இந்தியாவின் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச் சாவடிகளில் (Toll Plaza) காணப்படும் கழிவறைகளின் சுகாதாரத் தரத்தை மேம்படுத்தும் விதமாக, இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் ஒரு முன்னோடித் திட்டத்தை கையில் எடுத்துள்ளது.
நெடுஞ்சாலைகளைப் பயன்படுத்தும் பயணிகளை தூய்மை பணிகளில் ஈடுபட ஊக்குவிக்கும் வகையில், சுகாதாரமற்ற கழிவறைகள் குறித்த புகார்களை அளிப்பவர்களுக்கு ரூ.1,000 வெகுமதி வழங்கப்படும். இந்த ரூ.1,000 புகார் அளிப்பவரின் பாஸ்டேக் கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டம், நாடு முழுவதும் உள்ள அனைத்து தேசிய நெடுஞ்சாலைகளிலும் அக்டோபர் 31ஆம் தேதி வரை நடைமுறையில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரூ.1,000 வெகுமதியை பெறுவது எப்படி..?: சுங்கச்சாவடிகள் வழியாக செல்லும் பயணிகளுக்கு ரூ.1,000 வெகுமதியைப் பெறுவதற்கான செயல்முறை மிகவும் எளிமையானது. முதலில் 'ராஜ்மார்க்யாத்ரா' (Rajmargyatra) என்ற செயலியின் புதிய பதிப்பைப் பதிவிறக்கம் செய்ய வேண்டும்.
பின்னர், தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தின் அதிகார வரம்புக்கு உட்பட்ட சுங்கச் சாவடிகளில் உள்ள சுகாதாரமற்ற கழிவறைகளின் தெளிவான புகைப்படத்தை எடுக்க வேண்டும். அதில் நேரம் குறிப்பிட்டிருக்க வேண்டும்.
பின்ன பயனரின் பெயர், இடம், வாகனப் பதிவு எண் மற்றும் மொபைல் எண் உள்ளிட்ட விவரங்களை செயலி வழியாகச் சமர்ப்பிக்க வேண்டும்.
இந்தச் செயல்முறையைப் பின்பற்றிச் சுகாதாரமற்ற கழிவறைகளைப் புகாரளிக்கும் ஒவ்வொரு வாகனப் பதிவு எண் கணக்கிற்கும் ரூ.1,000 பாஸ்டேக் ரீசார்ஜ் வெகுமதியாக வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்த வெகுமதி பணமாக வழங்கப்படாது. மேலும், இதை மற்றவர்களுக்கும் மாற்றிக் கொள்ள முடியாது.
வெகுமதிக்கான விதிகள் : இந்தத் திட்டம் நேர்மையாகவும், திறமையாகவும் நடைபெற வேண்டுமென தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் தெரிவித்துள்ளது. இந்தத் திட்டம் NHAI ஆல் கட்டப்பட்ட, இயக்கப்படும் அல்லது பராமரிக்கப்படும் கழிவறைகளுக்கு மட்டுமே பொருந்தும். எரிபொருள் நிரப்பும் நிலையங்கள், தாபாக்கள் அல்லது பிற பொது வசதிகளில் உள்ள கழிவறைகள் இதில் சேராது.
திட்டம் நடைமுறையில் உள்ள மொத்தக் காலத்திலும், ஒவ்வொரு வாகனப் பதிவு எண்ணுக்கு ஒரே ஒரு முறை மட்டுமே வெகுமதி வழங்கப்படும். ஒரே நாளில் பல பயனர்கள் புகாரளித்தாலும், ஒவ்வொரு கழிவறை வசதிக்கும் ஒரு நாளைக்கு ஒரு முறை மட்டுமே வெகுமதி வழங்கப்படும்.
ஒரே கழிவறையைப் பல பயனர்கள் ஒரே நாளில் புகாரளித்தால், முதலில் சமர்ப்பிக்கப்பட்ட சரியான புகைப்படம் மட்டுமே வெகுமதிக்கு எடுத்துக் கொள்ளப்படும். சமர்ப்பிக்கப்படும் படங்கள் அசல் படங்களாக இருக்க வேண்டும். செயலி வழியாகவே அவை எடுக்கப்பட வேண்டும். மாற்றியமைக்கப்பட்ட, நகல் எடுக்கப்பட்ட அல்லது இதற்கு முன் புகாரளிக்கப்பட்ட படங்கள் நிராகரிக்கப்படும்.
செயற்கை நுண்ணறிவு : பயனர்கள் சமர்ப்பிக்கும் புகார்களை சரிபார்க்கும் பணியில் செயற்கை நுண்ணறிவு (AI) பயன்படுத்தப்பட உள்ளது. ஏஐ தொழில்நுட்பம் மூலம் சரிபார்க்கப்பட்ட பின்னர், தேவைப்பட்டால் மனிதர்கள் மூலம் ஆய்வு செய்யப்பட்டு உறுதி செய்யப்படும். இந்த இரண்டு அடுக்கு சோதனை முறை மூலம், வெகுமதி வழங்குவதில் வெளிப்படைத்தன்மை உறுதி செய்யப்படுகிறது.
தேசிய நெடுஞ்சாலைகளில் தொழில்நுட்பம், மக்கள் பங்கேற்பு மற்றும் பொறுப்பு ஆகியவற்றை இணைக்கும் முதல் முயற்சி இதுவாகும். பயணிகளின் பங்களிப்புடன், நாடு முழுவதும் உள்ள சுங்கச் சாவடி வசதிகளின் சுகாதாரத் தரத்தை இந்தத் திட்டம் நிச்சயமாக உயர்த்தும் என்று NHAI நம்புகிறது. எனவே, இதனை வாகன ஓட்டிகள் சரியான முறையில் பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!



Click it and Unblock the Notifications