இந்தியாவில் வாடகை வீடுகளில் வசிப்பவர்களுக்கும், வாடகை வீடு தேடக்கூடிய நபர்களுக்கும் பல்வேறு சிக்கல்களை வீட்டு உரிமையாளர்கள் தருகிறார்கள். திடீரென வீட்டு வாடகையை உயர்த்துவார்கள் சிலர் ஆண்டுக்கு இரண்டு முறை கூட வாடகை உயர்த்துவார்கள். அதே போல வீட்டுக்கான செக்யூரிட்டி டெபாசிட்டாக 10 முதல் 12 மாத வாடகையை கேட்பார்கள்.
இந்தியாவில் சென்னை,பெங்களூரு, மும்பை உள்ளிட்ட பெரிய நகரங்கள் எல்லாம் வேலை வாய்ப்பு ரீதியாக வேகமான வளர்ச்சி அடைந்து வருகின்றன. நாள்தோறும் ஆயிரக்கணக்கானவர்கள் வேலைவாய்ப்புக்காகவும் தொழில் புரிவதற்காகவும் இந்த நகரங்களுக்கு படையெடுக்கிறார்கள் . இவ்வாறு வரக்கூடியவர்களுக்கு இங்கே பெரிய சிக்கலாக இருப்பது வாடகை வீடுகள் தான் . ஏற்கனவே இந்த நகரங்களில் வீடுகளின் வாடகை அதிகம்.

ஏரியாவை பொருத்து வாடகை நிர்ணயம் செய்யப்படுகிறது. சென்னையில் ஒரு படுக்கை அறை வீடு என்றால் சராசரியாக 18,000 ரூபாய் வாடகை தேவை. ஏரியாவை பொறுத்து வாடகை இதற்கு மேல் உயரும் . ஏற்கனவே வாடகை அதிகமாக இருக்கக்கூடிய சூழலில் வீட்டு உரிமையாளர்கள் குறைந்தது 10 மாதம் அல்லது ஓர் ஆண்டுக்கான வாடகை தொகையை செக்யூரிட்டி டெபாசிட் ஆக கேட்கிறார்கள். இது வாடகை வீடு தேடி வருபவர்களுக்கு பெரிய சிக்கலை ஏற்படுத்துகிறது.
இந்த சூழலில் தான் வீட்டு வாடகை சட்டம் 2025 ஐ மத்திய அரசு தயாரித்துள்ளது. இது வாடகைதாரர்களுக்கு சாதகமான பல அம்சங்களை கொண்டுள்ளது. வீட்டு உரிமையாளர்களுக்கும் வாடகைக்கு குடியிருப்பவர்கள் மத்தியிலும் ஒரு வெளிப்படை தன்மையை கொண்டு வரவும் இது உறுதி செய்கிறது . இதன்படி இனி வீட்டு உரிமையாளர்கள் இனி இரண்டு மாத வாடகை தான் செக்யூரிட்டி டெபாசிட்டாக கேட்க முடியும் என இந்த புதிய சட்டத்தில் பரிந்துரை செய்யப்பட்டிருக்கிறது .

இதற்கு முன்பு பத்து மாதங்கள் வாடகையை செக்யூரிட்டி டெபாசிட்டாக செலுத்தி வந்த நிலையில் இது பெரிய நிவாரணத்தை தந்திருக்கிறது . எனவே வீட்டு உரிமையாளர்கள் இரண்டு மாத வாடகை தொகைக்கு மேல் செக்யூரிட்டி டெபாசிட் கேட்டால் அது சட்டப்படி குற்றம் .
இந்த புதிய பரிந்துரையின் படி இனி வீடு வாடகைக்கு விடும் போது வீட்டு உரிமையாளருக்கும் வாடகைக்கு செல்லக்கூடிய நபருக்கும் இடையே வாடகை ஒப்பந்தம் எனப்படும் ரெண்டல் அக்ரிமெண்ட் போட வேண்டும். வீடு வாடகைக்கு சென்ற இரண்டு மாதங்களுக்குள் இந்த ரெண்டல் அக்ரிமெண்டை இரு தரப்பினரும் கையெழுத்திட்டு பதிவுத்துறை அலுவலகத்தில் பதிவு செய்ய வேண்டும். ஒருவேளை இந்த வாடகை ஒப்பந்தத்தை பதிவு செய்யவில்லை என்றால் 5 ஆயிரம் ரூபாய் அபராதமாக செலுத்த வேண்டும்.
இதன் மூலம் வீடு வாடகைக்கு எடுப்பது என்பது ஒரு முறைப்படுத்தப்பட்ட அமைப்பின் கொண்டுவரப்படுகிறது . வாடகை ஒப்பந்தத்தில் உள்ள அனைத்து நிபந்தனைகளையும் இருதரப்பினருமே தவறாமல் பின்பற்றி ஆக வேண்டும். அதே போல வீட்டு உரிமையாளர் நினைத்த போதெல்லாம் வீட்டு வாடகையை உயர்த்த முடியாது. இந்த புதிய விதிமுறையின் படி ஓர் ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே வீட்டு வாடகை உயர்த்த முடியும் .
வீட்டு வாடகை உயர்த்துவதற்கு 90 நாட்களுக்கு முன்னரே வாடகைதாரர்களிடம் தெரிவிக்க வேண்டும். மேலும் 5 ஆயிரம் ரூபாய்க்கு மேல் வாடகை தொகை இருந்தால் குடியிருப்பவர்கள் டிஜிட்டல் அல்லது யுபிஐ அல்லது வங்கி பரிமாற்ற முறையில் தான் அதனை செலுத்த வேண்டும். ஒரு வீட்டின் வாடகை மாத வாடகை 50 ஆயிரம் ரூபாய்க்கு மேல் செல்கிறது என்றால் டிடிஎஸ் கழிக்கப்பட்டு தான் உரிமையாளருக்கு இந்த பணம் செல்லும். எனவே வீட்டு உரிமையாளர் வருமான வரி கணக்கு செய்யும்போது இந்த தொகையை கிளைம் செய்து பெற்றுக் கொள்ளலாம்.
மேலும் வீட்டு வாடகை சம்பந்தப்பட்ட பிரச்சினைகளை தீர்ப்பதற்காகவே சிறப்பு தீர்ப்பாயங்கள் அமைக்கப்பட இருக்கின்றன. இதில் நாம் வழக்கு பதிவு செய்தால் 60 நாட்களுக்குள் அந்த வழக்கிற்கு தீர்வு காணப்பட்டு விடும்.
More From GoodReturns

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

தங்கம் வாங்க இது நல்ல நேரமா? திங்கட்கிழமை அதிரப்போகும் விலை! நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயம்?

மினி பாகிஸ்தான்? அடுத்தடுத்த சர்ச்சையில் TCS, டெக் மகேந்திரா! ஐடி நிறுவனங்களில் என்ன தான் நடக்கிறது?

அட்சய திருதியை தங்கம் விற்பனை: தள்ளுபடிகளை வாரி வழங்கும் நகை கடைகள்!!

காருண்யா KR-749 முடிவுகள் வெளியானது : ரூ.1 கோடி வென்றது யார்?

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!

ரூ.10 கோடியை ரூ.100 கோடியாக மாற்றிய நடிகை மீனா..!! செம ஐடியாவா இருக்கே..!!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!

விஜய் -க்கு எம்.எல்.ஏ பதவியை தரப்போவது பெரம்பூரா? திருச்சி கிழக்கா? இது தான் கள நிலவரம்!!

ஸ்திரீ சக்தி SS 515 லாட்டரி: யாருக்கெல்லாம் அடித்தது ஜாக்பாட்!! முழு விவரம்



Click it and Unblock the Notifications