இந்திய ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் தலைமையில் நடந்த இரண்டு நாள் நாணய கொள்கை கூட்டம் அக்டோபர் 4 ஆம் தேதி தொடங்கிய நிலையில் இன்று இக்கூட்டத்தின் முடிவுகள் வெளியிடப்பட்டது.
சந்தை கணிப்புகளுக்கு இணங்க ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் தலைமையில் நாணய கொள்கை குழு ரெப்போ விகிதத்தில் எவ்விதமான மாற்றமும் செய்யாமல் 6.5 சதவீதமாக அறிவித்துள்ளது. இதனால் ரீடைல் வங்கி வட்டி விகிதத்தில் எவ்விதமான மாற்றமும் இருக்காது.

எனவே வீட்டுக் கடன், வாகன கடன், நகை கடன், பர்சனல் லோன் என அனைத்து கடனுக்கான வட்டி விகிதம் உயர்ந்து மக்கள் வாங்கிய கடனுக்கான ஈஎம்ஐ தொகையில் எவ்விதமான மாற்றமும் இருக்காது. ஏப்ரல், ஜூன், ஆகஸ்ட் கூட்டத்தில் ஆர்பிஐ தனது வட்டி விகிதத்தை உயர்த்தாத நிலையில் அக்டோபர் மாதமும் இதில் இணைந்துள்ளது.
இன்று இரு நாள் நாணய கொள்கை கூட்டத்தின் முடிவில் 2025 ஆம் நிதியாண்டின் முதல் காலாண்டில் நாட்டின் ஜிடிபி வளர்ச்சி 6.6 சதவீதமாக இருக்கும் என ஆர்பிஐ கவர்னர் சக்திகாந்த தாஸ் தெரிவித்தார். இதோடு 2024 ஆம் நிதியாண்டில் இந்தியாவின் ஜிடிபி வளர்ச்சி எவ்விதமான மாற்றமும் இல்லாமல் 6.5 சதவீதமாக இருக்கும் எனவும் கூறினார்.
மேலும் இந்திய உற்பத்தி வளர்ச்சி பாதையில் இருப்பதாகவும், சேவை துறை தடுமாற்றத்தில் இருப்பதாகவும். செப்டம்பர் மாதம் நாட்டின் பணவீக்கம் தொடர்ந்து குறையும் என்றும் கூறினார். இந்தியாவில் பணவீக்கம் எதிர்பார்க்கப்பட்டதை விடவும் கூடுதலான காலம் நீடிக்கும் எனவும் குறிப்பிட்டார்.
மேலும் 2024 ஆம் நிதியாண்டில் இந்தியாவின் பணவீக்க அளவுக்கு 5.4 சதவீதமக இருக்கும் எனவும் ஆர்பிஐ கணித்துள்ள நிலையில் 2024 ஆம் நிதியாண்டில் 2வது காலாண்டில் 6.5 சதவீதமாகவும், 3வது காலாண்டில் 5.6 சதவீதமாகவும், 4வது காலாண்டில் 5.2 சதவீதமாகவும், 2025 ஆஅம் நிதியாண்டின் முதல் காலாண்டில் 5.2 சதவீதமாக இருக்கும் என ஆர்பிஐ கணித்துள்ளது.
இன்றைய கூட்டத்தில் ஆர்பிஐ கவர்னர் சக்திகாந்த தாஸ் இந்தியாவில் இருக்கும் அர்பன் கூட்டுறவு வங்கிகளில் தங்க கடனுக்கான அளவு 21000 ரூபாயில் இருந்து 41000 ரூபாயாக உயர்த்தப்பட்டு உள்ளது என அறிவித்தார்.


Click it and Unblock the Notifications