இந்திய ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் இன்று 2024 ஆம் நிதியாண்டுக்கான கடைசி இரு மாத நாணய கொள்கை கூட்டத்தின் முடிவுகளை வெளியிட்டார். நாணய கொள்கை குழுவில் 5:1 வாக்குகள் மூலம் ரெப்போ விகிதத்தில் எவ்விதமான மாற்றமில்லை என முடிவு செய்யப்பட்டதாகவும், இதன் மூலம் தற்போதைய 6.5 சதவீத வட்டி விகிதம் அடுத்த இரண்டு மாதங்களுக்கு தொடரும் என சக்திகாந்த தாஸ் தெரிவித்தார்.
ரெப்போ விகிதத்தில் எவ்விதமான மாற்றமும் இல்லாத காரணத்தால் வீட்டுக் கடன், வாகன கடன், வங்கி வைப்பு நிதி மீதான வட்டி விகிதம் ஆகியவற்றில் எவ்விதமான மாற்றமும் இருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியாவின் கோர் பணவீக்கம் 4 வருட சரிவை எட்டியுள்ளது. சர்வதேச அளவில் பல பிரச்சனைக்கு மத்தியிலும், சப்ளை செயின் பாதிப்பிலும் நாட்டின் பணவீக்கம் குறைந்து வருகிறது என ஆர்பிஐ கவர்னர் தெரிவித்தார்.
2025 ஆம் நிதியாண்டில் இந்தியாவின் ரியல் ஜிடிபி அளவு 7 சதவீதமாக இருக்கும் என ஆர்பிஐ கணித்துள்ளது. இதில் முதல் காலாண்டில் 7.2 சதவீதமாகவும், 2வது காலாண்டில் 6.8 சதவீதமாகவும், 3வது காலாண்டில் 7 சதவீதமாகவும், 4வது காலாண்டில் 6.9 சதவீதமாகவும் இருக்கும் எனத் தெரிவித்தார்.
ஆர்பிஐ இந்தியாவின் உள்நாட்டு வர்த்தகம் மிகவும் வலிமையாக இருப்பதாகத் தெரிவித்தார் ஆர்பிஐ கவர்னர் சக்திகாந்த தாஸ் தெரிவித்தார். 2024 ஆம் ஆண்டில் இருந்த வர்த்தக நகர்வு மற்றும் டிமாண்ட் 2025 ஆம் ஆண்டிலும் தொடரும் எனத் தெரிவித்தார்.
உலகில் பல நாடுகளில் கடன் அளவு அதிகரித்துள்ளது கவலை அளிக்கும் விஷயமாக உள்ளது, இது சர்வதேச நிதியியல் தளத்தைக் கட்டாயம் பாதிக்கும் எனவும் ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் தெரிவித்தார்.
ரிசர்வ் வங்கி வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கையின் படி இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பில் குறிப்பிடத்தக்க உயர்வு ஏற்பட்டுள்ளது எனத் தெரிவித்துள்ளது.
ஜனவரி 26 ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் இந்தியாவின் மொத்த அந்நியச் செலாவணி கையிருப்பு 616.73 பில்லியன் டாலர்களை எட்டியுள்ளது. கடந்த இரு வாரத்தில் அந்நியச் செலாவணி கையிருப்பு 591 மில்லியன் டாலர் உயர்ந்துள்ளது இந்த வாரம் 616.73 பில்லியன் டாலர் அளவீட்டை பதிவு செய்துள்ளது.
இது கடந்த வாரத்திற்கு முன்பு கையிருப்பில் 2.79 பில்லியன் டாலர் குறைந்தது. இதன் விளைவாக ஜனவரி 19, 2024 இல் முடிவடைந்த வாரத்தில் மொத்தம் $618.94 பில்லியன் டாலராக குறைந்தது.


Click it and Unblock the Notifications