இலவச ChatGPT-க்கு ஆப்பு..? அதிக லாபத்திற்காக உரையாடல்களுக்கு இடையே விளம்பரங்களை திணிக்க முடிவு..!!

உலகெங்கிலும் கோடிக்கணக்கானோரால் பயன்படுத்தப்படும் அதிநவீன ஏஐ (AI) உதவியாளரான ChatGPT-யில் விரைவில் விளம்பரங்கள் அறிமுகப்படுத்தப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்த தொழில்சார் அறிக்கைகளும், தொழில்நுட்பக் குறியீடுகள் குறித்த விவரங்களும் வெளியாகி, பயனர்கள் மத்தியில் ஒருவிதமான கேள்வியை எழுப்பியுள்ளது.

OpenAI நிறுவனம், தனது மிகவும் பிரபலமான இந்த மென்பொருளைப் பயன்படுத்தி மேலும் அதிக வருவாய் ஈட்டுவதற்காக, விளம்பரங்களை சேர்க்கத் திட்டமிட்டு வருவதாக சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இது இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை என்றாலும், ஒரு சோதனைப் பதிப்பில் (Beta App Build) கிடைத்த குறியீட்டுத் தகவல்கள், இந்த நகர்வுக்கான முதல் சமிக்ஞையாக கருதப்படுகிறது.

இலவச ChatGPT-க்கு ஆப்பு..? அதிக லாபத்திற்காக உரையாடல்களுக்கு இடையே விளம்பரங்களை திணிக்க முடிவு..!!

தகவல் பாதுகாப்பு செய்திகளை வெளியிடும் 'Bleeping Computer' என்ற இணையதளம், ChatGPT-யின் ஆண்ட்ராய்டு செயலியின் சமீபத்திய சோதனைப் பதிப்பில் (Version 1.2025.329), விளம்பரங்களுக்கான கட்டமைப்பைக் குறிக்கும் சில வார்த்தைகளைக் கண்டுபிடித்தது.

அந்தக் குறியீடுகளில் "search ad" (தேடல் விளம்பரம்), "search ads carousel" (தேடல் விளம்பரத் தொகுப்பு), மற்றும் "bazaar content" (சந்தைப்படுத்தப்படும் உள்ளடக்கம்) போன்ற சொற்கள் குறிப்பிடப்பட்டிருந்தன. இந்த வார்த்தைகள், பயனர்கள் ChatGPT-யுடன் பேசிக்கொண்டிருக்கும்போது, அவர்களுக்கு விளம்பரதாரர்களின் தயாரிப்புகள் அல்லது சேவைகள் பற்றிய பரிந்துரைகளை அல்லது ஸ்பான்சர் செய்யப்பட்ட உள்ளடக்கத்தை காண்பிப்பதற்கான வழிமுறைகளை OpenAI உருவாக்கி வருவதை உறுதிப்படுத்துகின்றன.

இதற்கு வலு சேர்க்கும் விதமாக, 'FindArticles' என்ற நிறுவனமும் இதேபோன்ற முடிவுகளை வெளியிட்டுள்ளது. இந்தச் சோதனைகள், பொதுவான உரையாடல்களை விட, ஒரு குறிப்பிட்ட தகவலைத் தேடி கேட்கும் கேள்விகளுக்கான பதில்களில் விளம்பரங்களைக் காட்டுவதற்கு முக்கியத்துவம் கொடுக்கப்படலாம் என்று அந்த அறிக்கை குறிப்பிடுகிறது.

விளம்பரங்கள் ஏன்..?: OpenAI நிறுவனம் தனது ஏஐ மாடல்களை இயக்குவதற்கு ஏற்படும் அதிகப்படியான கணினி செலவுகளை சமாளிக்கவே இந்தப் புதிய வருவாய் வழிகளை ஆராய்ந்து வருவதாகக் கூறப்படுகிறது. தற்போது இலவசம் மற்றும் கட்டணச் சந்தாக்களை வழங்கும் இந்நிறுவனம், விளம்பரங்கள் மூலம் வருமானத்தின் மூன்றாவது தூணை உருவாக்க நினைக்கலாம்.

இதுகுறித்து OpenAI தலைமை நிர்வாக அதிகாரி சாம் ஆல்ட்மேன் பேசியதாகவும், விளம்பரங்கள் எப்போதாவது முயற்சி செய்யக்கூடிய ஒன்று என்று அவர் ஒப்புக்கொண்டதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. அதே சமயம், அவர் ஒரு முக்கியமான எச்சரிக்கையையும் விடுத்துள்ளார்.

ChatGPT-யின் வெற்றிக்கு காரணம், பயனர்கள் அதன் ஆலோசனைகளை நம்புவதுதான் என்றும், பணம் வாங்குவதால், ஒரு நல்ல ஆலோசனையை கொடுக்காமல், மோசமான ஒன்றைப் பரிந்துரைத்தால், பயனர்களின் நம்பிக்கை முற்றிலுமாக சிதைந்துவிடும் என்று அவர் கவலை தெரிவித்துள்ளார்.

மேலும், விளம்பரங்கள் சார்ந்த பொறியியல் பணிகளுக்கு OpenAI ஆட்களைத் தேர்வு செய்வது, இது வெறும் ஆரம்பக்கட்ட சிந்தனை அல்ல; ஒரு முறையான திட்டமிடல் என்பதை உணர்த்துகிறது.

விளம்பரங்கள் எப்படித் தெரியும்..?:செய்தி ஊடகங்களின் தகவல்படி, இந்த விளம்பரங்கள் வழக்கமான பேனர்களை போல இல்லாமல், சூழலுக்குப் பொருத்தமான பரிந்துரைகளாகவே தோன்றும் என்று தெரிகிறது. உதாரணமாக, நீங்கள் ஒரு பொருளை பற்றியோ அல்லது இரண்டு பொருட்களை ஒப்பிட்டோ கேட்டால், அதனுடன் தொடர்புடைய விளம்பரப் பரிந்துரைகள் வரலாம்.

பயனர்களுக்கு என்ன பாதிப்பு..?: விளம்பரங்கள் வந்தால், பயனர்களுக்கு ஏற்படும் மாற்றம் வெறும் காட்சி மாற்றமாக மட்டும் இருக்காது. நடுநிலையான ஆலோசனைகளை நம்பியிருக்கும் மக்களுக்கு, இனி ஏஐ கொடுக்கும் பதில்களில் வணிக நோக்கங்கள் கலந்திருக்க வாய்ப்புள்ளது. இதனால், ஒரு தயாரிப்பு அல்லது சேவையைப் பற்றிய அதன் பரிந்துரைகள் எவ்வளவு தூரம் உண்மையானவை என்று சந்தேகத்துடன் பார்க்க வேண்டிய நிலை வரலாம்.

குறிப்பாக, ஆராய்ச்சி, கல்வி மற்றும் பத்திரிகை போன்ற துறைகளில் இருப்பவர்களுக்கு, ஏஐயின் பதில்களில் கூடுதல் பரிசோதனை தேவை ஏற்படலாம். விளம்பரங்கள் பொதுவாக தரவு கண்காணிப்பை உள்ளடக்கியிருப்பதால், தனிப்பயனாக்கப்பட்ட உரையாடல் வரலாற்றை விளம்பரங்களுக்குப் பயன்படுத்தினால், தனியுரிமை மற்றும் பயனர் பாதுகாப்பு ஆகியவை எதிர்காலத்தில் பெரிய விவாதப் பொருளாக மாறும்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+