இந்திய ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் தலைமையில் நடந்த இரண்டு நாள் நாணய கொள்கை கூட்டம் டிசம்பர் 6ஆம் தேதி துவங்கி, இக்கூட்டத்தின் முடிவுகள் டிசம்பர் 8 ஆம் தேதி வெளியிடப்பட்டது.
சந்தை கணிப்புகளுக்கு இணங்க ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் தலைமையில் நாணய கொள்கை குழு ரெப்போ விகிதத்தில் எவ்விதமான மாற்றமும் செய்யாமல் 6.5 சதவீதமாக அறிவித்துள்ளது. இதனால் ரீடைல் வங்கி வட்டி விகிதத்தில் எவ்விதமான மாற்றமும் இருக்காது.

ரிசர்வ் வங்கியின் ரெப்போ விகிதத்தை அடிப்படையாக வைத்துத் தான் வங்கிகள் தனது கடன் சேவைக்கான வட்டி விகிதத்தை நிர்ணயம் செய்யும் வேளையில் 6.5 சதவீத ரெப்போ விகிதத்தை 5வது MPC கூட்டத்தில் எவ்விதமான மாற்றமும் இல்லாமல் அறிவிக்கப்பட்டு உள்ளது.
எனவே வீட்டுக் கடன், வாகன கடன், நகை கடன், பர்சனல் லோன் என அனைத்து கடனுக்கான வட்டி விகிதம் உயர்ந்து மக்கள் வாங்கிய கடனுக்கான ஈஎம்ஐ தொகையில் எவ்விதமான மாற்றமும் இருக்காது. ஏப்ரல், ஜூன், ஆகஸ்ட் கூட்டத்தில் ஆர்பிஐ தனது வட்டி விகிதத்தை உயரத்தாத நிலையில் அக்டோபர் மாதமும் இதில் இணைந்துள்ளது.
ஆர்பிஐ முடிவைத் தொடர்ந்து வங்கிகள் வட்டி விகிதத்தை உயர்த்தவில்லை எனில் மக்கள் வாங்கிய கடனுக்கான ஈஎம்ஐ தொகையில் எவ்விதமான மாற்றமும் இருக்காது. ஏப்ரல், ஜூன், ஆகஸ்ட், அக்டோபர் கூட்டத்தில் ஆர்பிஐ தனது வட்டி விகிதத்தை உயரத்தாத நிலையில் டிசம்பர் மாதமும் இதில் இணைந்துள்ளது.
ஆர்பிஐ கவர்னர் இக்கூட்டத்தில் நாணய கொள்கை மூலம் நாட்டின் பணப்புழக்கத்தையும் கட்டுப்படுத்தியதன் மூலம் நாட்டின் பணவீக்கம் பெரிய அளவில் குறைந்துள்ளது என்று சக்திகாந்த தாஸ் தெரிவித்தார். டிசம்பர் மாதத்தில் உணவு பணவீக்கம் மீண்டும் உயர வாய்ப்புகள் உள்ளது எனவும் நாணய கொள்கை கூட்டத்தின் முடிவின் போது தெரிவித்தார்.
2024 ஆம் நிதியாண்டின் பணவீக்க டார்கெட் அளவான 5.4 சதவீதத்தில் எவ்விதமான மாற்றமில்லாமல் அறிவித்த ஆர்பிஐ, நாட்டின் பொருளாதார வளர்ச்சி இலக்கை முந்தை 6.5 சதவீத அளவீட்டில் இருந்து 7 சதவீதமாக உயர்த்தியுள்ளது.
மேலும் நாட்டின் பணவீக்கத்தை 4 சதவீதமாகக் குறைக்கும் இலக்கை இன்னும் அடையவில்லை எனவும் ஆர்பிஐ கவர்னர் இக்கூட்டத்தில் தெரிவித்தார். இதேபோல் டிசம்பர் மாதத்தில் உணவு பணவீக்கம் உயர்ந்தால் அடுத்த நாணய கொள்கை கூட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்தார்.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!



Click it and Unblock the Notifications