இந்திய ரிசர்வ் வங்கியின் ஆறு உறுப்பினர்களைக் கொண்ட நாணய கொள்கை குழு (MPC) ரெப்போ விகிதத்தை 6.5% ஆக பராமரிக்கும் என இக்குழுவில் 6ல் 5 பேர் வாக்களித்துள்ளனர். இதன் மூலம் அடுத்த 2 மாதங்களுக்கு ரெப்போ விகிதம் தொடர்ந்து 6.5 சதவீதமாக இருக்கும், இதனால் வங்கிகளில் வீட்டுக் கடன், வாகன கடன் ஆகியவற்றின் மீதான வட்டி விகிதம் மாறாமல் இருக்கப்போகிறது.
2019 ஜூன் மாதத்தில் இருந்து முதல் முறையாக கொள்கை முடிவுகளை "நடுநிலை" ஆக மாற்றியுள்ளதாக ஆர்பிஐ கவர்னர் சக்தி காந்த தாஸ் தெரிவித்தார்.

இந்திய ரிசர்வ் வங்கி (RBI) ரெப்போ விகிதத்தை 6.5% இல் மாற்றாமல் தொடர்ந்து பத்தாவது கூட்டமாக அதன் 6.5 சதவீதம் என்ற நிலைப்பாட்டைத் தக்க வைத்துக் கொள்ள முடிவு செய்துள்ளது. இருப்பினும், மத்திய வங்கி தனது நாணய கொள்கை நிலைப்பாட்டை "Withdrawal Of Accommodation" என்பதிலிருந்து "நடுநிலை" (Netural) க்கு மாற்றியுள்ளது அனைவரும் கவனிக்க வேண்டிய ஒன்றாக உள்ளது. இந்த ஒரு மாற்றம் எதிர்கால வட்டி விகித முடிவுகளில் முக்கியமான தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியது.
மேக்ரோ பொருளாதார நிலைமைகள் மற்றும் எதிர்கால வாய்ப்புகள் பற்றிய முழுமையான மதிப்பீட்டிற்குப் பிறகு ரெப்போ விகிதத்தை மாற்றாமல் 6.5 சதவீத அளவீட்டைப் பராமரிக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. நாணயக் கொள்கைக் குழுவின் (MPC) ஆறு உறுப்பினர்களில் ஐந்து பேர் இந்த நிலைப்பாட்டை ஒப்புக்கொண்டனர்.
நாணய கொள்கை நிலைப்படை நியூட்ரல் நிலைப்பாட்டிற்கு மாறுவது, பணவீக்கப் போக்குகளின் அடிப்படையில் வட்டி விகிதங்களை மாற்றுவதற்கான நெகிழ்வுத்தன்மையை ரிசர்வ் வங்கிக்கு வழங்குகிறது. இது முந்தைய "Withdrawal Of Accommodation" நிலைப்பாட்டிற்கு முற்றிலும் மாறுபட்டது இந்த நடுநிலை மாற்றம். Withdrawal Of Accommodation முறையில் வட்டி குறைப்பிற்குப் பல தடைகள் உள்ளது.
ரெப்போ விகிதத்தை மாற்றாமல் பழைய நிலையைத் தக்க வைத்துக் கொண்டாலும், நடப்பு நிதியாண்டிற்கான பணவீக்க கணிப்பை ரிசர்வ் வங்கி திருத்தியுள்ளது. CPI பணவீக்கம் மூன்றாம் காலாண்டில் சராசரியாக 4.7% ஆகவும், நான்காவது காலாண்டில் 4.3% ஆகவும் இருக்கும் என்று ரிசர்வ்வ வங்கி இப்போது எதிர்பார்க்கிறது, இது முந்தைய மதிப்பீட்டை விட சற்று அதிகமாகும். இருப்பினும், பணவீக்கம் படிப்படியாக அதன் இலக்கான 4% உடன் +/- 2% வரம்பிற்குள் சீரமைக்கும் என்று RBI நம்பிக்கை கொண்டுள்ளது.
ரெப்போ விகிதத்திற்குக் கூடுதலாக, ரிசர்வ் வங்கி எஸ்டிஎஃப் விகிதத்தை 6.25% ஆகவும், விளிம்பு நிலை வசதி (எம்எஸ்எஃப்) விகிதம் மற்றும் வங்கி விகிதத்தை 6.75% ஆகவும் வைத்திருக்கிறது.
ஒட்டுமொத்தமாக, RBI தனது நிலைப்பாட்டை நடுநிலைக்கு மாற்றும் அதே வேளையில் ரெப்போ விகிதத்தைப் பராமரிக்கும் முடிவு, பணவீக்கத்தில் ஸ்திரத்தன்மையை அடைவதற்கும் பொருளாதார வளர்ச்சியை ஆதரிப்பதற்கும் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது. ரிசர்வ் வங்கியானது மேக்ரோ பொருளாதார வளர்ச்சிகளை நெருக்கமாகக் கண்காணித்த பின்பே இந்த முடிவை எடுத்துள்ளது.


Click it and Unblock the Notifications