ரிசர்வ் வங்கியின் நாணயக் கொள்கைக் குழு (MPC) இன்று ஒருமனதாக ரெப்போ வட்டி விகிதத்தை 25 அடிப்படை புள்ளிகள் குறைத்து 6% ஆக நிர்ணயித்துள்ளது. இந்த புதிய வட்டி விகிதம் உடனடியாக அமலுக்கு வரும் என்று ஆர்பிஐ கவர்னர் சஞ்சய் மல்ஹோத்ரா அறிவித்துள்ளார்.
இந்த வட்டி விகித குறைப்பு பல்வேறு வகையான கடன்களைப் பெற்றிருப்பவர்கள் மற்றும் புதிதாகக் கடன் வாங்கத் திட்டமிட்டுள்ளவர்கள் மீது எந்த மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும்..? யாருக்கெல்லாம் உண்மையிலேயே பலன் கிடைக்கும்..? பலன் கிடைக்காத பட்சத்தில் புதிய வரி குறைப்பின் கீழ் பலன் பெற என்ன செய்ய வேண்டும் என்பதை விரிவாகப் பார்ப்போம்.

வீட்டுக் கடன் (Home Loan): ரெப்போ வட்டி விகிதம் குறைக்கப்பட்டிருப்பதால், வங்கிகள் மற்றும் வீட்டு வசதி நிதி நிறுவனங்கள் (HFCs) தங்களது வீட்டுக் கடன்களுக்கான வட்டி விகிதத்தைக் குறைக்க வாய்ப்புள்ளது. ஆர்பிஐ நாட்டின் வளர்ச்சிக்காக வட்டி விகிதத்தைக் குறைத்தாலும், வங்கிகள் இந்த வட்டி குறைப்பு பலன்களை வாடிக்கையாளர்களுக்கு அளிப்பது என்பது ஒவ்வொரு வங்கி நிர்வாகத்தின் தனிப்பட்ட முடிவு.
இந்த நிலையில் வணிக வங்கிகள் ஆர்பிஐ கொடுத்த ரெப்போ விகித பலனை மக்களுக்கு முழுமையாகக் கொடுக்கும் பட்சத்தில் ஏற்கனவே வீட்டுக் கடன் பெற்றிருப்பவர்கள், குறிப்பாக மிதக்கும் வட்டி விகிதத்தில் (Floating Interest Rate) கடன் வாங்கியிருப்பவர்களின் மாதாந்திர தவணைத் தொகை (EMI) குறையக்கூடும்.
வங்கிகள் இந்த வட்டி குறைப்பின் பலனை வாடிக்கையாளர்களுக்கு எப்போது மற்றும் எந்த அளவிற்கு வழங்குவார்கள் என்பது அந்தந்த வங்கியின் கொள்கையைப் பொறுத்தது. இருப்பினும், ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது, வீட்டுக் கடன் வாங்குவது எளிதாகும், வீட்டுக் கடனுக்கான ஈஎம்ஐ மலிவாகும். இதேபோல் புதிய வீட்டுக் கடன் வாங்குபவர்கள் குறைந்த வட்டி விகிதத்தில் கடன் பெற வாய்ப்புள்ளது.
வாகனக் கடன் (Car Loan & Bike Loan): வீட்டுக் கடன்களைப் போலவே, வாகனக் கடன்களுக்கான வட்டி விகிதமும் குறைய வாய்ப்புள்ளது. கார் மற்றும் இருசக்கர வாகனம் வாங்கத் திட்டமிட்டிருப்பவர்களுக்கு இது ஒரு நல்ல செய்தியாகும். வட்டி விகிதம் குறைவதால், அவர்களின் மாதாந்திர தவணைத் தொகை குறையும், இதனால் வாகனம் வாங்குவது சற்று எளிதாக இருக்கும். ஏற்கனவே வாகனக் கடன் பெற்றிருப்பவர்கள், மிதக்கும் வட்டி விகிதத்தைத் தேர்ந்தெடுத்திருந்தால், அவர்களது EMI தொகையிலும் குறைவு ஏற்படும்.
தங்க நகை கடன் (Gold Loan): தங்க நகைக் கடன்களின் வட்டி விகிதம் ரெப்போ விகித மாற்றங்களால் நேரடியாகப் பாதிக்கப்பட வாய்ப்புகள் குறைவு. ஏனெனில், தங்கக் கடன்களின் வட்டி விகிதம் பெரும்பாலும் தங்கத்தின் விலை, கடன் தொகை மற்றும் கடன் காலத்தைப் பொறுத்து நிர்ணயிக்கப்படுகிறது.
இருப்பினும், ஒட்டுமொத்த கடன் சந்தையில் ஏற்படும் வட்டி குறைப்பின் காரணமாக, தங்கக் கடன்களின் வட்டி விகிதத்திலும் ஒரு சிறிய குறைவு ஏற்பட வாய்ப்புள்ளது. இது தங்க நகைக் கடன் வாங்குபவர்களுக்குச் சிறிய அளவிலான நிவாரணத்தை அளிக்கலாம்.
நீங்கள் ஏற்கனவே வாங்கிய தங்கக் கடனுக்கான வட்டி விகிதம் குறையவில்லை எனில், அக்கடனை அடைத்துவிட்டு அடுத்த நாள் அதே நகையை புதிய வட்டி விகிதத்தில் கடன் பெறும் போது சலுகை கிடைக்கலாம்.
தனிநபர் கடன் (Personal Loan): தனிநபர் கடன்களின் வட்டி விகிதம் பொதுவாக மற்ற கடன்களை விட அதிகமாக இருக்கும். ரெப்போ வட்டி விகிதம் குறைக்கப்பட்டாலும், தனிநபர் கடன்களின் வட்டி விகிதத்தில் பெரிய அளவில் மாற்றம் இருக்க வாய்ப்பில்லை. ஏனெனில், இவை பெரும்பாலும் நிலையான வட்டி விகிதத்தில் (Fixed Interest Rate) வழங்கப்படுகின்றன.
இருப்பினும், புதிய தனிநபர் கடன் வாங்குபவர்களுக்கு வங்கிகள் சற்று குறைந்த வட்டி விகிதத்தை வங்கிகள் வழங்கலாம். ஏற்கனவே தனிநபர் கடன் பெற்றிருப்பவர்கள், வட்டி விகிதம் குறையுமா என்று எதிர்பார்த்தால், அதற்கு வாய்ப்புகள் குறைவே. அவர்கள் விரும்பினால், தங்களது பழைய கடனை குறைந்த வட்டி விகிதம் வழங்கும் வேறு வங்கிகளுக்கு மாற்றுவது அல்லது தற்போதைய கடனை அடைத்துவிட்டு புதிய கடனை குறைந்த வட்டியில் வாங்குவது குறித்து யோசிக்கலாம். ஆனால் பிரசசிங் கட்டணம் இருப்பதை மறந்துவிடாதீர்கள்.
ரிசர்வ் வங்கியின் இந்த ரெப்போ வட்டி விகித குறைப்பு, ஒட்டுமொத்த பொருளாதாரத்தில் ஒரு சாதகமான தாக்கத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வட்டி விகிதம் குறைவதால், கடன் வாங்குவது மலிவாகும், இது நுகர்வோரின் செலவழிக்கும் திறனை அதிகரிக்கும். இதன் மூலம் நாட்டில் வணிக நடவடிக்கை அதிகரிக்கும்.
மேலும், வணிக நிறுவனங்கள் குறைந்த வட்டியில் கடன் பெற்று தங்கள் தொழிலை விரிவுபடுத்தவும், புதிய முதலீடுகளை மேற்கொள்ளவும் இந்த ரெப்போ விகிதம் உதவும். இதன் மூலம் வேலைவாய்ப்புகள் அதிகரிக்கவும், பொருளாதார வளர்ச்சி மேம்படவும் வாய்ப்புள்ளது.
இருப்பினும், வங்கிகள் இந்த வட்டி குறைப்பின் பலனை வாடிக்கையாளர்களுக்கு எந்த அளவிற்கு விரைவாகவும் முழுமையாகவும் வழங்குகின்றன என்பதைப் பொறுத்தே இதன் உண்மையான மற்றும் விரைவான தாக்கம் இருக்கும்.
பல நேரத்தில் ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தைக் குறைத்த போதிலும், வங்கிகள் அதன் முழுப் பலனையும் வாடிக்கையாளர்களுக்கு வழங்குவதில் தாமதம் செய்துள்ளன அல்லது குறைவான பலனையே அளித்துள்ளது. எனவே, இந்த முறையாவது வங்கிகள் விரைந்து செயல்பட்டு, வட்டி குறைப்பின் பலனைப் பொதுமக்களுக்கு முழுமையாகக் கொண்டு சேர்க்க வேண்டுமா என்பதைப் பார்ப்போம்.
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!



Click it and Unblock the Notifications