இந்திய மக்களைப் பற்றிய ஒரு அதிர்ச்சியூட்டும் தகவல் வெளியாகியுள்ளது. 140 கோடிக்கும் அதிகமான மக்கள் வகிக்கும் இந்தியாவில் தாங்கள் விருப்பப்பட்ட பொருட்கள் மற்றும் சேவைகளைப் பெறுவதற்கு கூட 100 கோடி மக்களுக்கு வருமானம் இல்லை என்று ப்ளூம் வென்ச்சர்ஸ் நடத்திய ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விகிதம் கிட்டத்தட்ட மக்கள் தொகையில் 90 சதவீதம். இந்தியாவில் உள்ள பெரும்பாலானோர் தங்கள் விருப்பத்திற்கு செலவு செய்ய முடியாதவர்களாக உள்ளனர்.
இந்திய நுகர்வோர் சந்தையில் வெறும் 13 முதல் 14 கோடி மக்கள் மட்டுமே தங்கள் அடிப்படை தேவைகளுக்கு மேல் அதிகமாக செலவு செய்யக் கூடிய அளவுக்கு பணம் வைத்தவர்களாக உள்ளனர். இவர்களை மையமாக வைத்து தான் இந்தியாவிலுள்ள பெரும்பாலான ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் மற்றும் நுகர்வோர் சார்ந்த வணிகங்கள் செயல்படுகின்றன.

அறிக்கையில் 30 கோடி பேர் தங்கள் விருப்பத்திற்கு பொருட்களை வாங்க ஆர்வம் கொண்ட நுகர்வோராக வகைப்படுத்தப்பட்டுள்ளனர். டிஜிட்டல் கட்டண முறையின் வசதியால், இந்த 30 கோடி மக்கள் செலவு செய்ய தொடங்கியுள்ளனர். ஆனால் அவர்களும் எச்சரிக்கையாகவே செலவு செய்வதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிக எதிர்பார்ப்பு கொண்ட நுகர்வோர் என்ற ஒரு பிரிவும் உள்ளது. இதில் உள்ள நுகர்வோர் பொருட்கள் மற்றும் சேவைகளை பயன்படுத்த ஆசைப்படுகின்றனர். ஆனால் பணம் செலுத்துவதில் தயக்கம் காட்டுகின்றனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. முக்கியமாக OTT, கேமிங், எட்டெக் போன்ற துறைகளை அதிகம் பயன்படுத்துகின்றனர். இந்த சேவைகளை பயன்படுத்தினாலும், பணம் செலுத்துவதில் தயக்கம் காட்டுவதாக அறிக்கை கூறுகிறது.
இந்திய நுகர்வோர் சந்தையை பொருத்தவரையில் பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்து வருகிறது. தங்கள் விருப்பத்திற்கு செலவிடக்கூடிய செல்வம் ஒரு சிலரிடம் மட்டுமே குவிந்து வருகிறது. அதற்கு ஏற்ப பல நிறுவனங்கள் பிரிமியம் மயமாக்கல் என்ற பெயரில் பணக்கார நுகர்வோருக்காகவே வடிவமைக்கப்பட்ட விலை உயர்ந்த பொருட்களை விற்பனை செய்ய தொடங்கிவிட்டன.
இந்த போக்கை வீடுகள், ப்ரீமியம் ஸ்மார்ட் ஃபோன்கள் ஆகியவற்றின் விற்பனை அதிகரிப்பை வைத்து நாமே தெரிந்துகொள்ள முடியும். இந்தியாவின் பொருளாதார ஏற்றத்தாழ்வு அதிகரித்து வருவதையும் செல்வம், ஒரு சிலரிடம் மட்டுமே குவிந்து வருவதையும் அறிக்கை தெள்ளத்தெளிவாக சுட்டிக்காட்டி உள்ளது.
அதோடு வெளியான புள்ளி விவரங்களின்படி இந்தியப் பணக்காரர்களுக்கும் ஏழைகளுக்கும் இடையிலான வருமான வித்தியாசம் எவ்வளவு அதிகமாக உள்ளது என்பதும் தெரியவந்துள்ளது. 1990-ஆம் ஆண்டுகளில் இந்தியாவில் முதல் 10% பணக்காரர்கள் நாட்டின் மொத்த வருமானத்தில் 34 சதவீதத்தை மட்டுமே வைத்திருந்தனர். ஆனால் இப்போது இந்த விகிதம் 57.7 சதவீதமாக அதிகரித்துள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் பணக்காரர்களின் வருமானம் வேகமாக வளர்ந்துள்ளது.
இந்தியாவில் வருமான ஏற்றத்தாழ்வு வளர்ந்து வருவது கவலை அளிக்கும் விஷயமாக உள்ளது. சிலரிடமே செல்வம் குவிந்து வருவதால் மற்றவர்கள் சிரமப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. சமமான வாய்ப்புகள் உருவானால் நிலையான பொருளாதார வளர்ச்சி ஏற்படும்.
More From GoodReturns

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!



Click it and Unblock the Notifications