கிராமப்புறங்கள் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் வசிப்பவர்கள் வேலை வாய்ப்பு, கல்வி என பலவற்றுக்கும் இந்தியாவின் முக்கிய நகரங்களுக்கு குடிபெயர்கின்றனர். அதில் சிலர் சென்னை, டெல்லி, பெங்களூரு போன்ற நகரங்களைக் நோக்கி நகர்கின்றனர். இதன் காரணமாக சில நகரங்களில் வாடகை செலவுகள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்தியாவின் 7 முக்கிய நகரங்களில் கடந்த 6 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வாடகை செலவு 70 சதவீதம் அதிகரித்துள்ளது.
சமீபத்தில் வெளியான அனராக் அறிக்கையின் படி வீடு வாங்குபவர்களின் விருப்பங்களில் மிகப்பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. அதிகமான மக்கள் பெரிய அளவிலான சொத்துக்களை வாங்க விரும்புவதாகவும் அறிக்கை தெரிவிக்கிறது.

14 நகரங்களில் உள்ள 24 முதல் 78 வயதுக்குட்பட்ட 7615 பேரிடம் அனராக் அறிக்கைக்கான கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதில் டெல்லியில் 52 சதவீதம் 3BHK குடியிருப்புகளையும், 38 சதவீதம் பேர் 2BHK குடியிருப்புகளையும் வாங்க விரும்புவதாக தெரிவித்துள்ளனர்.
கணக்கெடுப்புக்கு பதில் அளித்தவர்களில் அதிகமான நபர்கள் பிற முதலீட்டு திட்டங்களை விட ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்ய விரும்புகின்றனர். 59 சதவீதம் பேர் ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்வதையும், 31 சதவீதம் பேர் பங்குகளில் முதலீடு செய்வதையும் விரும்புவதாக ஆராய்ச்சி கூறுகிறது.
தென்னிந்தியாவில் உள்ள மக்களில் மூன்றில் ஒருவர் சென்னை, பெங்களூர் மற்றும் ஹைதராபாத்தில் வீட்டுமனைகளை வாங்க விரும்புகின்றனர் என்றும் அறிக்கை கூறுகிறது. அதில் சில முதலீட்டாளர்கள் தங்களுடைய தனிப்பட்ட பயன்பாட்டிற்காக சொத்துக்களை வாங்குவதைவிட வாடகை வருமானம், மறு விற்பனை போன்ற விஷயங்களுக்காகவும் சொத்துக்களை வாங்குகின்றனர். கணக்கெடுப்பின்படி 57 சதவீதம் பேர் வாடகை வருமானத்திற்காக ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்கின்றனர். 20 சதவீதம் பேர் சொத்துக்களை வாங்கி மறு விற்பனை செய்து லாபம் பெற முயற்சிக்கின்றனர் என்று தெரியவந்துள்ளது.
என்னதான் சொத்துக்களின் விலை அதிகரித்தாலும் பதில் அளித்தவர்களில் 51 சதவீதம் பேர் பெரிய அளவிலான வீடுகளை வாங்க விரும்புகின்றனர். அதிலும் குறிப்பாக 3 BHK வீடுகளை வாங்குவதையே விரும்புகின்றனர். நெரிசலான பகுதிகள், மோசமான கட்டுமான தரம் மற்றும் மோசமான இருப்பிடங்கள் ஆகியவற்றின் காரணமாக மலிவு விலையில் கிடைக்கும் ரியல் எஸ்டேட்டில் 53 சதவீதம் பேருக்கு விருப்பமில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல வீட்டுக்கடன் வட்டி விகிதங்கள் 9 சதவீதத்தை தாண்டி இருப்பதும் பல வீடு வாங்கும் நபர்களிடையே தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இதுவும் 87 சதவீத மக்கள் வீடு வாங்கும் முடிவை தள்ளிப் போடுவதற்கு ஒரு முக்கிய காரணமாக அமைந்திருக்கிறது.
More From GoodReturns

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை: மதுரையில் அதிரடி சரிவு! மார்ச் 23, 2026 நிலவரம் மற்றும் எதிர்கால கணிப்புகள் வெளியானது



Click it and Unblock the Notifications