மும்பை: ஜெர்மனி நாட்டை சேர்ந்த அலையன்ஸ் (Allianz SE) நிறுவனம் பஜாஜ் குழுமத்துடனான ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறுவதாக அறிவித்துள்ள நிலையில் , கூடிய விரைவில் முகேஷ் அம்பானிக்கு சொந்தமான ஜியோ பைனான்சியல் சர்வீசஸ் நிறுவனத்தோடு இணைந்து செயல்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஜெர்மனி நாட்டை சேர்ந்த நிதி சேவை நிறுவனமான அலையன்ஸ் எஸ்ஈ இந்தியாவில் பஜாஜ் குழுமத்துடன் இணைந்து பஜாஜ் அலையன்ஸ் ஜெனரல் இன்சூரன்ஸ் (Bajaj Allianz general insurance ) மற்றும் பஜாஜ் அலையன்ஸ் லைஃப் இன்சூரன்ஸ் ((Bajaj Allianz Life insurance ))என்ற கூட்டு நிறுவனங்களை ஏற்படுத்தி காப்பீட்டு துறையில் கால்பதித்தது. கிட்டதட்ட 24 ஆண்டு காலமாக கூட்டு நிறுவனமாக செயல்பட்டு வந்த நிலையில் திடீரென அலையன்ஸ் நிறுவனம் பஜாஜ் குழுமத்துடனான தங்களுடைய ஒப்பந்தத்தை முடித்துக் கொள்வதாகவும் இந்த கூட்டு நிறுவனத்தில் தங்களுக்கு இருக்கக்கூடிய 26 சதவீத பங்குகளை விற்பனை செய்வதாகவும் அறிவிப்பு வெளியிட்டது.

பஜாஜ் உடனான ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறக்கூடிய அலையன்ஸ் நிறுவனம் இந்தியாவில் வளர்ச்சி அடைந்து வர கூடிய முகேஷ் அம்பானிக்கு சொந்தமான ஜியோ பைனான்சியல் சர்வீசஸ் (Jio Financial Services) நிறுவனத்தோடு இணைந்து செயல்படுவதற்கு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது தொடர்பாக இரு நிறுவனங்களுக்கும் இடையே அதிகாரிகள் மட்டத்திலான பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தெரிகிறது.
அலையன்ஸ் நிறுவனத்தை பொருத்தவரை தாங்கள் கூட்டு நிறுவனமாக இருக்கும் நிறுவனத்தில் தங்களுக்கு 50% பங்குகள் வேண்டும் என்றும் நிறுவன மேலாண்மையில் தங்களுக்கு 50 சதவீத உரிமம் வேண்டும் என்றும் கூறி வருகிறது. ஆனால் இதற்கு பஜாஜ் குழுமம் ஒப்புதல் தெரிவிக்கவில்லை.
தற்போது ஜியோ உடன் பேச்சுவார்த்தையை நடத்தி வரும் நிலையில் கூடிய விரைவில் இது தொடர்பாக இரு நிறுவனங்களுக்கும் இடையே ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டு ஒழுங்குமுறை அமைப்புகளிடம் ஒப்புதலுக்காக விண்ணப்பம் செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இந்தியாவைப் பொறுத்தவரை காப்பீட்டு துறை வேகமாக வளர்ந்து வரக்கூடிய ஒரு நாடாக இருக்கிறது.
இந்த நிலையில் தான் அலையன்ஸ் நிறுவனம் இந்திய சந்தையில் ஒரு முதலீட்டாளராக மட்டுமில்லாமல் செயல்பாட்டாளராக தங்கள் நிலையை மாற்ற வேண்டும் என முடிவு செய்துள்ளது. முன்னதாக 2023 ஆம் ஆண்டு ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஆண்டு பொதுக்குழு கூட்டத்தில் பேசிய முகேஷ் அம்பானி ஜியோ பைனான்சியல் சர்வீசஸ் நிறுவனம் கூடிய விரைவில் காப்பீட்டு துறையில் கால் பதிக்கும் என அறிவிப்பு வெளியிட்டு இருந்தார் .
தற்போது ஜியோ உடன் அலையன்ஸ் நிறுவனம் பேச்சுவார்த்தை நடத்தும் நிலையில் கூடிய விரைவில் நாம் ஜியோ நிறுவனத்திலிருந்து காப்பீட்டு சேவைகளை எதிர்பார்க்கலாம். தற்போதைக்கு ஜியோ நிறுவனம் ஜியோ இன்ஷூரன்ஸ் புரோக்கிங் லிமிடெட் என்ற பெயரில் இன்சூரன்ஸ் நிறுவனங்களையும் வாடிக்கையாளர்களையும் இணைக்கக்கூடிய ஒரு தரகு நிறுவனமாக செயல்படுகிறது. கூடிய விரைவில் இது இன்சூரன்ஸ் வழங்கக்கூடிய நிறுவனமாகவே செயல்பாட்டுக்கு வரும் என சொல்லப்படுகிறது.
More From GoodReturns

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!

ஈரான் - அமெரிக்கா போர்.. நடுவில் சிக்கிக்கொண்டு தவிக்கும் ஜப்பான்.. பெரும் சீரழிவின் ஆரம்ப புள்ளி இதுதானா..?



Click it and Unblock the Notifications