பெங்களூரை சேர்ந்த எம்படெட் ஃபைனான்ஸ் ஸ்டார்ட்-அப் நிறுவனமான நிரோ (NIRO) உடன் இணைந்து ஹவுசிங்.காம் இந்தியாவில் முதல் முறையாக Rent Now Pay Later (RNPL) சேவையை அறிவித்து இருக்கிறது.
இந்த புதுமைமிக்க சேவையின் மூலம் வாடிக்கையாளர்கள் தங்களின் வாடகையை கிரெடிட் முறையில் செலுத்த முடியும். தற்போது, பயனர்கள் வாடகையை ஹவுசிங்.காமில் செலுத்தும் போது சேவை கட்டணம் இல்லா, வட்டியில்லா கிரெடிட் வசதி உள்ளிட்டவைகளை அதிகபட்சம் 40 நாட்களுக்கு பெற முடியும்.
இத்துடன் வாடகையை எளிய மாத தவணையில் மாற்றிக் கொள்ளும் வசதியும் வழங்கப்படுகிறது.
ஹவுசிங்.காம் நிறுவனம்
ஹவுசிங்.காம் நிறுவன சேவையில் பயனர்கள் இதுவரை தங்களது கிரெடிட் கார்டு மூலம் வாடகையை செலுத்தும் வசதி வழங்கப்பட்டு இருந்தது. எனினும், தற்போது இந்திய மக்கள் தொகையில் வெறும் 4 சதவீதம் பேர் மட்டுமே கிரெடிட் கார்டு வைத்துள்ளனர். இதன் காரணமாக RNPL சேவை கிரெடிட் கார்டு வைத்திருக்காத பயனர்கள் சிறப்பாக வாடகையை எவ்வித கட்டணமும் இன்றி கிரெடிட் முறையில் செலுத்த முடியும்.
நிதி வாய்ப்பு
இதன் மூலம் ஹவுசிங்.காம் பயனர்கள் தங்களின் நிதியை மற்ற தேவைகளுக்கு ஒதுக்க முடியும். இதுதவிர RNPL சேவை மூலம் பயனர்கள் கிரெடிட் அளவை அதிகப்படுத்திக் கொண்டு பல்வேறு பயன்பாடுகளுக்கும் மிகக் குறைந்த வட்டியில், உடனடி ரொக்கமாக பெற்றுக் கொள்ளலாம்.
ஹவுசிங்.காம் மற்றும் நிரோ
ஹவுசிங்.காம் மற்றும் நிரோ இணைந்து வெற்றிகரமாக pre-launch கட்டத்தில் சுமார் ஒரு லட்சம் பயனர்களுக்கு ஏராளமான சலுகைகள் இப்புதிய சேவையின் கீழ் அறிவிக்கப்பட்டு உள்ளது. முதல் முறை வாடகை செலுத்தும் போது எவ்வித சேவை கட்டணங்களும் வசூலிக்கப்படுவதில்லை. மேலும் பயனர்கள் தங்களின் கிரெடிட் அளவை அதிகபட்சம் ரூ.3 லட்சம் வரை உயர்த்திக் கொள்ளலாம்.
ருவ் அகர்வாலா
ஹவுசிங்.காம், பிராப்டைகர்.காம் மற்றும் மக்கன்.காம் குரூப் தலைமை செயல் அதிகாரி துருவ் அகர்வாலா இந்தியாவின் எதிர்கால டிஜிட்டல் பேமண்ட் முறை பற்றி கூறுகையில் "டிஜிட்டல் பேமண்ட் உலகில் இந்தியா புதுமை படைத்துள்ளது.
Rent Now Pay Later சேவை
தற்போது நாம் Rent Now Pay Later போன்ற சேவைகள் நல்ல வரவேற்பை பெறும் என்று எதிர்பார்க்கிறோம். வழக்கமான நடைமுறையில் இருக்கும் நிதி சேவைகளை டிஜிட்டல் பேமெண்ட் துறைக்கு பெரும் தடையாக இருந்த வந்த நிலையில், கிரெடிட் முறையில் வாடகை வீட்டில் வசிக்க நினைக்கும் பல லட்சம் வாடிக்கையாளர்களுக்கு இந்த சேவை பெரும் நன்மையை வழங்கும்," என தெரிவித்தார்.
வெளிநாட்டு சேவைகள்
கிளார்னா, ஆஃப்டர்பே மற்றும் அஃபர்ம் போன்ற முன்னணி நிறுவனங்களால் சர்வதேச அளவில் Buy Now Pay Later (BNPL) சார்ந்த சேவைகள் அதிக பிரபலம் அடைந்து வருகின்றன. இந்த சேவைகள் பயனர்கள் எவ்வித முன்பணம் இன்றி பொருட்களை வாங்க செய்கிறது. பொருட்களை வாங்கிய பின் கட்டணத்தை செலுத்துவதற்கு போதிய நேரம் மற்றும் தவணை முறைகளை வழங்குகிறது.
Buy Now Pay Later சேவை
BNPL மாடல் அழகு சாதன பொருட்கள் விற்பனையில் துவங்கி வீட்டு உபயோக பொருட்கள் என பல்வேறு துறைகளில் வெற்றிகரமாக இருந்து வருகிறது. இந்த வரிசையில் தற்போது ஹவுசிங்.காம் இந்தியாவில் ரியல் எஸ்டேட் துறையில் இதன் பயன்பாட்டை முதல் முறையாக துவங்கி உள்ளது.
நிரோ இணை நிறுவனர்
நிரோ நிறுவனத்தின் இணை நிறுவனர் மற்றும் தலைமை செயல் அதிகாரியான ஆதித்ய குமார், ஹவுசிங்.காம் உடன் கூட்டணி அமைத்து வீடு சார்ந்த வாடிக்கையாளர்களுக்கு முதல் முறையாக Rent Now Pay Later சேவையை அறிமுகம் செய்துள்ளோம். நிரோ மூலம் நாங்கள் தொடர்ந்து புதுமைமிக்க கிரெடிட் தீர்வுகளை நுகர்வோர் இண்டர்நெட் தளங்களில் வழங்க பணியாற்றி வருகிறோம்.
வெற்றி கூட்டணி
எங்களின் கூட்டணி முயற்சிகளின் மூலம் நாங்கள் மக்கள் இந்தியாவில் வாடகை பேண்ட் செய்யும் முறையில் உண்மையாக புரட்சியை ஏற்படுத்த முடிகிறது. ஹவுசிங்.காம் மற்றும் நிரோ வளர்ந்து வரும் இந்த சந்தையில் குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்தும் இடத்தில் உள்ளன என்று ஆதித்ய குமார் தெரிவித்தார்.
More From GoodReturns

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!



Click it and Unblock the Notifications