இந்திய ரிசர்வ் வங்கியின் இருமாத நாணய கொள்கைக் குழுவின் 2 நாள் கூட்டம் இன்று (ஏப்ரல் 5) முடிந்து காலை 10 மணிக்குக் இக்கூட்டத்தின் முடிவுகளை ஆர்பிஐ கவர்னர் சக்திகாந்த தாஸ் அறிவித்தார்.
இது 2024-25 ஆம் நிதியாண்டின் முதல் இருமாத நாணயக் கொள்கையாகும். ஏப்ரல் 1, 2024 முதல் நிதியாண்டில் மொத்தம் ஆறு MPC கூட்டங்கள் திட்டமிடப்பட்டுள்ளன. நாணய கொள்கைக் குழுவில் 6 பேர் உள்ளனர்.

இக்கூட்டத்தில் ரெப்போ விகிதத்தில் எவ்விதமான மாற்றத்தையும் அறிவிக்கவில்லை என்பதால் 7வது முறையாக வட்டி விகிதத்தை மாற்றாமல் வைத்திருக்கும். இதன் மூலம் அடுத்த 2 மாதத்திற்கு ரெப்போ விகிதம் 6.50 சதவீதமாக இருக்கும்.
நாணய கொள்கை கூட்டத்தின் முடிவில் வட்டி விகிதம் மாற்றம் குறித்து வழக்கமாகச் செய்யப்பட்டும் வாக்கெடுப்பில் 6ல் 5 பேர் வட்டி விகிதத்தைக் குறைக்க வேண்டாம் என அறிவித்ததைத் தொடர்ந்து வட்டி விகிதத்தை மாற்றப்படவில்லை.
ரெப்போ விகிதத்தைத் தொடர்ந்து MSF விகிதம் 6.75 சதவீதமும், SDF 6.25 சதவீத அளவீட்டையும் எவ்விதமான மாற்றமும் இல்லாமல் அறிவிக்கப்பட்டு உள்ளது. நாட்டின் விலைவாசி ஏற்படும் தடுமாற்றங்கள் குறைந்தால் மட்டுமே வட்டி விகிதத்தைக் குறைக்க முடியும் என தெரிவித்தார்.
மேலும் ஆர்பிஐ கவர்னர் சக்திகாந்த தாஸ் 2025 ஆம் நிதியாண்டில் இந்தியாவின் ஜிடிபி வளர்ச்சி 7 சதவீதமாக இருக்கும் என நாணய கொள்கை குழு கணித்துள்ளதாக அறிவித்துள்ளார். இதேபோல் நாட்டின் வெப்ப நிலை நாட்டின் வளர்ச்சியைப் பாதிக்கும் என்பதால் தொடர்ந்து கவனிக்கப்படும் என தெரிவித்தார்.
முதல் காலாண்டில் - 7.1% ஜிடிபி வளர்ச்சி (முந்தைய கணிப்பு 7.2%)
2ஆம் காலாண்டில் - 6.9% ஜிடிபி வளர்ச்சி (முந்தைய கணிப்பு 6.8%)
3ஆம் காலாண்டில் - 7% ஜிடிபி வளர்ச்சி (முந்தைய கணிப்பு 7%)
4வது காலாண்டில் - 7% ஜிடிபி வளர்ச்சி (முந்தைய கணிப்பு 6.9%)
நாட்டின் பணவீக்கம் லோவர் லிமிட் அளவீட்டைத் தொட்டும் வேளையில் அதிகப்படியான சவால்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என தெரிவித்தாக. மேலும் 2025 ஆம் நிதியாண்டுக்கான சில்லறை விலை பணவீக்கத்தை 4.5 சதவீதம் என்ற முந்தைய கணிப்பில் எவ்விதமான மாற்றமும் இல்லாமல் அறிவித்துள்ளது.
முதல் காலாண்டில் - 4.9% CPI பணவீக்கம் (முந்தைய கணிப்பு 5%)
2ஆம் காலாண்டில் - 3.8% CPI பணவீக்கம் (முந்தைய கணிப்பு 4%)
3ஆம் காலாண்டில் - 4.6% CPI பணவீக்கம் (முந்தைய கணிப்பு 4.6%)
4வது காலாண்டில் - 4.5% CPI பணவீக்கம் (முந்தைய கணிப்பு 4.7%)
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!



Click it and Unblock the Notifications