இந்தியா தனது 77வது குடியரசு தினத்தை இன்று கொண்டாடி வரும் நிலையில், வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் கனடா அரசின் முக்கிய தலைவர் உடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
இன்று காலையில் மத்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவின் படி கனடா வெளியுறவு அமைச்சர் அனிதா ஆனந்துடன் பேசியதாக அறிவித்தார். இந்த உரையாடல் இரு நாடுகளுக்கிடையேயான இருதரப்பு ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்து நடைபெற்றது. ஜெய்சங்கர் தனது எக்ஸ் பதிவில் இந்த பேச்சுவார்த்தையை "பயனுள்ள உரையாடல்" என்று குறிப்பிட்டுள்ளார்.

சமீபத்தில் கனடா சீனா உடன் வரலாற்று சிறப்புமிக்க ஒப்பந்தம் செய்ய திட்டமிட்டு இருநாட்டு தலைவர்களும் பேச்சுவார்த்தை நடத்த முடிவு செய்தனர். இந்த நிலையில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், இந்த ஒப்பந்தம் கையெழுத்தானால் கனடாவில் இருந்து அமெரிக்காவுக்கு வரும் பொருட்களுக்கு 100 சதவீதம் வரி விதிக்கப்படும் என தெரிவித்தார். இதேபோல் சீனா தனது பொருட்களை அமெரிக்காவுக்குள் கொண்டுவர கனடாவை பயன்படுத்த கூடாது என்றும் எச்சரித்தார்.
இந்த நிலையில் இந்தியா - கனடா நாட்டின் வெளியுறவு அமைச்சர்கள் குடியரசு தினத்தில் பேசியது மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. ஒருப்பக்கம் கனடா சீனாவுடன் வர்த்தக ஒப்பந்தம் செய்கிறது, ஐரோப்பா இந்தியாவுடன் வர்த்தக ஒப்பந்தம் செய்கிறது. இவை இரண்டும் மேற்கத்திய நாடுகள் காலம் காலமாக அமெரிக்காவை நம்பியிருக்கும் நிலையை மாற்றும் முயற்சியாக பொருளாதார சந்தையில் கருத்து நிலவுகிறது.
மேலும் எஸ்.ஜெய்சங்கர் மற்றும் கனடா வெளியுறவு அமைச்சர் அனிதா ஆனந்துடன் நடந்த பேச்சுவார்த்தையில் இரு அமைச்சர்களும் பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்து பேசியதாக தகவல் வெளியாகியுள்ளது. இதில் முக்கியமாக பொருளாதார கூட்டுறவு, செயற்கை நுண்ணறிவு (ஏஐ), வர்த்தகம் மற்றும் முதலீடு போன்ற முக்கிய பகுதிகளில் ஒத்துழைப்பை விரிவுபடுத்துவது குறித்து பேச்சுவார்த்தை நடந்திருக்கலாம்.
இதேவேளையில் கனடா நாட்டின் எரிசக்தி அமைச்சர் டிம் ஹாட்சன் ஜனவரி 27 முதல் 30 வரை இந்தியாவுக்கு பயணம் மேற்கொள்ள உள்ளார். கோவாவில் நடைபெறும் சர்வதேச எரிசக்தி மாநாட்டில் கலந்துகொள்வதுடன், இந்திய தொழில்துறை பிரதிநிதிகள் மற்றும் மத்திய அரசு அதிகாரிகளுடன் சந்திப்புகளை நடத்த உள்ளார். இந்த பயணம் இரு நாடுகளுக்கும் இடையேயான எரிசக்தி துறை ஒத்துழைப்பை வலுப்படுத்தும் முயற்சியாக அமைய உள்ளது.
மேலும் அமைச்சர் ஜெய்சங்கர் இன்று ஆஸ்திரேலிய வெளியுறவு அமைச்சர் பென்னி வோங்கிற்கும் ஆஸ்திரேலிய அரசு மற்றும் மக்களுக்கும் ஆஸ்திரேலிய தின வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
More From GoodReturns

ஈரான் போரை முடிவுக்கு கொண்டு வருவாரா பிரதமர் மோடி? ரம்ஜான் நாளில் தொடங்கிய முக்கிய பேச்சுவார்த்தை..!!

ஜியோ ஹாட் ஸ்டாரின் தலைமை அதிகாரியை தேடி வந்து பதவி கொடுத்த ஓபன் ஏஐ நிறுவனம்!!

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

ரேஷன் அட்டை வைத்திருப்பவர்களுக்கு முக்கிய அப்டேட்.. 3 மாதத்திற்கான பொருள் ஒரே நேரத்தில்.. மத்திய அரசின் முடிவு

ஆனந்த் ஸ்ரீனிவாசன்: படிச்சு படிச்சு சொன்னேன்.. யாரும் கேட்ல 'Big Drop'.. வெள்ளி அதோ கதி..!!

1986-ல் ஒரு புல்லட் இவ்வளவு தானா? வைரலாகும் பழைய பில்! அப்பவே கெத்து தான்!

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!



Click it and Unblock the Notifications