கடன் வாங்கியோருக்கு செம குட் நியூஸ்.. வரப்போகும் ரெப்போ வட்டி விகித மாற்றம்.. யார் யாருக்கு லாபம்?

இந்திய ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டி விகிதத்தை மேலும் குறைக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி கொடுக்கும் கடனின் அடிப்படையில் ரெப்போ வட்டி விகிதம் கணக்கிடப்பட்டு வருகிறது. ரெப்போ வட்டி விகிதத்தை ரிசர்வ் வங்கி குறைக்கும்போது, நாட்டில் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் வீடு, கார் ஆகியவற்றுக்கு கடன் பெற்றவர்களுக்கான வட்டி குறைக்கப்படும். இதனால், கடன் தொகை அல்லது கடனுக்கான தவணை குறையும்.

அந்த வகையில், வரும் ஆகஸ்ட் மாதம் நடைபெற உள்ள நிதி கொள்கைக் கூட்டத்தில் ரெப்போ வட்டி விகிதத்தை 25 அடிப்படை புள்ளிகளை ரிசர்வ் வங்கி குறைக்கலாம் என்று ஐசிஐசிஐ வங்கி கூறியுள்ளது. அதன்படி, வட்டி விகிதம் தற்போது 5.5%ஆக உள்ளது. வட்டி விகிதம் குறையும்போது, கடன் வாங்குவது மிகவும் சுலபமாகும். இதனால், வியாபாரம் மற்றும் மக்களின் பொருளாதாரம் உயரும். அதேபோல் வீடு வாங்குவதற்கும், வாகனம் வாங்குவதற்கும் கடன் எடுக்க இருப்போரும் இதன் மூலம் பயனடைய வாய்ப்புள்ளது.

கடன் வாங்கியோருக்கு செம குட் நியூஸ்.. வரப்போகும் ரெப்போ வட்டி விகித மாற்றம்.. யார் யாருக்கு லாபம்?

இதற்கிடையே, இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி குறித்து வெளியான புதிய அறிக்கையின் படி, "நகரப் பகுதிகளில் பொருட்கள் வாங்கும் தேவை இப்போது குறைந்து இருக்கிறது. ஆனால், கிராமப்புறங்களில் பொருட்கள் வாங்கும் தேவைகள் இன்னும் அதிகமாகத்தான் உள்ளன. அமெரிக்காவுக்கு இந்தியா ஏற்றுமதி செய்யும் பொருட்கள் சிறப்பாக வளர்ச்சி அடைந்துள்ளன. ஆனால், மற்ற நாடுகளுக்கு இந்தியா ஏற்றுமதி செய்வதில் இன்னும் சிக்கல்கள் நீடித்து வருகின்றன. தற்போதைய பணவீக்கத்தை கருத்தில் கொண்டு, இந்திய ரிசர்வ் வங்கி (RBI) ஆகஸ்ட் மாதம் வட்டி விகிதத்தை 0.25% குறைப்பது சரியான நேரம் என ஐசிஐசிஐ தெரிவித்துள்ளது.

அந்த வகையில், பணவீக்கத்தின் அடிப்படையில் நிகழாண்டில் ரெப்போ விகிதத்தை 100 அடிப்படை புள்ளிகள் வரை ரிசர்வ் வங்கி குறைத்துள்ளது. கடந்த முறை நடைபெற்ற நிதி கொள்கைக் கூட்டத்தில், இந்திய ரிசர்வ் வங்கி ரெப்போ விகிதத்தை 50 அடிப்படைப் புள்ளிகள் வரை குறைந்தது. இதன் தொடர்ச்சியாக நிகழாண்டில் 4.6%ஆக இருக்கும் பணவீக்கம், 2026ஆம் ஆண்டில் சராசரி 3 முதல் 3.2%ஆக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பணவீக்கம் சாதகமாக இருப்பதால், இந்திய ரிசர்வ் வங்கி ரெப்போ விகிதத்தை மேலும் 25 அடிப்படைப் புள்ளிகள் குறைக்கும் என்று தகவல் வெளியாகியுள்ளது. ஆகஸ்ட் மாதத்தில் நடைபெறும் நிதி கொள்கைக் கூட்டத்திற்கு பிறகு இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாக உள்ளது.

உலகளாவிய பொருளாதாரம் குறித்த எச்சரிக்கை : உலகளாவிய பொருளாதாரம் தற்போது மாறிக்கொண்டே இருப்பதால், குழப்பமான சூழல் உருவாகியுள்ளது. கடந்த மாதம் மத்திய கிழக்கில் ஏற்பட்ட ஒரு சிறிய மோதல் காரணமாக, எண்ணெய் விலை திடீரென அதிகரித்தது. இது உலகளவில் செலவுகளை உயர்த்தும் அபாயத்தை உண்டாக்குகிறது.

அதேபோல், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ள வரிகள் ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல் அமலுக்கு வரவுள்ளன. இவை தற்போதுள்ள வரிகளை விட உயர்ந்தவை ஆகும். இது அமெரிக்காவின் பணவீக்கத்தில் ஏற்கனவே தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் பொருளாதாரம் எதிர்பார்த்ததை விட நல்ல முறையில் செயல்பட்டாலும், வளர்ச்சி குறைந்து வருவதாக தெரிகிறது.

இந்த சூழலில், அமெரிக்காவின் மத்திய வங்கி (Federal Reserve) தற்போது வட்டி விகிதத்தை குறைக்கவில்லை. ஆனால், வருங்காலத்தில் வளர்ச்சி மேலும் வீழ்ந்தால், இந்தாண்டு இறுதிக்குள் வட்டி விகிதம் குறைக்கப்படலாம் என கூறப்படுகிறது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+