நாட்டில் இருக்கும் தொழிற்சாலையில் 1650 புதிய ஆப்ரேட்டர்களை 2028ஆம் ஆண்டுக்குள் புதிதாக சேர்க்க உள்ளதாக அறிவித்துள்ளது.

1000 பேர் பணிநீக்கம், ஆன 1650 பேருக்கு புது வேலை.. Renault எடுத்து முடிவு..!

இதேவேளையில் 1000 வொயிட் காலர் ஊழியர்களை விஆர்எஸ் திட்டத்தின் கீழ் வெளியேற்ற முடிவு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இது ஐரோப்பிய ஆட்டோமொபைல் சந்தையில் நடக்கும் மிக முக்கியமான மாற்றங்களில் ஒன்றாகப் பார்க்கப்படுகிறது.

ஐரோப்பிய கார்களின் தரம் மற்றும் தொழில்நுட்பத்திற்கு ஈடுயிணையே இல்லை என்ற காலம் மலையேறிவிட்டாலும், இன்றும் ஐரோப்பிய கார் பிராண்டுகளுக்கு தனி மதிப்பு உள்ளது.

ஆனால் எரிபொருள் விலை அமெரிக்கா - ஈரான் - இஸ்ரேல் போர், உக்ரைன் - ரஷ்யா போர் காரணமாக அதிகரித்துள்ள வேளையில் சாமானிய மக்கள் அதிகளவில் எலக்ட்ரிக் வாகனங்களைத் தேர்வு செய்யத் துவங்கியுள்ளனர், காரின் திறன் முதல் நீண்ட கால பயன்பாட்டு அளவிலும் எலக்ட்ரிக் கார்கள் அனைத்து தரப்பினருக்கும் ஏற்றதாக மாறி வரும் வேளையில் ஐரோப்பியச் சந்தை மொத்தமாக EV பக்கம் திரும்பி வருகிறது.

Also Read

உதாரணமாக பிரான்ஸ் நாட்டில் ரெனால்டு குழுமத்தின் ஆர்5 மாடல் கார்களுக்கு அதிகப்படியான டிமாண்ட் உருவாகியுள்ளதன் விளைவாக தற்போது பிரான்ஸ் தொழிற்சாலையில் மிகப்பெரிய மறுசீரமைப்பு திட்டத்தைக் கையில் எடுத்துள்ளது.

தற்போது நீக்கப்படும் ஊழியர்கள் பெருமளவு குவாலிட்டி கன்ட்ரோல், சப்ளை செயின் ஆப்ரேஷன்ஸ் பிரிவில் தான் இருக்கும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. உற்பத்தி தளத்தில் எவ்விதமான பணிநீக்கத்தையும் ரெனால்ட் அறிவிக்கவில்லை, இந்த பணிநீக்கத்தின் மூலம் பிரான்ஸ் தொழிற்சாலையில் சுமார் 7 சதவீதம் பேர் பாதிக்கப்பட உள்ளனர்.

சமீபத்தில் ஒட்டுமொத்த ஐரோப்பிய உற்பத்தி சந்தையும் சீன நிறுவனங்கள் கைக்கு மாறுவதாக ஆய்வறிக்கை வெளியாகியுள்ளது, ஐரோப்பிய சந்தையில் சீனா நிறுவனங்களின் கார்களின் இறக்குமதிக்கு அதிகப்படியான வரிவிதித்து முட்டுக்கட்டை போட்டு வந்தது.

இந்த முட்டுக்கட்டையை உடைப்பதில் நேரத்தில் செலவழிப்பதை விட மாற்று வழிகளை சீன நிறுவனங்கள் கண்டறிந்தது.

Recommended For You

எந்தொரு நாடும் கோடிக்கணக்கான முதலீட்டை மறுக்காது என்பதை உணர்ந்து சீனாவின் எலக்ட்ரிக் கார் தயாரிப்பு நிறுவனங்கள், அதன் சப்ளை செயின் நிறுவனங்கள், பேட்டரி தயாரிப்பு நிறுவனங்கள் என ஒட்டுமொத்த சீனா ஈவி எகோசிஸ்டமும் ஐரோப்பாவில் பல நாடுகளில் முதலீடு செய்துள்ளது.

இதனால் தற்போது ஒட்டுமொத்த ஐரோப்பிய ஈவி சந்தையும் சீன நிறுவனங்களை நம்பி இயங்க வேண்டிய கட்டாயம் உருவாகியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+