இன்றைய காலகட்டத்தில் சொந்தமாக வீடு வாங்குவதா அல்லது வாடகை வீட்டிலேயே இருக்கலாமா என்ற விவாதம் பல இளம் தம்பதிகளிடமும் காணப்படுகிறது. இதற்கு முக்கிய காரணம் இந்தியாவின் பிரதான நகரங்களில் எல்லாம் அனைத்து வசதிகளும் நிறைந்த பகுதியில் இரண்டு படுக்கை அறை கொண்ட அடுக்குமாடி குடியிருப்பை வாங்க வேண்டும் என்றால் குறைந்தபட்சம் 1 கோடி ரூபாய் செலுத்த வேண்டி இருக்கிறது.
பெரும்பாலானவர்கள் இதற்காக வீட்டு கடன் வாங்குகின்றனர் இவ்வாறு வீட்டுக் கடனை வாங்கி விட்டால் அடுத்த 20 ஆண்டு காலத்திற்கு இந்த கடனை செலுத்துவதற்காகவே வேலைக்கு சென்றாக வேண்டும். இப்படிப்பட்ட சூழலில் சொந்த வீடு வாங்குவது சிறந்ததா? அல்லது வாடகை வீட்டிலேயே தங்கி விடலாமா என்ற விவாதம் எழுவதை மறுக்க முடியாது. இதனை இரண்டு உதாரணங்கள் மூலம் நாம் புரிந்து கொள்ளலாம்.

ராஜேஷ் என்பவருக்கு தற்போது 48 வயதாகிறது. அவர் கடந்த 2014 ஆம் ஆண்டு பெங்களூரிலிருந்து மும்பைக்கு இடம்பெயர்ந்தார். வேலை நிமித்தமாக மும்பை சென்ற அவர் அங்கேயே குடும்பத்துடன் செட்டிலாகி விட்டார். அப்போது மாதத்திற்கு 35 ஆயிரம் ரூபாய் வாடகைக்கு வீடு எடுத்திருந்தார். இந்த வாடகை பணத்தை நாம் மாதாந்திர இஎம்ஐ தொகையாக செலுத்தலாம் என திட்டமிட்ட அவர் வங்கியில் கடன் வாங்கி ஒரு அடுக்குமாடி குடியிருப்பை வாங்குகிறார்.
60 லட்சம் ரூபாய்க்கு வாங்கிய வீட்டுக் கடனுக்கு அவர் மாதம் தோறும் 60 ஆயிரம் ரூபாயை இஎம்ஐ செலுத்தி வருகிறார். இவ்வாறு சொந்த வீடு வைத்திருப்பதன் மூலம் தன்னுடைய பெயரில் ஒரு அசைக்க முடியாத சொத்து உருவாகி இருக்கிறது என அவர் சந்தோஷப்படுகிறார். இருந்தாலும் அடுத்த 15 ஆண்டு காலத்திற்கு அவர் தன்னுடைய வீட்டுக் கடனை செலுத்துவதற்காக வேலைக்கு சென்றாக வேண்டும்.
அதே வேளையில் மணி என்பவர் 38 வயதான நபர். அவர் வதோதராவில் இருக்கும் ஒரு நிறுவனத்தில் வேலை செய்கிறார். அவர் 10 ஆண்டுகளாக அங்கே வாடகைக்கு வீடு எடுத்து தங்கி இருக்கிறார். அவர் தான் சொந்த வீடு வாங்க போவதில்லை என்ற முடிவினை எடுத்திருக்கிறார். இதற்கு முக்கிய காரணமாக அவர் சொல்வது சொந்த வீடு வாங்க வேண்டும் என முடிவு செய்துவிட்டால் நான் என்னுடைய சேமிப்பில் இருந்து கணிசமான தொகையை அதற்கு டவுன் பேமெண்டாக ஒதுக்கியாக வேண்டும். மேலும் மாதந்தோறும் கணிசமான தொகையை இஎம்ஐ-ஆக செலுத்த வேண்டும் , நான் அதற்கு பதில் பல்வேறு முதலீடு கருவிகளில் முதலீடு செய்வதற்கு திட்டமிட்டுள்ளேன் என்கிறார்.
எதிர்காலத்தில் என்னுடைய தேவைக்கேற்ப எந்த ஊரில் வேண்டுமானாலும் சென்று வீடு வாடகைக்கு எடுத்து தங்கிக் கொள்ள முடியும் , ஒரு குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு என்னுடைய முதலீடு மூலம் கணிசமான தொகை எனக்கு லாபமாக கிடைக்கும் அதை வைத்து நான் என்னுடைய சொந்தமாக வீடு வாங்கி தங்கிக் கொள்ளலாம் என முடிவு செய்திருக்கிறேன் என கூறுகிறார்.
சொந்த வீடு வாங்க வேண்டும் என எண்ணுபவர்கள் முதலில் தாங்கள் அந்த ஊரில் தான் செட்டிலாக போகிறோமா அல்லது அடுத்த 10 ஆண்டு காலத்திற்கு இந்த ஊரிலே தான் தொடர்ந்து தங்கி இருக்க போகிறோமா என்பதை தீர்மானிக்க வேண்டும். சொந்த வீடு வாங்குவது என்பது கோடிக்கணக்கான இந்தியர்களின் கனவு. இது உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மத்தியில் ஒரு வித அந்தஸ்தை நமக்கு தருகிறது. இருந்தாலும் இதற்காக நாம் வங்கியில் கடன் வாங்குகிறோம் எனும் போது நீண்ட காலத்திற்கு அந்த கடனை திரும்ப செலுத்தியாக வேண்டி இருக்கும். இதற்காக பல்வேறு தியாகங்களை செய்ய வேண்டி இருக்கும்.
ஆனால் உங்கள் பெயரில் ஒரு சொத்து கிடைக்கிறது, அந்த வீட்டின் உரிமையாளராக நீங்கள் இருப்பீர்கள். உங்கள் விருப்பத்திற்கு ஏற்ப அந்த வீட்டினுள் எந்தவிதமான வடிவமைப்பையும் நீங்கள் மாற்றி அமைத்துக் கொள்ளலாம். ஆனால் இது உடனடியாக பணமாக்க முடியாத ஒரு சொத்து என்பதை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.சொந்த வீடு என வரும்போது அதற்கான பராமரிப்பு செலவுகளும் உடன் வருகிறது என்பதை நினைவில் வைத்துக் கொள்வது நல்லது.
வாடகை வீடு என்றால் நம்முடைய வாழ்க்கை தரம் உயர உயர அதற்கு ஏற்ற வீட்டிற்கு நாம் மாறலாம. நம்முடைய வேலைக்கு ஏற்ப அல்லது பிள்ளைகளின் பள்ளிக்கு ஏற்ப அருகிலேயே இருக்கும் வீட்டிற்கு நாம் வாடகைக்கு சென்று விடலாம். ஆனால் நம்முடைய பெயரில் எந்த ஒரு சொத்தும் உருவாகி இருக்காது. ஆனால் அந்த பணத்தை முறையாக திட்டமிட்டு வேறு முதலீடு கருவிகளில் முதலீடு செய்து ஒரு கணிசமான தொகையை சேர்த்து அதை வைத்து வீடு வாங்குவதற்கான வாய்ப்பு இருக்கிறது.
ஆனால் இவ்வாறு பணம் முதலீடு செய்து வீடு வாங்கும் திட்டம் இருந்தால் அதனை 30களில் இருப்பவர்கள் மேற்கொள்ளலாம். 40 வயதுகளில் இருப்பவர்களுக்கு இது சிறந்த முடிவை தராது. முதலீடு வளர்வதற்கு ஆண்டுகள் தேவை என்பதால் அதனையும் கருத்தில் கொள்ள வேண்டும்.
Story written by: Devika
More From GoodReturns

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!



Click it and Unblock the Notifications