இந்தியாவில் அரசு சேவைகளை பெறுவதற்காக பல வியாபாரிகள் லஞ்சம் கொடுத்துள்ளதாக அதிர்ச்சியூட்டும் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. லோக்கல் சர்க்கில்ஸ் நடத்திய கணக்கெடுப்பில் 159 மாவட்டங்களில் உள்ள வணிக நிறுவனங்களில் சுமார் 66 சதவீதம் பேர் அரசு சார்ந்த சேவைகளை பெற லஞ்சம் கொடுத்துள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. வணிக நிறுவனங்கள் கடந்த 12 மாதங்களில் பல்வேறு வகையான அரசு சேவைகளை பெறவும் ஆர்டர்களை பாதுகாக்கவும் லஞ்சம் கொடுத்ததாக தெரிவித்துள்ளனர்.
கடந்த 12 மாதங்களில் மட்டும் வணிக நிறுவனங்கள் பல்வேறு வகையான அரசு நிறுவனங்களுக்கு சப்ளையர்களாக தகுதி பெறவும், ஆர்டர்களைப் பெறவும், லஞ்சம் கொடுத்ததாக கூறியுள்ளனர். PTI அறிக்கையின்படி இந்த கணக்கெடுப்பு மே 22-ஆம் தேதி முதல் நவம்பர் 30-ஆம் தேதி வரை நடத்தப்பட்டது.

மொத்தமாக வணிக நிறுவனங்களிடமிருந்து கொடுக்கப்பட்ட லஞ்சத்தில் 75 சதவீதம் அரசாங்க சட்ட அதிகாரிகள், மெட்ராலஜி டிபார்ட்மென்ட் அதிகாரிகள், மருந்து, சுகாதாரம், போன்ற அரசு துறைகளின் அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டதாக அறிக்கை தெரிவித்துள்ளது. அதேபோல ஜிஎஸ்டி அதிகாரிகள், மாசு கட்டுப்பாட்டு துறை அதிகாரிகள், மாநகராட்சி மற்றும் மின்சார துறை அதிகாரிகளுக்கும் லஞ்சம் கொடுத்ததாக பலர் புகார் அளித்துள்ளனர்.
இந்த கணக்கெடுப்பிற்காக 18,000-த்திற்கும் மேற்பட்ட வியாபாரிகளிடமிருந்து பதில்கள் பெறப்பட்டன. 54 சதவீதம் பேர் தாங்கள் லஞ்சம் கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்ததாக தெரிவித்தனர். அதே நேரம் 46 சதவீதம் பேர் அதிகாரப்பூர்வ செயல்முறையை விரிவுபடுத்துவதற்கு தாமாகவே முன்வந்து லஞ்சம் கொடுத்ததாக கூறியுள்ளனர்.
அரசாங்க அதிகாரிகளிடமிருந்து செயல்முறையை விரிவுபடுத்துவதற்காக கடந்த 12 மாதங்களில் 66% வணிக நிறுவனங்கள் லஞ்சம் கொடுத்ததாக ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் 16 சதவீதம் பேர் எந்தவித லஞ்சமும் கொடுக்காமல் தங்கள் வேலையை முடித்துள்ளதாகவும், 19 சதவீதம் பேர் லஞ்சம் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை என்றும் தெரிவித்துள்ளனர்.
கடந்த 12 மாதங்களில் லஞ்சம் கொடுத்த வணிகங்களில் 54 சதவீதம் பேர் கட்டாயத்தின் அடிப்படையில் இதை செய்துள்ளனர். அதே நேரம் 46 சதவீதம் பேர் சரியான நேரத்தில் செயல்முறையை முடிப்பதற்காக பணம் செலுத்தியுள்ளனர்.
எங்கும் எங்கும் டிஜிட்டல் எதிலும் டிஜிட்டல் என்று இந்தியா பயணித்துக் கொண்டிருக்கையில் பல்வேறு அரசாங்க அலுவலகங்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. ஊழல் நடவடிக்கையை தடுக்கும் பொருட்டு இது போன்ற முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டாலும், கேமராக்கள் இல்லாத இடங்களில் லஞ்சம் பெறப்பட்டுள்ளதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் கடந்த 12 மாதங்களில் லஞ்சத்திற்காக செய்யப்பட்ட பரிவர்த்தனைகளின் எண்ணிக்கையும், லஞ்சத்தின் மொத்த மதிப்பும் குறைந்துள்ளதாகவும் கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது.
More From GoodReturns

மேற்கு ஆசிய போர் நெருக்கடி: இந்திய அரிசி, எரிசக்தி, ரத்தினங்கள் என 15 துறைகளுக்கு எச்சரிக்கை?

ஈரான் போரை விடுங்க.. இந்திய -அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் என்ன ஆச்சு? அமெரிக்க அரசு பதில்

இந்திய ஐடி பங்குகளை கைக்கழுவும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்!! எல்லாம் ஏஐ செய்யும் வேலை!!

பங்குச்சந்தை சரிவிலும் ஏற்றம் கண்ட ரயில்வே துறை பங்குகள்: இப்போது முதலீடு செய்யலாமா?

பட்ஜெட் மாசத்துல மத்திய அரசுக்கு பணமழை: 8% உயர்ந்த ஜிஎஸ்டி வருவாய்!!

துபாய் எடுத்த முடிவிலால் இந்தியாவுக்கு புது பிரச்சனை..!!

தங்கம், வெள்ளி: ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை "எஸ்கேப் ஆகிடுங்க".. மீண்டும் அடிபட்டு அழ வேண்டாம்..!

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!



Click it and Unblock the Notifications