இந்திய ரிசர்வ் வங்கியின் நாணயக் கொள்கைக் கூட்டம் ஆகஸ்ட் 8ஆம் தேதி துவங்கிய நிலையில் இன்று இக்கூட்டத்தின் முடிவுகளை வெளியிட்ட உள்ளார் ஆர்பிஐ கவர்னர் சக்திகாந்த தாஸ். ஆர்பிஐ இந்த கூட்டத்தில் பணவீக்கம், காய்கறி விலை உயர்வு, அமெரிக்கா, பிரிட்டன் வட்டி விகித உயர்வு என பல பிரச்சனைகளை சமாளிக்க வேண்டிய கட்டாயம் உள்ளது.
ஆர்பிஐ கடந்த வரும் மே மாதம் முதல் வங்கிகளுக்கான MCLR வட்டி விகிதத்தை நிர்ணயம் செய்ய உதவும் பென்ச்மார்க் வட்டி விகிதமான ரெப்போ விகிதத்தை உயர்த்தி வருகிறது. கடைசியாக பிப்ரவரி மாதம் ரெப்போ விகிதத்தை 6.25 சதவீதத்தில் இருந்து 6.5 சகவீதமாக உயர்த்தியது.

இதன் பின்பு நடந்த ஏப்ரல் மற்றும் ஜூன் கூட்டத்தில் ஆர்பிஐ தனது வட்டி விகிதத்தை உயர்த்தவில்லை. இந்த நிலையில் இன்று நடக்கும் கூட்டத்தில் ஆர்பிஐ தனது வட்டி விகிதத்தை உயர்த்துமா, குறைக்குமா என்ற எதிர்பார்ப்புக்கு மோர்கன் ஸ்டான்லி, உட்பட இந்தியாவில் பல அமைப்புகள், நிதியியல் வல்லுனர்கள் இன்று ஆர்பிஐ ரெப்போ விகிதத்தை மாற்றாமல் தொடர்ந்து 6.50 சதவீதமாக வைக்கும் என கணித்துள்ளனர்.
ஜூலை மாத கடைசி அமெரிக்க மத்திய வங்கி தனது வட்டி விகிதத்தை உயர்த்திய, அதை தொடர்ந்து ஆகஸ்ட் மாத துவக்கத்தில் பிரிட்டன் தனது ரெப்போ விகிதத்தை உயர்த்தியுள்ளது. இதனால் ஆர்பிஐ இக்கூட்டத்தில் ரெப்போ விகிதம் உயர்த்தும் என சில கணிப்புகள் இருந்தாலும், பெரும்பாலான கணிப்புகள் 6.50 சதவீத வட்டி விகிதத்தில் எவ்விதமான மாற்றமும் இருக்காது என கணித்துள்ளது.
ஆர்பிஐ இன்றைய கூட்டத்தில் ரெப்போ விகிதத்தை உயர்த்தினால் வீட்டுக் கடன், வாகன கடன், நகை கடன், பர்சனல் லோன் என அனைத்து கடனுக்கான வட்டி விகிதம் உயர்ந்து மக்கள் வாங்கிய கடனுக்கான ஈஎம்ஐ அதிகரிக்கும்.
ஆனால் ஆர்பிஐ கவர்னர் சக்திகாந்த தாஸ் இன்றைய கூட்டத்தில் ரெப்போ விகிதத்தில் மாற்றமில்லை, ரெப்போ விகிதம் 6.50 சதவீதம் தொடரும் என்ன அறிவித்துள்ளார். வங்கி கடனுக்கான வட்டி விகிதங்களில் மாற்றம் இருக்காது, இதனால் மக்கள் வாங்கிய கடனுக்கான ஈஎம்ஐ-யில் எவ்விதமான மாற்றமும் இருக்காது.


Click it and Unblock the Notifications