நீங்கள் கடினமாக உழைத்தால் எதையும், எல்லாத்தையும் அடைவது சாத்தியம் என்று ஊக்கப்படுத்தும் வகையில் பலர் பேசியிருப்பதை கேட்டு இருப்போம். இயல்பு வாழ்க்கையில் அதனை சாதித்து காட்டிய ஏராளமான மக்கள் உள்ளனர். அவர்களில் ஒருவர்தான் ரேணுகா ஆராத்யா.
கர்நாடக மாநிலம் பெங்களூருக்கு அருகில் உள்ள கிராமமான கோபசந்திராவில் மிகவும் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தவர் ரேணுகா ஆராத்யா. அவரது தந்தை ஒரு அர்ச்சகர் மற்றும் குடும்பத்தினருக்கு 3 வேளை உணவு கூட கொடுக்க முடியாதவராக இருந்தார். கடுமையான வறுமைக்கு மத்தியிலும் ரேணுகா ஆராத்யா தட்டு தடுமாறி 10ம் வகுப்பு முடித்தார்.

அவரது தந்தை இறந்த பிறகு அவர் படிப்பை தொடருவது என்பது கானல் நீராகி விட்டது. குடும்ப சூழ்நிலை காரணமாக ஒரு வீட்டில் உதவியாளராக வேலை செய்தார். அதன் பிறகு அர்ச்சகராக பணியாற்ற தொடங்கினார்.
வீடு வீடாக சென்று அரிசி, மாவு மற்றும் பருப்பு உள்ளிட்ட பொருட்களை உதவியாக கேட்டு வாழ்ந்து வந்தார். இப்படியே சென்றால் பிழைப்பது கடினம் என்பதை உணர்ந்தார். இதனையடுத்து ஒரு காவலாளியாக வேலை செய்தார். இதற்கிடையில் சிறிது நேரம் இயந்திர இயக்கத்தை கற்றுக் கொண்டார். லேத் மெஷின் தொழிற்சாலையில் வேலை பெற்றார். அதன் பிறகு அவர் ஒரு பிளாஸ்டிக் தொழிற்சாலையில் வேலை செய்தார்.
20 வயதில் அவருக்கு கல்யாண ஆசை பிறந்தது. திருமணம் செய்தால் கூடுதல் பொறுப்புடன் பணியாற்ற தூண்டும் என்று நம்பினார். பிளாஸ்டிக் தொழிற்சாலையில் பணிபுரியும் போது, சொந்தமாக தொழில் தொடங்கும் எண்ணம் வந்தது.
மேலும் சூட்கேஸ் கவர்களை விற்க முடிவு செய்தார். ஆனால் அது அவரை பெரிய பள்ளத்தில் தள்ளியது, ரூ.30,000 நஷ்டம் ஏற்பட்டது. இந்த தோல்வி அவரை மீண்டும் காவலாளி வேலையை செய்யும் நிலைக்கு தள்ளியது. இருப்பினும் தொழிலில் நஷ்டம் அடைந்த பணத்தை அவரால் மீட்க முடியவில்லை. இதனையடுத்து டிரைவிங் கற்றுக் கொண்டு டிரைவராக மாறி சம்பாதிக்கலாம் என்று முடிவு செய்தார்.
அதன்படி, டிரைவிங் கற்றுக்கொண்டு ஒரு டிராவல் ஏஜென்சியில் டிரைவராக சேர்ந்தார். இது அவரது வாழ்க்கையில் பெரிய திருப்புமுனையாக அமைந்தது. அந்த ஏஜென்சியில் டிரைவராக பணியாற்றிய போது வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை அழைத்து செல்வது வழக்கம்.
அவருக்கு சம்பளத்தை தவிர நல்ல டிப்ஸ் கிடைக்க தொடங்கியது. அந்த நிறுவனத்தில் 4 ஆண்டுகள் பணிபுரிந்தார். அந்த அனுபவம் அவருக்கு ஒரு புதிய நம்பிக்கையை கொடுத்தது. ஒரு சுற்றுலா ஏஜென்சியை தொடங்க முடிவு செய்தார்.
பிரவாசி கேப்ஸ் பிரைவேட் லிமிடெட் என்ற பெயரில் ஒரு நிறுவனத்தை தொடங்கினார். இதற்காக தனது சொந்த பணத்தை முதலீடு செய்தார் மற்றும் சில வங்கிகளில் உதவியும் (கடன்) பெற்றார். சொந்தமாக தனது முதல் காரை வாங்கினார். வணிகம் நன்றாக சென்றதால் அடுத்த ஆண்டில் மேலும் ஒரு காரை வாங்கினார்.
இதற்கிடையில் ஒரு டிராவல்ஸ் நிறுவனம் தனது தொழிலை விற்பனை செய்ய முயற்சிப்பது ரேணுகா ஆராத்யாவுக்கு தெரியவந்தது. உடனே அந்த நிறுவனத்தை ரூ.6 லட்சத்துக்கு அவர் வாங்கினார். அந்த நிறுவனத்தில் அப்போது 32 வண்டிகள் இருந்தன. அவரின் துணிச்சலான இந்த முடிவு அதிர்ஷ்டமாக மாற தொடங்கியது.
அமேசான் இந்தியா நிறுவனம் தனது விளம்பரத்துக்காக இவரது நிறுவனத்தை தேர்ந்தெடுத்தது. வால்மார்ட், ஜெனரல் மோட்டார்ஸ் போன்ற நிறுவனங்களும் அவருடன் இணைந்து பணியாற்ற தொடங்கின. படிப்படியாக நிறுவனத்தின் வருவாய் அதிகரிக்க தொடங்கியது தற்போது ரூ.40 கோடியை தாண்டியது. இன்று இவரது நிறுவனத்தில் 150க்கும் மேற்பட்டோர் வேலை பார்த்து வருகின்றனர்.
More From GoodReturns

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

PF கணக்கில் வரும் 5 மேஜர் மாற்றங்கள்!! EPFO 3.0இல் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் என்னென்ன?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?



Click it and Unblock the Notifications