இந்திய ரிசர்வ் வங்கியின் நாணய கொள்கை குழு (MPC) டிசம்பர் 4 ஆம் தேதி தனது இரு மாதங்களுக்கு ஒருமுறை நடத்தும் பொருளாதார மதிப்பாய்வைத் தொடங்கியது, டிசம்பர் 6 ஆம் தேதி வெள்ளிக்கிழமை முடிவடைந்து 10 மணிக்கு ஆர்பிஐ கவர்னர் சக்திகாந்த தாஸ் முடிவுகளை வெளியிட்டார்..
பெரும்பாலான நிபுணர்களின் கருத்து போலவே, ரிசர்வ் வங்கி வெள்ளிக்கிழமை தற்போதைய பொருளாதாக நிலைகளை ஆய்வு செய்து ரெப்போ வட்டி விகிதங்களை மாற்றமில்லாமல் அறிவித்துள்ளது.

RBI பிப்ரவரி 2023 முதல் ரெப்போ விகிதத்தை 6.5% ஆக பராமரித்து வருகிறது, இதன் மூலம் இன்றைய கூட்டத்தையும் சேர்த்து 11வது முறையாக ரெப்போ விகிதம் மாற்றமில்லாமல் அறிவித்துள்ளது.
ரெப்போ விகிதத்தில் மாற்றமில்லை, 6.5 சதவீதம் அடுத்த 2 மாதங்களுக்கு தொடரும் என ஆர்பிஐ கவர்னர் சக்திகாந்த தாஸ் அறிவித்தார்.
ரெப்போ விகிதம் 6.5% ஆக நிலையாக வைக்கப்பட்டுள்ளது போல், நிரந்தர வைப்பு வசதி (SDF) விகிதம் 6.25% ஆகவும், MSF மற்றும் வங்கி விகிதம் 6.75% ஆகவும் மாற்றமின்றி தொடர்வதாக ஆர்பிஐ கவர்னர் சக்திகாந்த தாஸ் தெரிவித்தார்.
MPC தனது நாணய கொள்கை நிலைப்பாட்டையும் 'நடுநிலை'யாக வைத்திருக்கும் என அறிவித்துள்ளது மூலம், நாட்டின் பணவீக்கம் அதன் இலக்குடன் வைத்திருப்பதில் தெளிவாக இருப்பதை காட்டுகிறது. இதன் மூலம் நாட்டின் வளர்ச்சியையும் ஆதரிக்கும்.
ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் தனது உரையில், நாணய கொள்கை மக்களின் வாழ்க்கையை பாதிப்பதால் இது முக்கியமானது என்று கூறினார். "ஆர்பிஐ முயற்சிகள் அனைத்து நெகிழ்வான பணவீக்கத்தை பின்பற்றுவதாகும்" என்றும் அவர் கூறினார். "விலை நிலைத்தன்மை முக்கியமானது, ஆனால் அதே நேரத்தில் வளர்ச்சியும் முக்கியமானது" என்றும் அவர் கூறினார்.
ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் நாட்டின் உற்பத்தித் துறையில் உள்ள பலவீனங்கள் பரவலாக அனைத்து துறையிலும் இல்லை என்றும், சவால்கள் குறிப்பிட்ட சில பகுதிகளுக்கு மட்டுமே உள்ளதாகவும் முதலீட்டாளர்களுக்கு தெளிவுப்படுத்தினார்.


Click it and Unblock the Notifications