சென்னை: இந்தியாவில் ரியல் எஸ்டேட் சந்தை 2024ஆம் ஆண்டு நிலவரப்படி 227.26 பில்லியன் அமெரிக்க டாலர்களாக மதிப்பிடப்பட்டுள்ளது. அதிகமான மக்கள் ஆன்லைன் தளங்களை நம்பி வாடகைக்கு வீடுகளை தேடி வருகின்றனர். இதனால் மோசடி சம்பவம் பல மடங்கு அதிகரித்துள்ளன. வாடகை மோசடி இந்தியாவில் தற்போது அதிகரித்து வரும் ஒரு சம்பவமாக இருக்கிறது. இதனைத் தடுக்க வீடு தேடும் நபர்கள் என்னென்ன செய்ய வேண்டும் என்பதை இந்தப் பதிவில் பார்ப்போம்.
மோசடி செய்பவர்கள் தந்திரமான திட்டங்களை பயன்படுத்தி நில உரிமையாளர்கள் மற்றும் புரோக்கர்கள் போல காட்டிக்கொண்டு மோசடி செய்கின்றனர். போலியான வாடகை விளம்பரங்களை உருவாக்குகிறார்கள். மேலும், புரோக்கர்கள் போல நடித்து மக்களின் தனிப்பட்ட தகவல்களைத் திருடுகின்றனர். வாடகை மோசடிக்கு பலியாகி பணத்தை இழப்பது மட்டுமல்லாமல், உங்களுடைய தகவல்களையும் பிறருக்கு அனுப்புகிறீர்கள் என்பதை மனதில் கொள்ளுங்கள்.

இது போன்ற மோசடி செய்பவர்களிடம் இருந்து நம்மை எப்படி பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்பதைப் பார்ப்போம்.
சந்திப்புகளை மேற்கொள்ளுங்கள்: வாடகைக்கு வீடு வேண்டும் என்று நினைத்தால் அந்த ஓனரை சென்று சந்தியுங்கள். எந்த ஒரு ஒப்பந்தத்தையும் முடிவு செய்வதற்கு முன்பு உரிமையாளரை சந்தித்து சொத்தை பற்றிய முழுமையான விவரங்களை தெரிந்து கொள்ளுங்கள். வாடகை வீட்டிற்கு செல்ல வேண்டும் என்று நீங்கள் நினைத்துக் கொண்டிருந்தால் இதுபோன்ற நேரடி சந்திப்பு உங்களுக்கு உதவியானதாக இருக்கும்.
அவசரமாக குடியேறுதல்: சில மோசடிக்காரர்கள் உடனே வீட்டை காலி செய்து கொண்டு வந்து விட வேண்டும் என்று கூறி உங்களை ஏமாற்றலாம். இது போல் உங்களை அவசரப்படுத்தினால் மேலும் எச்சரிக்கையுடன் இருப்பது முக்கியம். போலி வீட்டைக் காட்டி உங்களிடம் மோசடியாக புரோக்கர் கமிஷன் பெற்று ஏமாற்றும் நபர்களும் இருக்கின்றனர். இது போன்ற விஷயங்களில் இருந்து தப்பிக்க அவசர அவசரமாக முடிவெடுப்பதைத் தவிர்த்து விடுங்கள்.
முன்பணம் கேட்டு பெறுவது: உங்களிடம் வாடகை வீட்டை காட்டுவதற்கு முன்பே முன்பணம் கேட்கும் நபர்களிடமிருந்து எச்சரிக்கையாக இருங்கள். இது மோசடிக்காரர்களின் யுக்தியாக இருக்கலாம் .எனவே, வீட்டைப் பார்த்து நில உரிமையாளரிடம் பேச்சு வார்த்தை நடத்தி நீங்கள் குடியேறிய பின்பு பணம் செலுத்துவதைப் பற்றி யோசிக்கலாம். அதிலும் சிலர் முன்கூட்டியே அட்வான்ஸ் தொகை கேட்டு ஏமாற்றும் செயல்களும் நடந்து கொண்டுதான் இருக்கிறது. இது போன்ற முன்பணம் செலுத்துவதில் தகுந்த கவனம் தேவை.
பிஷிங் லிங்குகள்: ரியல் எஸ்டேட் இணையதளங்கள் போல காட்டிக் கொண்டு பிஷிங் லிங்குகளை உங்களுக்கு அனுப்பி அதன் மூலம் உங்கள் தகவல்களைத் திருடலாம். இது போன்ற லிங்குகளை அனுப்பி கொள்ளையடிப்பது ஏற்கனவே இருக்கும் முறையில் ஒன்றுதான். ஆனால் இது பற்றிய விவரம் அறியாதவர்கள் உண்மையிலேயே ரியல் எஸ்டேட் இணையதளம் என்று நம்பிக் கொண்டு, அதனுள் சென்று தங்களின் விவரங்களை என்டர் செய்து விடுகின்றனர். இதிலிருந்து தப்பிக்க SSL சர்டிபிகேட் கொண்ட இணையதளமா என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள். எளிதாக சொல்ல வேண்டும் என்றால் வெப்சைட் லிங்கின் பக்கத்தில் "Connection is Secure" என்று எழுதப்பட்டிருக்கும். அப்படி இருந்தால் அவை பாதுகாப்பான இணையதளம் என்று நம்பலாம். ஆனாலும் ஒன்றுக்கு இரு முறை ஆராய்ச்சி செய்வது முக்கியம்.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications