சென்னை: சொந்த வீடு வாங்குவதா அல்லது வாடகை வீட்டிலேயே இருப்பதா இந்த குழப்பம் நம்மில் பலருக்கும் இருந்து வருகிறது. குறிப்பாக நவீன இளைஞர்கள் மத்தியில் இந்த குழப்பம் அதிகரித்துள்ளது. சொந்த வீடு வாங்குவதில் இருக்கும் பலன்கள் என்ன? வாடகை வீட்டில் இருப்பதன் பலன்கள் என்ன? என்பது குறித்து நாம் இந்த கட்டுரையில் விரிவாக தெரிந்து கொள்ள போகிறோம்.
சொந்த வீடு: சொந்தமாக ஒரு வீட்டை வாங்குகிறோம் எனும் போது அது உங்களுக்கு நீண்ட கால அடிப்படையில் ஒரு நிதி பாதுகாப்பையும் ஒரு சொத்துக்கு உங்களை உரிமையாளராகவும் மாற்றுகிறது. குறிப்பாக காலப்போக்கில் சொத்து மதிப்பு வளர்ச்சி அடையக்கூடிய பகுதியில் நாம் வீட்டையோ அல்லது அடுக்குமாடி குடியிருப்பையோ வாங்கி இருந்தால் அடுத்த வரக்கூடிய ஆண்டுகளில் அதன் மதிப்பு கண்டிப்பாக அதிகரிக்கும்.

ஆனால் சொந்த வீடு எனும் போது அத்துடன் வீட்டு வரி , வீட்டு பராமரிப்பு செலவு என்பன உள்ளிட்ட கூடுதல் செலவுகளும் நமக்கு வருகிறது. ஒருவேளை நீங்கள் வீடு வாங்கி அதனை வாடகைக்கு விடும் யோசனை இருந்தால் உங்களுக்கு வாடகை வருமானமும் கூடுதலாக கிடைக்கும்.
வீடு வாங்குவதற்காக நீங்கள் உங்கள் கையில் இருந்து ஒரு பெரிய தொகையை வழங்க வேண்டி இருக்கும். பெரும்பாலானவர்கள் மொத்த தொகையையும் கொடுத்து சொந்தமாக வீட்டையோ அல்லது அடுக்குமாடி குடியிருப்போ வாங்கக்கூடிய சூழலில் இருக்க மாட்டார்கள். எனவே ஒரு குறிப்பிட்ட தொகையை டவுன் பேமெண்டாக செலுத்திவிட்டு மீதமுள்ள தொகைக்கு நாம் வங்கிகளில் வீட்டுக் கடன் வாங்குவோம்.
பெரும்பாலும் இதற்காக நாம் செலுத்தக்கூடிய ஈஎம்ஐ தொகை நம்முடைய வீட்டு வாடகை தொகை அல்லது வாடகை வருமான தொகையை விட அதிகமாக தான் இருக்கும். எனவே அடுத்த சில ஆண்டுகளிலேயே நல்ல வளர்ச்சி இருக்கும் இடமாக பார்த்து வீடு வாங்குவது சிறந்தது என சொல்லப்படுகிறது.
மும்பை, பெங்களூரு போன்ற அதிக விலை கொண்ட நகரங்களில் பல கோடி ரூபாய்க்கு வீட்டினை வாங்குவதை விட இரண்டாம் நிலை நகரங்களில் சொந்தமாக வீடு வாங்குவது சிறந்த யோசனையாக இருக்கும் என சொல்லப்படுகிறது. ஏனெனில் இந்த பகுதிகளில் அடுத்த 10 ஆண்டுகளுக்குள் சொத்தின் விலை பல மடங்கு உயரும். ஆனால் இந்த முறையில் உங்களின் பணம் வீடு என்ற ஒரு முதலீட்டிலேயே முடங்கிவிடும்.
வாடகை வீடு: ஒருவேளை நீங்கள் வாடகை வீட்டிற்கு செல்ல வேண்டும் என முடிவெடுத்தால் ,நீங்கள் உங்களுடைய வாழ்க்கை முறை மாறுதல்களுக்கு ஏற்ப வீட்டினை மாற்றிக் கொள்ளலாம். குழந்தைகளின் பள்ளி, உங்களின் வேலை உள்ளிட்டவற்றுக்கு ஏற்றவாறு நீங்கள் வீட்டினை நினைத்தபொழுது மாற்றிக் கொள்ளலாம். மேலும் நீங்கள் ஒரு கணிசமான தொகையை ஒரு இடத்தில் முதலீடு செய்வது, ஈஎம்ஐ செலுத்த வேண்டிய கட்டாயம் ஆகியவை இருக்காது.
உங்களுடைய சம்பளத் தொகையை வாடகை மற்ற பிற செலவினங்கள் போக பிற முதலீட்டு கருவிகளில் நீங்கள் முதலீடு செய்யலாம் . பங்குச்சந்தை, மியூச்சுவல் ஃபண்ட் உள்ளிட்டவற்றில் நீங்கள் முதலீடு செய்ய முடியும். நீண்ட கால அடிப்படையில் இவை உங்களுக்கு நல்ல லாபத்தை வழங்கும்.
நீண்ட கால நோக்கில் பார்க்கும்போது சொந்த வீடும் , சரி வாடகை வீடும் சரி ஒருவரது வாழ்க்கை முறை மற்றும் அவர்களுடைய முதலீட்டு இலக்குகள் ஆகியவற்றை பொறுத்து லாபம் வழங்கக்கூடியவையாகத்தான் இருக்கும் என்கின்றனர் இந்த துறையில் இருப்பவர்கள்.
வாடகை வீட்டில் குடியிருப்பவர்கள் ஒரு கணிசமான தொகையை பன்முகத்தன்மை கொண்ட முதலீட்டு கருவிகளில் முதலீடு செய்திருப்பார்கள். அதுவே சொந்த வீடு வாங்குபவர்களுக்கு அவர்களுக்கு ஒரு மதிப்பு மிக்க ஒரு சொத்தின் உரிமையாளராக இருப்பார்கள்.
Story written by: Devika
More From GoodReturns

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!



Click it and Unblock the Notifications